புதன், 21 ஜூன், 2023

ஈஃபில் டவர்

ஒரு சாதாரண வானொலி ஒலிபரப்பி உலகப் புகழ் பெற முடியுமா ? பெற்றிருக்கிறதே. பிரான்ஸின் பாரிஸில் உள்ள இந்த ஈஃபில் டவர்தான் அந்தப் புகழுக்கு உரியது. 1930 வரை உலகின் மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது இது. 

யூ ரோப் டூரின் எட்டாம் நாள் மாலை நாங்கள் பாரீஸ் வந்தடைந்தோம். பொன்னிற வெய்யிலில் வெள்ளி நிறத்தில் தகதகத்து நின்றிருந்தது ஈஃபில் டவர். அதில் ஏறிப் பார்க்க 18 யூரோ கட்டணம் ஒரு நபருக்கு. 

ஸ்டார் ட்ராவல்ஸின் டூரில் முன்பே பணம் செலுத்தி விட்டதால் அங்கே போய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் க்யூவில் நின்று மேலே மின் தூக்கி மூலம் சென்று வந்தோம். முதல் தளம் வரையே போக முடிந்தது. இரண்டாம் தளத்திற்குச் செல்ல அன்று அனுமதி கிடைக்கவில்லை. எனவே அதற்கான பணத்தை ஸ்டார் ட்ராவல்ஸார் திருப்பி அளித்தார்கள். 

கொஞ்சம் வித்யாசமான அனுபவம்தான். ஏறும்வரை லிஃப்டில் - ஓடிஸ் கம்பெனியின் எலிவேட்டரில்  - விஞ்ச் போல் உள்ளது . இதில் அமர்ந்து  பின்புறமாக மேலேறிச் சென்றோம். 
பதினெட்டாம் நூற்றாண்டின் கட்டுமானங்களில் ஒன்று இந்த டவர். சொல்ல்போனால் ப்ரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதம் 1887 இல் கட்டப்பட்டு 1889 இல் திறப்பு விழா செய்யப்பட்டது. 

1792 படிகள் உள்ளன. இறங்கும்போது படிகளின் வழியே இறங்கினோம்.

மொத்தம் நான்கு தளங்கள். தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளத்தில் தான் வானொலி, தொலைக்காட்சிக்கான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 


1956 இல் இது ஒரு முறை தீ விபத்துக்கு உள்ளானதாம்.அதன் பின் 1959 இல் இருந்து இது தொலைக்காட்சி மற்றும் இரு வானொலிகளுக்கான அலைக் கோபுரமாகப் பயன்படுகின்றது. 

இதன் தரைத்தளம் எப்படி அமைக்கப்பட்டது என்பது பற்றியெல்லாம் மிக விரிவாக கூகுளில் பார்க்கலாம். இதன் ஒவ்வொரு பகுதியையும் வரைந்து அதை எப்படி இணைப்பது என்பதனையும் வரைந்து ப்ரான்ஸில் வெளியே உள்ள ஒரு தொழிற்சாலையில் ரெடிமேடாகச் செய்து கொண்டு வந்து அதன் பின் இணைத்தார்களாம். மாபெரும் உழைப்பு. முதலில் இது அமைய எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் பின்னர் வரவேற்றார்களாம், பின்னே ப்ரான்ஸின் பெருமையல்லவா இது. 
தரைத்தளத்தில் அஸ்திவாரத்தில் இருந்து இதை நான்கு பக்கமும் க்ராஸாக பேஸ்மெண்ட் கட்டி அதன் பின் அதில் இரும்புத்தளவாடங்களை இரும்பு ஆணிகள் கொண்டு பொருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 



ஆமா சொல்ல மறந்துட்டேனே இதை வடிவமைச்சவர் அலெக்ஸாண்டர் கஸ்டவ் ஈஃபில்.இது அமைந்திருக்கும் இடம் சாம்ப் டி மார்ஸ். 
ஒரு வழியா வந்தாச்சு. மேலே ஏறிப் பயத்தோடே நடந்து பார்த்தாச்சு. தரை எல்லாம் கண்ணாடியா வார்ப்பிரும்பான்னுகூடத் தெரியல. 
முதல் ஃப்ளோர் போறதுக்கே கண்ணைக் கட்டிடுச்சே.

இரண்டாம் ஃப்ளோரில் இதை வடிவமைச்ச கஸ்டவ் ஈஃபிலுக்கு ஒரு அபார்ட்மெண்டே இருக்காம். இதுக்குமேலே போய் எப்பிடி ஆண்டெனாவெல்லாம் இணைச்சாங்களோ!

முதல் தளத்திலும் கடைகள் இருந்தன. ஒரு காஃபி வாங்கி சாப்பிட்டோம். அதிகமில்லை ஜெண்டில்மேன் & உமன். ஆறு யூரோதான். அதாவது 480 /ரூ. கிட்டத்தட்ட 500 ரூ. 
தனியா ஒரு செல்ஃபி.. கோஸ்ட் இல்ல நாந்தான் :)



சுற்றிலும் ஸீன் நதி ஓட பசுமைப் புல்வெளிகள் அலங்கரிக்க உலகின் அதிசயங்களில் ஒன்றைக் கண்டு களித்து வந்தோம். ஆனா ஒண்ணுங்க. எல்லாமே பார்க்கும்வரைதான் பிரமிப்பு. அதன் பின் இதுதானா, இவ்வளவுதானா எனத் தோன்றும். இது எனக்கு மட்டும்தானா :) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)