திங்கள், 9 டிசம்பர், 2024

மிஞ்சி, மூக்குத்தி

 மிஞ்சி, மூக்குத்தி


பருவப் பெண்களுக்கு அழகுக்காகவும் திருமணம் முடிந்துவிட்டது என்பதைச் சொல்லவும் சில சமூகங்களில் மூக்கு குத்தும் பழக்கம் இருக்கிறது.

மூக்கு மற்றும் காது குத்துவதால் உடலில் இருக்கும் வேண்டாத வாயுக்கள் வெளியேறுமாம். நமது மூளையில் இருக்கும் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி மூக்குக் குத்துவதால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் மூளையும் நரம்பு மண்டலமும் சீராகச் செயல்படுகிறது. 

சளி, ஒற்றைத்தலைவலி, பார்வைக்கோளாறுகள் , நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஆகியன மூக்கு குத்தினால் சரியாவதாகச் சொல்கிறார்கள்.

அதே போல் மிஞ்சி எனப்படும் மெட்டி அணிவதும் திருமணமானதைக் குறிக்க மட்டுமல்ல அதை இரண்டாவது விரலில் அணிவதால் அது சிறுநீரகத்தையும் இதயத்தையும் உறுதியாக்குகிறது. மாதவிடாயைச் சீர் செய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சமன் படுத்துகிறது. ஒருவிதமான அக்யுபங்க்சர் ட்ரீட்மெண்ட். 

சிலர் இரண்டு வெள்ளி வளையங்களையும், சில சமூகத்தில் மூன்று வெள்ளி வளையங்களையும் அணிகிறார்கள். சிலர் ஃபேஷனுக்காக எனாமல் வைத்து டிசைன் செய்த மிஞ்சிகளைப் பாதத்தின் இரண்டாம் மூன்றாம் நான்காம் விரல்களிலும் அணிகிறார்கள்.  

வெள்ளிக்கு ஈர்க்கும் சக்தி இருப்பதால் பூமியில் இருந்து துருவ ஆற்றலை உறிஞ்சி உடலுக்குப் பெற்றுத் தருகிறது. எனவே பழமை என்று வெறுக்காமல் நம் புராதனப் பழக்கங்களான கோலம் போடுதல், வேஷ்டி அணிதல், ஆபரணங்கள் அணிவதால் நமக்கு நன்மையே விளையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)