சனி, 15 பிப்ரவரி, 2014

சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

சுபஸ்ரீ ஸ்ரீராம் துபாய் கோயில்


முகநூல் அன்புத் தங்கைகளில் ஒருவர் சுபஸ்ரீ ஸ்ரீராம். இவரின் கவர் பிக்சரில் போட்டு இருக்கும் கோலம் கண்கவரும் அழகு கொண்டது. அழகான காவி பார்டர் போடப்பட்டு தீபங்கள் வைக்கப்பட்டு ஒளிசிந்தும்.

இவரின் கைவண்ணத்தில் மின்னும் கோலம் பற்றியோ அல்லது துபாய் வாழ்க்கை பற்றியோ பகிரச் சொன்னேன். அவர் துபாயில் இருக்கும் கோயிலைப் பற்றிப் பகிர்ந்து இருக்கிறார்.ஆன்மீக ஒளி சிந்துகிறது பதிவில்.

 சுபா உங்கள்  துபாய் வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்///
///


அமீரகம்..ஏழு மாநிலங்களை கொண்டது. ஆங்கிலத்தில் யுனைட்டடு அராப் எமிரேட்ஸ் என்று அழைக்கப்படுகின்றது.(United Arab Emirates short
form U.A.E).Capital Abu Dhabi(7 states Abu Dhabi, Ajman, Dubai, Fujairah, Ras al-Khaimah, Sharjah,
Umm al-Quwain.)

முழுக்க முழுக்க அரபுமுஸ்லீம் மக்கள் வசிக்கும் நாடு. இங்கு பலதரப்பட்ட நாடுகளைச்சேர்ந்த மக்கள் இருக்காங்க.


பொதுவா நம்ம ஊருன்னா கோவில்கள் நிறைய இருக்கும்.. அதுபோல  இங்கு முஸ்லீம் மக்களின் மசூதிகள் (Mosque) நிறைய இருக்கு..

துபாய் ஏழு மாநிலத்தில் ஒரு மாநிலம்..நம்ம இந்தியாவைச்சேர்ந்த பலதரப்பட்ட இந்து,கிறிஸ்டியன்,முஸ்லீம் மக்கள் இங்கு வசிக்கிறாங்க.

இந்து மக்களுக்கு ஒரு கோவில் இருந்தா நல்லா இருக்கும்னு,இந்திய வட நாட்டைச்சேர்ந்த வாசு ஷெராஃப் நினைச்சாரு.இப்ப ஆட்சி செய்துகொண்டு இருக்கின்ற துபாயின் பிரதம மந்திரியும்,அமீரகத்தின் துணை ஜனாதிபதியுமான H.H.Sheik Mohammed bin Rashid Al Maktoum அவர்களின்
தந்தை(Late)H.H.Sheikh Rashid bin Saeed Al Maktoum அவர்களின் ஒப்புதலின் பேரில் 1952ல் ஏப்ரல் மாதம் 11ம் தேதி துபாய்ல திரு.வாசுஷெராஃப் (Vasu shroff)அவர்களால் சிவன் கோவில் (Shiva Temple) கட்டப்பட்டது. இன்றும் இவர்தான் இந்த கோவிலின் சேர்மன்..

இந்த கோவில் வடநாட்டு அமைப்புடன் இருக்கின்றது.(கோபுரம் கிடையாது). வடநாட்டுப் பாணியில்,பளிங்கினால் ஆன கடவுள்கள் இருக்கும்.

இதைத் தவிர பஞ்சாப் மக்கள் வழிபடுகின்ற குருத்வாரா சிவன் கோவிலின் இரண்டாவது தளத்தில் உள்ளது.இந்த குருத்வாரா 13ம் தேதி ஏப்ரல் மாதம் 1952ம் வருஷம் ப்ரதிஷ்டை செய்யப்பட்டது.பஞ்சாபிகள் மட்டுமல்லாது எல்லாவிதமான பக்தர்களும் இங்கும் வந்து ப்ரார்த்தனை செய்கின்றனர்.

வாருங்கள்,துபாய் கோவிலின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.இந்தக்கோவில் பர்துபாய் ( Bur Dubai)என்ற இடத்தில் இருக்கின்றது.

கடந்த அறுபது வருடமாக இக்கோவில் எந்த வித தடையும் இல்லாமல் செயல் பட்டுக்கொண்டு இருக்கின்றது.இக்கோவிலின் அருகிலேயே கிராண்ட் மாஸ்க் (Grand Mosque),கிருஷ்ணர் கோவில் மற்றும் துபாய் மியூசியம் பக்கத்திலேயே இருக்கின்றது.ஆனால் அதையும் தாண்டி இன்று வரை,
மத நல்லிணக்கத்துக்கு துபாய் முன் உதாரணமாகத் திகழ்கின்றது.

