திங்கள், 12 ஜனவரி, 2015

”ங்கா” பற்றி திரு நல்ல தம்பி அவர்கள்.



மதிப்பிற்குரிய தேனம்மை அவர்களுக்கு,
வணக்கம்.
எனக்கு விமர்சிக்கும் திறமை, அதை கோர்வையாய் வார்த்தைகளால் வடிக்கும் வலிமை கிடையாது. இது நான் உங்கள் “ங்கா....” படிக்கும்போது என்னுள் ஏற்பட்ட உணர்வுகள், அதை உங்களுக்கு தெரிவிக்கும் முயற்சி,
அவ்வளவே.


குழந்தைகள் ஆராதிக்க வேண்டியவர்கள்தான். நீங்களோ உங்கள் ஆராதனாவை மிக அழகாவே ஆராதிருத்திருக்கிறீர்கள். எத்தனை தவம்..
என்று ஆரம்பித்து , முத்துப் புன்னகையை பார்வையில் கோர்த்து .....
வீடே வானவில்லாக ......இதழ் இதழாய் சிந்துகிறது உன் புன்னகை...
எச்சிலிட்ட முத்தம் ...என்னே வரிகள் ...தமிழே அழகு, இந்தக் கவிதைகளில்  நீங்கள் வார்த்தைகளை கோர்த்திருக்கும் விதம்
தமிழின் அழகை இன்னும் அதிகரித்திருக்கிறது. 
சாமனைத் தேடி ஜலதரங்கம் .... கூசும் காதுகளோடு கேட்டு ரசிக்கவும்
தனி மனம் வேண்டும். லட்டு பிடிக்கும்.... கன்னம் , பூப்பாதம் பட்டு
சொக்கி சிவந்திருக்கிறது மண் .... பாதம் சிவந்ததை கேட்டிருக்கிறேன் ,
பாதம் பட்டு மண் சிவப்பது .... மிகவும் ரசிக்கத்தக்க கற்பனை.
அழகின்மேல் கண் படாமல் இருக்க திரிஷ்டிப்போட்டு, ஆனால் அதை
வைத்தவுடன் அழகு கூடுவதுதான் உண்மையும் கூட....வீட்டில் குழந்தைகளிருந்தால் சண்டை போட மனம் கொஞ்சம் பின்வாங்கும் ...
சம்பந்தி சண்டை ... பப்ளிமாஸ்... உணவுப்பொருளெல்லாம் உன் வடிவில்
இந்தக் கவிதை நினைவூட்டியது ஈரோடு தமிழன்பனின்
“மழை மொக்குக்களின்” –
“பேரன் உதடுகளால் தோற்றே உடைந்தபல
ஆரஞ் சுவனம் அழும்  என்னும் வரிகளை.

படிக்க நேரமில்லாத .....பதில் கிடைக்காத கேள்விகள் ...அர்த்தமுள்ள வரிகள். சுமக்க சுமக்க அலுக்காமல்.... .குழந்தைகளாய் இருக்கும் போது மட்டுமல்ல பெரியவர்களானலும் கூட என்றும் புரிந்துகொண்டதால் .கொஞ்சம் கலங்க வைத்தது  உண்மை. டீச்சர் விளையாட்டு......உன்னை
கற்கும்.. உண்மை, குழந்தைகளிடமிருந்து நாம் எவ்வளவு கற்றுக்கொள்கிறோம். விரல் பிடித்துக் கடிக்கிறாய்....வலியுடன்
ரசிக்கிறேன் ...நானும் என் பேரக் குழந்தைகள் மூலம் ரசித்த வலி(ரி)கள். குறும்புக்காய் அடி வாங்குவாய் .... ஆனால் உண்மையான வலி நமக்குத்தான் ...எவ்வளவு உணர்ந்து எழுதியிருப்பீர்.
எத்தனை விளம்பரங்கள்............உடைகள் ... நானோ கண்ணில் பட்ட  அத்தனை அழகான உடைகளையும் வாங்கி பேரக் குழந்தைகளுக்கு உடுத்தி அழகு பார்த்தவன்... என்னைப்போல் எல்லா தாத்தா பாட்டியும்
செய்திருக்கிறார்கள்... உங்களுக்கு சொல்லத்தெரிகிறது கவிதையாய்.

இப்படி நீங்கள் அனுபவித்த, ரசித்த ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்று விடாமல் கவிதையாக்கிவிட்டீர்கள். என் வருத்தமெல்லாம் மீதமுள்ள கவிஞர்கள் தங்கள் பேரன், பேத்திகளுடனான தங்கள் அனுபவத்தை எழுத விஷயத்திற்கு எங்கே போவார்கள் என்பதுதான்.

அழகான நிழற்படங்கள். சில இடங்களில் கவிதைக்கு பொருந்துகிறது.
உதாரணத்திற்கு உன் பூப்பாதம் பட்டு ...கவிதை இடத்தில் வண்டியிலிருந்து காலை கீழே வைக்க முயல்வது. அதே போல் பல இடங்களுக்கும் படங்களை தேர்தேடுத்திருக்கலாம். புத்தகத்தின் வடிவம், தரம் இதில்
கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பேரன் பேத்திகளைபற்றிய உணர்வுகளை வெளிப்படுத்தத்தெரியாத தாத்தா,பாட்டிகள் படிக்கவேண்டிய கவிதைத் தொகுப்பு.

பட்டதைச் சொல்லியிருக்கிறேன், முன் பின் ஏதாவது இருந்தால்
மன்னிக்கவும். மீதம் இரண்டு புத்தகம் முழுதாக படித்த பின்
எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள்-
நன்றி
நட்புடன்
நல்லதம்பி                                         14.02.2014

என் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு காளிமுத்து நல்லதம்பி அவர்கள் எழுதிய விமர்சனம் இது. மிக அருமையான விமர்சனத்துக்கு மிகவும் நன்றி சார். எதிர்பாராத இன்ப அதிர்ச்சி இந்த விமர்சனம். :)

--------------00000000000000---------------------

சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி மூன்றும் அகநாழிகையில் கிடைக்கும். 2015 சென்னை புத்தகத் திருவிழாவிலும் கிடைக்கும்.

”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.

By post aganazhigai@gmail.com

என் நூல்கள் கிடைக்குமிடம். :- 

Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)