திங்கள், 18 நவம்பர், 2013

பகுத்தறிவுச் சிந்தனையில் குழந்தைகள் பற்றி கருணாகரன்.

புதிய தலைமுறையின் ஆசிரியர் பெ கருணாகரன் எழுதிய “அமேசான் காடுகளும் சகாரா பாலைவனங்களும்” புத்தகம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருதும் , எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் ஜி யூ போப் விருதும் குறிப்பிடத்தக்கது.


அவரிடம் குழந்தைகள் பற்றிய கேள்விகளைக் கேட்குமாறு திருநாவுக்கரசு திருநீலகண்டன் முகநூலில் கேட்டிருந்தார். 

///குழந்தைகளின் பால்யத்தைப் பாலைவனமாக்கி விடாதீர்கள்.


‘புதிய தலைமுறை’ வார இதழின் இணையாசிரியர் பெ. கருணாகரன் குழந்தைகளுக்காக எழுதிய சிறுகதைத் தொகுதி ‘அமேசான் காடுகளும் சஹாராப் பாலைவனமும் எப்படித் தோன்றின?’. வழக்கமான குழந்தைகள் கதைகளிலிருந்து மாறுபட்டு, சுற்றுச் சூழல், பிராணிகளிடம் பரிவு, மரம் வளர்ப்பதன் முக்கியம் என்று புதிய கோணத்திலும், தளத்திலும் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். இந்தப் புத்தகத்தின் மற்றொரு சிறப்பு கதைகளுக்கான படங்களை பள்ளிக் குழந்தைகளைக் கொண்டே வரைய வைத்திருப்பதுதான். அட்டைப் படத்தை வரைந்திருப்பவன் யுகேஜி படிக்கும் சிறுவன். இந்தப் புத்தகம் திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், கம்பம் பாரதி இலக்கியப் பேரவை, உள்ளிட்ட அமைப்புகளின் விருதுகளை வென்றுள்ளது. சமீபத்தில் இந்த நூலுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான தமிழ்ப் பேராயம் அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதை வழங்கியுள்ளது. கருணாகரனிடம் பேட்டி காண விரும்பினோம். அவரது முகநூல் நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் இங்கே பதில் கூறியுள்ளார்.


//// இதில் நான் கேட்ட கேள்வி /// கார்ட்டூன் சேனல்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ்களில் தொலைந்து கொண்டிருக்கும் குழந்தைகளைப் புத்தக வாசிப்பில் மீட்டெடுப்பது எப்படி..?  ///



- pagutharivu sinthanai


அதற்கு அவரின் பதில் இங்கே..

link 1: http://pakutharivusinthanai.com/

link2 http://pakutharivusinthanai.com/wp-content/plugins/page-flip-image-gallery/popup.php?book_id=25//


இந்த இரு இணைப்புக்களிலும் படிக்கலாம். 

நன்றி பகுத்தறிவு சிந்தனைகள். 


டிஸ்கி :- (புத்தகம் கிடைக்குமிடம் : அகநாழிகை புத்தக உலகம். தொடர்புக்கு :
999 454 1010, aganzhigai@gmail.com )


2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)