திங்கள், 27 நவம்பர், 2017

அழகப்பா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கவியரங்கம் கருத்தரங்கத்தில் பங்கேற்பு.






அழைப்பிதழ்.

முபின் சாதிகா அவர்கள் பக்கத்திலிருந்து இதை எடுத்து வெளியிடுகிறேன்.

அன்பும் மகிழ்ச்சியும் ஸாதிகா & நந்தன் சார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இந்திய-ஆசியான் எழுத்தாளர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது. இதில் கலைஞன் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.நந்தன் மாசிலாமணி அவர்களின் முயற்சியால் 38 கவிஞர்களுக்கு 38 நூல்கள் வெளியிடப்படவிருக்கின்றன. இந்த நூல்களைத் தொகுக்கவும் கவிஞர்களை நேர்காணல் செய்யவும் எனக்கு வாய்ப்பளித்த திரு.நந்தன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஒத்துழைப்பு நல்கிய 38 கவிஞர்களுக்கும் என் நன்றிகள். இதற்காக 3500 பக்க கவிதைகளைப் படித்து, 1000 பக்க நேர்காணல்களை வாசித்து 300 பக்கங்கள் எழுதி 38 நூல்களுக்கும் மெய்ப்பு பார்த்து தொடர் வேலையாகச் செய்யவேண்டியிருந்தது. நூல்கள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பலருக்கு அது துன்பத்தைக் கொடுத்திருப்பது போல் தெரிகிறது. பெண் படைப்பாளர்களுக்கு எனத் தனியாக ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்று கருதி அவர்களில் ஓரளவு அதிகம் அறியப்படாதவர்களும் இருக்கவேண்டும் என்று பார்த்து தேர்ந்தெடுக்க வைத்து அங்கீகாரம் தர எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. எல்லோருடைய நூல் வந்தாலும் சிலரால் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை. வரப் போகவும் தங்கவும் கலைஞன் பதிப்பகமே ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மலேஷிய பல்கலைக்கழகமும் அழகப்பா பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்றன. காரைக்குடியில் 27, 28 தேதிகளில் காலை 10.30லிருந்து மாலை 5.30 வரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். இடம்:காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்.
காரைக்குடி பல்கலைக்கழகத்தில் நடக்கும் இரு நாள் பன்னாட்டு கவியரங்கம் கருத்தரங்கம் நிகழ்வில் வெளியிடப்பட இருக்கும் 38 நூல்களில், 'தேனம்மை லக்ஷ்மணன் படைப்புலகம்' நேர்காணலும் ஆக்கமும் என்னும் என்னுடைய நூலையும் வெளியிடுகிறார்கள். பல்வேறு தலைப்புகளில் நூறு கேள்விகள் கேட்டு அதற்கு நான் அளித்த பதில்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. கவிதை வாசிப்பு நிகழ்விலும் பங்கேற்கிறேன்.

எனது ஒரு கவிதை மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, இந்த நிகழ்வின் சிறப்பிதழில் இடம்பெற உள்ளது.

பரந்த கவியுலகில் இவ்விதமாய் நானும் இணைவதை பெரிதும் உவகையுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

3 கருத்துகள்:

  1. வாவ்! மலாய் மொழியில் உங்கள் கவிதை மொழிபெயர்க்கப்பட்டு நூலில் இடம் பெறுவதற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் சகோ/தேனு!! மேலும் மேலும் நீங்கள் பல சிகரங்களை அடையவும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. கவிதை மொழிபெயர்ப்பு, நூல் வெளியீடு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி துளசி சகோ

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)