செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சூரிய காந்தி

நீ உதித்து
உலா செல்லும்
திசையெல்லாம்
உனைக் காண
முகம் திருப்பி
ஒயிலாகப்புன்னைகைத்து...

நான் மட்டும்
இரவெல்லாம்
தனித்திருந்து
விழித்திருந்து...

விடிந்ததும் தெரிந்தது
நீ ஆவலாய் ஓடிவந்து
அழுத கண்ணீர் என்மேல்
பனித்துளியாய்...

உணர்ந்து கொண்டேன்
எனைச் சுற்றும்
சூரியன் நீ...!!!

11 கருத்துகள்:

  1. // விடிந்ததும் தெரிந்தது
    நீ ஆவலாய் ஓடிவந்து
    அழுத கண்ணீர் என்மேல்
    பனித்துளியாய்... //

    ரொம்ப பிடித்து இருக்கு இந்த வரிகள்.

    பனித்துளி விழுவது என்பது இயற்கை... பிரிவில் அழுவது என்பதும் இயற்கை... இரண்டையும் முடிச்சு போட்ட அற்புதம்.. இதுவும் இயற்கையோ?

    பதிலளிநீக்கு
  2. இது புதிய இடுகையா.. அல்லது பழைய இடுகையா.. கவிதை நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. இது பழைய இடுகைதான் தமிழுதயம்

    ஓட்டுப் போடுவதற்காக தமிங்கிலிஷில் சப்மிட் செய்தேன்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)