புதன், 12 ஆகஸ்ட், 2009

ஆனந்த அலைகள்

காலையில் கைகளில்
தவழ்ந்த எதிர்த்த வீட்டுக்
குழந்தையின் வாசம்
குளித்தபின்னும் என் மேல்...

பஞ்சுப் பொதியாயும்,
ரோஜாக் கூட்டமாயும்,
தண்ணென்ற குளுமையுடன்
சுகந்தமான சுமையாய்...

பார்க்கத் திகட்டாத
பரவசக் கனவாய்...

ஞாபகம் தண்ணீருக்குள்
கிடக்கும் தாவரங்களைப்
போல் அலைந்தது....

கையில் அடித்துக்
கணக்கு சொல்லித் தந்த
என் மகன் இன்று
என் கையில் தட்டிக் கணினி
சொல்லித் தருகிறான். ..

குழந்தையாக இருந்த
அவன் ஆண்மகனாக
அவனிடம் கற்கும்
குழந்தையாக நான்.,,.

தட்டப்பட்ட கைகளிலே
குழந்தமையின் வாசம்...
தழும்புகளற்ற திகைப்பு
நெடுநேரம்....!

மகரந்தம் சூல் கொண்ட பூக்கள்
காய்களாகவும் கனிகளாகவும்
தாய்மையில் பூரிக்கும்...!

இருண்ட குகைக்குள்ளும்
ஒளி தழுவி வனப்பாக்கும்....!
சுனை பெருகி வளமை வரும்...!

வெம்மையும் குளுமையுமாய்
சூரியனும் சந்திரனும்...

பிரபஞ்சச் சுருளில்
கரை அணை என்ற
தடைகள் உடைத்து
ஆனந்த அலைகளில்
ஆன்மா. ...! அம்மாவாய்....!!

4 கருத்துகள்:

  1. ஆமாம் - அம்மா என்ற உணர்வு சும்மா வராது - மகனிடம் உள்ள பாசம் - கையைத்தட்டினாலும் சரி அடித்தாலும் சரி - பாசம் காட்டுவது நமது இயல்பு.
    மழலைச் செல்ல்வங்களைப் பற்றிய வர்ணனை
    - பஞ்சுப்பொதி - ரோஜாக்கூட்டம் - தண்னென்ற குளுமை - ஆகா ஆகா அருமை

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. சீனா ஸார் உங்க வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. //குழந்தையின் வாசம்
    குளித்தபின்னும் என் மேல்...//

    அடடா! அருமையான வாசம்

    பதிலளிநீக்கு
  4. நன்றி கதிர் உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)