புதன், 18 ஜூலை, 2018

தினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.

தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உள்ளார். அவருக்கு நன்றி.






இது வேலூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், ஈரோடு பதிப்புகளில் வெளியாகி உள்ளது. இவ்வாறு இந்நூலுக்கு புதுமுகம் அளித்த தினமலருக்கும் எடிட்டர் திரு. தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இந்நூல் காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஜூலை 14 ஆம் தேதி  வெளியிடப்பட்டது.

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியின் பேராசிரியர், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாகை திரு கண்ணதாசன் அவர்கள் வெளியிட காரைக்குடி பேர்ல் சங்கமம் ரோட்டரியின் தலைவர் திரு நாவுக்கரசு அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதற்குக் களம் அமைத்துத் தந்த ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பீட்டர் ராஜ் அவர்களுக்கும், ஆசிரியை திருமதி கோமதி ஜெயம் அவர்களுக்கும் நலந்தா செம்புலிங்கம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

காரைக்குடி ரோட்டரியின் பேர்ல் சங்கமத்தின் தலைவர் 25 பிரதிகளை வாங்கி மாணாக்கருக்குப் பரிசளித்தார். கண்ணதாசன் அவர்களுக்கும் நாவுக்கரசு அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

டிஸ்கவரி புத்தக நிலையத்தின் படி வெளியீடு மூலம் வெளிவந்துள்ள இக்கட்டுரைத் தொகுப்பு விலை ரூ. 50/-

8754507070 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம். கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது. 

5 கருத்துகள்:

  1. அருமை அக்கா...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. என்னதான் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றாலும் திரு. சக்தி அவர்களின் விமரிசனம் ஏமாற்றமளித்தது.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்தும் பாராட்டும் உரித்தாக.

    பதிலளிநீக்கு
  4. நன்றி கவிதைகள்

    நன்றி ஜிவி. புத்தகமே சிறியதுதான்.

    நன்றி டிடி சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி துளசி சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)