ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

சரஸ்வதி வணக்கம்

பேரன்பிற்கினியவளே....
பெருமதிப்பிற்குரியவளே...
கனிவான சரஸ்வதியே...

ஆசிரியப்பெருந்தகையே...
என் இனிய சுசீலாம்மா....!!!
கம்பீரக் குரலழகி... !!!
உலகமெல்லாம் உன்
வீணை ஒலி...!!!

தலை நகரில் உறைந்துள்ள
எங்கள் தலைவியே...
ஏடும் எழுத்தாணியும் கொண்டு
இன்னும் நீயே எழுதுகின்றாய்...

உன்னிடம் கற்ற
நாங்களின்னும் மழலையர்தாம்...
நடைபயின்று வந்தவளை
நடனமாட வைத்து விட்டாய்....

கவி எழுதி வந்தவளை
தினம் படித்து ஊக்குவித்து
தவறுகளைத் தகவமைத்து
வடிவாக வடிவமைத்தாய்...

தமிழின் தாழ்
தளைப்பட்டவளே...
தமிழான தமிழே...
நின் தாள் சரணம்...

என் வலைப்பூவின்
முன்னோடி...
இன்றும் என் வழி காட்டி...

நீ என்னைக்
கண்டு பிடித்தது போலும்,
நான் உன்னைக்
கண்டடைந்தது போலும்,

தேடி வருவோர்
ஒவ்வொருவருக்கும்
கிடைக்கட்டும்... உன்
போன்ற கலைவாணி...!!!

நான் கொய்யும்
ஒவ்வொரு பூவும்
உன் பாதம் அர்ப்பணித்தேன்...
எழிலான என் அரசி..!!!

இந்த ஆசிரியர் தினத்தில்
மனம் நிறைய
வாழ்த்துகின்றேன்...
வாழ்க நீ தேவி
நூறாண்டு....!!!!!

2 கருத்துகள்:

  1. ஆசிரியர் தினத்தில் தமிழ் கற்பித்த ஆசிரியருக்கு அழகான கவிதையை சமர்ப்பணம் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். கூடவே அவரது புகைப்படத்தையோ அவருடைய வலைப்பூவிற்கான இணைப்பையோ கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. என் வழிகாட்டி சுசீலாம்மாவின் வலைத்தளம்
    சென்று படித்துப் பயன் பெறுவீர்.
    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
    http://www.masusila.blogspot.com

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)