முஸ்லீம் மக்களின் மசூதியான கிராண்ட்மாஸ்க் அருகிலேயே பத்தடி தூரத்தில் சிவன்,கிருஷ்ணர் கோவில் உள்ளது.ரம்ஜான் நேரத்தில் சிறப்புத்தொழுகையும்,ப்ரார்த்தனையும் மசூதிகளில் இருக்கும்.

இப்படி ஒரு முஸ்லீம் நாட்டில், இந்து கோவிலும் இருந்து
அவரவர் ப்ரார்த்தனையை சந்தோஷமாக செய்வதற்கு இத்தகைய துபாய் அரசு நம்மக்களுக்கு இவ்வளவு வசதிகளை செய்து கொடுத்து உள்ளது.

இந்தக் கோவிலுக்கு செல்வதற்கு முன்,நுழைவாயிலில் பூக்கடைகள் நிறைய இருக்கின்றது.அதன் நறுமணம் அவ்வளவு அருமை.வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

உண்மையிலேயே இந்தியாவா அல்லது துபாயா என்று சந்தேகம் வந்துவிடும்.எல்லாரும் துபாயை டூரிஸ்ட்க்கு ஒரு சிறப்பான இடம் என்று தான் நினைத்துக்கொண்டு உள்ளார்கள்.ஆனால் ஆன்மீகத்திற்கும் முதன்மையாகத் திகழ்கின்றது நம் துபாய்!!!!!!!!!!!!!!


கோவிலுக்கு பின் புறம் அதன் அருகிலேயே நதிக்கரையோரம் போல் க்ரீக் (Creek)அமைந்துள்ளது.இதன் ரம்யமான சூழ்நிலை மனதை கொள்ளை கொள்ளும்.

சிறிய படகில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு டேரா (Deira place) போவதற்கு இதன் வழியாகவும் செல்லுவார்கள் மக்கள்.

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்னு அந்தக் காலத்தில சொல்லுங்க. ஆனா இப்ப இந்தக் கட்டுரையைப் படிச்சவுடனே,உங்க மனசில துபாய் அராபிய மக்கள் குடியிருப்பாங்க. ஏன்னா, நமக்கு
நம் மக்களுக்கு இவ்வளவு வசதி செஞ்சவங்கள நாம நெஞ்சத்தில தானே வெச்சுருப்போம்... வாழ்க வளமுடன்.

---மிக அருமை சுபா. நானும் அங்கே தேரா க்ரீக்கில் கோயிலுக்கு வந்து வணங்கும்போதும். அங்கு சமீபத்தில் நடைபெற்ற ஸ்கந்தர் சஷ்டி விழாவில் கலாந்து கொண்ட போதும் இதையேதான் நினைத்துக் கொண்டேன். வாழ்க வளமுடன். நன்றி சுபா அருமையான மத நல்லிணக்கப் பகிர்வுக்கு.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.



9 கருத்துகள்:

  1. துபாய் கோவிலின் சிறப்புகளுக்கு நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு பகிர்வு தேனக்கா. நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபால் சகோ

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  6. தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  7. எங்களின் எத்தனையோ பிராத்தனைகளைச் செவிமடுத்திருக்கிறார் இங்கே உள்ள பாபா. மாலைவேளைகளில் சஹஸ்ரனாமமும் உண்டு,. தினம்வந்து சொல்பவர்களும் இருக்கிறார்கள். இந்தியப் பண்டிகைகள் எல்லாம் கொண்டாடப் படும். ஹனுமானுக்கு எண்ணெய் அபிஷேகம் உண்டு,. பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவில் அப்படியே ஸ்ரீனத் த்வாரகாவுக்கு அழைத்துச் செல்லும். அனைத்து மகளிரும் உட்கார்ந்து பூத்தொடுப்பதும் விதவித இனிப்புகள் பரிமாறுவதும். கீழ்த்தளத்தில் பஜனைகள் செய்வதும் அமோகம். பெருமாள் கடையில் இந்திய க்ராண்ட் ஸ்வீட்ஸ் முதல் மல்லிகை அரளி சம்பங்கி, வாரப் பத்திரிகைகள் கிடைக்கும். பௌத்த கோவிலும் உண்டு.

    பதிலளிநீக்கு
  8. நன்றி வேலு,

    நன்றி வல்லிம்மா.. :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)