வியாழன், 6 ஆகஸ்ட், 2009

பேரின்பப் பெட்டகமே

வாழ்நாள் முழுவதும்
வாழ்ந்து காதலிக்க
பெற்றோர் தேர்ந்தெடுத்த
பேரின்பப்பெட்டகமே!!!
பொறுமையின் திலகமே !!!

வேலையற்றவனின்
வீண்பொழுதாய் நானிருக்க
காலச் சக்கரத்தைக்
காலில் மாட்டி
பேச நேரமில்லாப்
பெருமகனே நீ வந்தாய் .

கண் எனும் குளத்துக்குள்
கண்களாலே கல் எறிந்தாய் ....
எண்ணச் சிதறல்களாய்
எவ்வளவு இன்ப அலைகள் ....

கண் எனும் தூண்டிலில்
கண்களே மீன்களாய் ....
நெஞ்செனும் மாடத்துள்
உட்புகுந்த தீபமாய் ...

பேரின்பப்பெருவாழ்வே !!!
நீயாக நானிருக்க,
நானாக நீயிருக்க,

நமக்கெதிரெ நாம் காண
நாம் போல நம்மிருவர் ...
நமக்குள்ளே ஏது பிரிவு?

மனம் பேச நினைப்பதெல்லாம்
உடல் உணர்வால்
மலர்ந்து விழ...

எண்ணங்களால் இணைந்து
வாழ்தலே காதலாம்
எனப் புரிந்த பேரிளம்
பிராயம் இது !!!

மாலை நேரப்பறவைகள்
சலசலத்து ஆனந்திக்கும்
ஆலமரம் போல்

அன்பெனும் கிளை பரப்பி ,
ஆதுரம் எனும் வேர் பதித்து ,
வம்சத்தை வழி நடத்தி ,

வந்தோரை அரவணைத்து ,
வாழ்வெனும் ஒளி சூட்டி,
வளமுடன் வாழ்க நமது காதல்!!!!!

2 கருத்துகள்:

  1. மண வாழ்வினை முழ்வதும் புரிந்து கொண்ட ஒரு பெண்ணின் மனதில் பிறந்த கவிதை - பேரிளம் பிராயத்தில் புரிதலுணர்வு வரும். வாழ்க்கை என்பது இதுதான் இப்படித்தான் பெற்றோர் தேர்ந்தெடுத்த பேரின்பப் பெட்டகம் - பொறுமையின் திலகம் - காலில் சக்கரத்தினைச் சுற்றியபடி அலையும் - பேச நேரமில்லாப் பெரும் பெட்டகம்.

    அனுபவம் பேசுகிறது - வாழ்க - நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. சீனா ஸார் உங்க வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)