திங்கள், 4 ஏப்ரல், 2016

கோகுலத்தில் குழந்தைப் பாடல்கள் . வயல் கம்பளம்.

3.வயல் கம்பளம். :-


மேகப்பஞ்சு அவிழுது

மழை நூலை உதிர்க்குது

நீர்ப்புடவை நெய்யுது

மின்னல் சரிகை சேர்க்குது.


இடியும் தறிபோல் இடிக்குது

இருண்ட மேகம் சூழுது.

சூரியன் எட்டிப் பார்க்குது

வானவில் வண்ணம் அடிக்குது.


வானம் வெளுத்துப் போனது

வயலே கம்பளம் ஆனது

நெய்து முடித்த களிப்பிலே

நிம்மதி கொண்டது மேகமே. 



டிஸ்கி :- தேனாஞ்சி என்ற புனை பெயரில் 2016 ஏப்ரல் மாத கோகுலத்தில் வெளியானது.  கோகுலத்துக்கு நன்றி. !

பரிட்சை ஒண்ணும் பூதம் இல்லை என்ற கவிதைக்கு வாசகர் கடிதம். !. நன்றி தேஜஸ்வி & கோகுலம்.  


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)