செவ்வாய், 11 ஜூன், 2013

திருமண அழைப்பும், வாழ்த்துப் பாக்களும்.

திருமண அழைப்பும், வாழ்த்துப் பாக்களும்.

என் திருமணத்தின்போது என் நண்பர்கள், சக வயது உறவினர்களுக்காக நான் அடித்த ( ஆக்சுவலா அப்பா அடித்துத் தந்த ) இன்விடேஷன் இது. 100 இன்விடேஷன் அடிச்சோம்.
காலேஜ் லெக்சரர்ஸ், ப்ரொஃபஸர்ஸ், ஃப்ரெண்ட்ஸ், காரைக்குடி ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் ப்ரெண்ட்ஸ் , அம்மா வீட்டில் இயங்கிவந்த டெக்கான் ட்யூஷன் செண்டர் டீச்சர்ஸ் அண்ட் நட்புக்கள், உறவினர்களில் என் வயதுக்காரர்களுக்கு அனுப்பினேன், பேபி பிங்க் கலர்னா அவ்வளவு பிடிக்கும். வாடாமல்லி, லாவண்டர் கலர்ல இந்த அழைப்பிதழ் பிரிண்ட் ஆச்சு. வள்ளுவர் அச்சகம், காரைக்குடியில் இன்னும் அந்த அச்சகம் இருக்கு. அவரோட பையன் நடத்துறாரு அதை.

இந்த வாழ்த்துப்பா என் சகோதரி , அக்கா, பெரியம்மா பெண் ரேவதி எழுதியது. சிறுவயதுத் தோழிகள் நாங்கள். அவள் என்னை விட ஒரு வயது மூத்தவள். சாலா ஒரு வயது சின்னவள். இருவரும் இணைந்து வழங்கியது இது. தமிழில் என் பெரியம்மா அம்மாவுக்குப் புலமை இருந்தது போல கவி எழுதுவது என்பது அவளுக்கும் , எனக்கும் (!) வழி வந்தது.  நன்றிடி ரேவ்.. இன்னும் கவிஞர் மீனவன், கவிஞர் அரு. நாகப்பன் ஆகியோர் எழுதிய வாழ்த்துப்பாக்களும் உண்டு. ஃப்ரேம் பண்ணி இருக்கு. எந்த ட்ரெங்குப் பெட்டியில் எங்கே என்று தேடணும்.

இது திருவாலங்காடு சபாபதி தேசிகரின் வாழ்த்துக் கடிதம். திருமண அழைப்புக்  கிடைத்ததும் கலந்து கொள்ள இயலாததால் இந்தக் கடிதத்தை அனுப்பி இருக்கிறார். இந்தத் திருவாலங்காடு சென்னை திருவள்ளூரைத் தாண்டி உள்ளது. இங்கே  பாட்டையா அவர்களால் பசுமடம் நடத்தப்பட்டு அந்தப் பசுக்களின் பால் அபிஷேகத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இன்று யாரும் சென்று கவனிக்க இயலாததால் அந்தப் பசுமடத்துக்குப் பதிலாக. பணம் அனுப்பப்பட்டு தினம் பால் வாங்கி அபிஷேகம் செய்யப்படுகிறது.

தேசிகர் என்பதால் வார்த்தைகள் எப்படி அழகாக வந்து விழுந்திருக்கின்றன. கடவுளைப் பாடும் வாயால் மனிதர்களையும் வாழ்த்தி எழுதப்பட்டிருக்கும் இந்தக் கடிதம் என்னைப் பொறுத்தவரையில் ரொம்ப விசேஷம்.

டிஸ்கி:- இன்று எங்களின் திருமண நாள்.. உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும்.. வேண்டும்  மக்காஸ்ஸ்ஸ்..:)


9 கருத்துகள்:

  1. Vazhga Valamudan, Nalamudan ella valamum, nalamum petru. Happy Wedding day wishes !

    பதிலளிநீக்கு
  2. பூங்கொத்துடன் இனிய வாழ்த்துக்களும்!!

    பதிலளிநீக்கு
  3. இனிய மறுவீடு வாழ்த்துகள் தேனக்கா.. (கல்யாணந்தான் நேத்தே முடிஞ்சுருச்சே :-))

    பதிலளிநீக்கு
  4. இனிய வாழ்த்துகள் அக்கா.

    திருமணத்திற்குப் பின் பெண்களின் பெயர்தான் மாற்றப்படும் என்றூ கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே ‘கண்ணன்’ எப்படி ‘லெட்சுமணன்’ ஆனார்? :-))

    பதிலளிநீக்கு
  5. நன்றி மணவாளன்

    நன்றி மேனகா

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி வேல் முருகன்

    நன்றி அருணா

    நன்றி சாந்தி

    நன்றி ராஜி

    நன்றி ஹுசைனம்மா.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)