சனி, 1 ஜூலை, 2017

பாங்க் ஆஃப் மதுரா :-



பாங்க் ஆஃப் மதுரா :-

1943 இல் கருமுத்து தியாகராஜன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வங்கி இது. 2 மில்லியன் கஸ்டமர்கள், 200 க்கும் மேற்பட்ட ப்ராஞ்சுகள், 40 ஏடிஎம்கள் கொண்டு இந்தியா முழுமையும் இயங்கி வந்த வங்கி இது.
2001 இல் பாங்கிங் ரெகுலேஷன் ஆக்ட் 44 A யின் படி ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டது. 

வெளியே அனுப்பமாட்டோம் என்ற உறுதியுடன் கையகப்படுத்தப்பட்ட இதிலிருந்து பலர் 2002 வாக்கில் கட்டாய வி ஆர் எஸ்ஸில் வெளியேற்றப்பட்டார்கள். இந்நிகழ்வு நிறையக் குடும்பங்களைப் புரட்டிப் போட்டது. அது ஒரு ரத்த சரித்திரம் அல்லது ரத்தக் கண்ணீர் எனலாம்.

அந்த வங்கியில் அம்மாவின் பெயரால் ஒரு கணக்கு இருந்தது. ஏன் அதில்தான் என் தந்தை காசாளராகவும் மேலாளராகவும் பணிபுரிந்து அதன் பின் ஐசிஐசியிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.


என் கணவரும் அதில்தான் பணிபுரிந்தார். 35 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தைப் போஷித்தது அவ்வங்கி என்றால் மிகையில்லை. மேலும் 1972 வாகில் கிருஷ்ணன் என்ற சேர்மன் பள்ளிப்படிப்பு முடித்த நிறையப் பெண்களுக்கு வங்கிப் பணி வழங்கியதால் நிறையக் குடும்பங்களில் பெண் திருமணம் எளிதானது. நிறையக் குடும்பங்களை வாழவைத்தது அவரின் அற்புத உதவி. 



ஆனால் இன்று அந்த நீலமும் வெள்ளையும் தாங்கிய எளிமையான வங்கியின் போர்டுகள் அழிந்து ஒழிந்தே போய்விட்டன. இன்று வங்கிகள் பெரும்பணத்தை சேவிங்ஸ் அக்கவுண்டில் வைப்பில் வைக்கச் சொல்லுகின்றன. இன்றும் எனக்குக் கேவிபி ( KARUR VYSYA BANK ) போன்ற
மக்கள் சேவையில் சிறந்த எளிமையான அழகான அருமையான வங்கிகளைப் பார்க்கும்போது மதுரை வங்கியில் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

நிறைய நினைவுகள் நிகழ்வுகள், நடப்புகள் மதுரை வங்கியோடும் எங்கள் வாழ்வியலோடும் ஒன்றி இருந்தன 

என் தந்தை பணிபுரிந்த எங்களைச் சிறப்பாக வளர்க்க உதவிய மதுரை வங்கிக்கு என்னாலான அன்பும் நன்றி அறிவிப்பும் இதுதான். 

2 கருத்துகள்:

  1. //இன்றும் எனக்குக் கேவிபி ( KARUR VYSYA BANK ) போன்ற மக்கள் சேவையில் சிறந்த எளிமையான அழகான அருமையான வங்கிகளைப் பார்க்கும்போது மதுரை வங்கியில் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.//

    மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். நம் வாழ்க்கையோடு பிண்ணி பிணைந்து போன சிலவற்றை நம்மால் என்றுமே மறக்க முடியாதுதான். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. NANDRI VGK SIR


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)