ஞாயிறு, 14 அக்டோபர், 2012

திரைகடலோடியும் அருந்தமிழ் தேடும் நறும்புனல் வெற்றிவேல்..

சாவி குழுமத்தின் மூலமாக இன்றைய ஆ.வி மாணவர் திட்டத்திற்கு முன்னோடியான மாலனின் திசைகள் வார இதழ் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகம்.. குமுதம் சூர்யகதிர் இதழ்களில் சிறுகதைகளும் இந்தியா டுடே , தினமணி இதழ்களில் கட்டுரையும் வெளிவந்துள்ளது.. பல்வேறு இணைய இதழ்களில் சமூகம் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார்.. . தீவிர வாசகர்.. சங்க இலக்கியம் முதல் இன்று வலைப்பூக்கள் மூலம் எழுத வந்துள்ள இளம் படைப்பாளிகள் வரை அனைத்தும் படிப்பதில் ஆர்வம்.. இலக்கியம் தவிர அரசியலில் அதிக ஆர்வம்.. திராவிட இயக்கச் சிந்தனைகள் கொண்டவர்..


இதெல்லாம் யார்னு கேக்குறீங்களா. இவர் முகநூல் நண்பர் திரு. வெற்றிவேல்தான். 1992 இல் இருந்து நேஷனல் சயிண்டிஃபிக் கம்பெனியில் சவூதி அரேபியா ஜெத்தாவில் மண்டல மேலாளராக பணிபுரிகிறார். உயர்பரிசோதனைக் கூடங்கள், மருத்துவம், QC LABS ஆகியவற்றில் உபயோகிக்கப்படும் HI TECH ANALYTICAL INSTRUMENTS தயாரிக்கும் நிறுவனம் இது..  சௌதி அரேபியாவின் இந்தக் கம்பெனியின் பொருட்கள் விற்பனை மற்றும் அதன் பின்னான பராமரிப்புக்கள் தொடர்பான பணிகளில் இருக்கிறார்.

இவர் காரைக்குடியில் காவல்துறை அதிகாரியாக இருந்த திரு. அருணாசலம் அவர்களின் புதல்வர். பதினொருவர் உடன் பிறந்தோர். அனைவரும் சிறப்பாகப் படித்துப் பல்வேறு துறைகளில் உயர்பதவிகளில் பணியாற்றுகின்றனர். இவர் பள்ளிப் படிப்பை சிவகங்கை ராஜா ஹைஸ்கூலில் 1975 இல் முடித்தார். பியூசியை 1976 இல் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் படித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பி இ. எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் 76-81 ஆண்டு முதல் பாட்சில் படித்தவர். கல்லூரிக் காலத்தில் கவியரங்கங்களில் பங்கேற்றவர், தமிழ் மன்றத்தில் செயலாளராக இருந்தபோது கவியரங்கத்துக்குத் தலைமைதாங்க கலைஞரை அழகப்பா பொறியியல் கல்லூரிக்கு அழைத்ததாகவும், ஆனால் அவர் (இவர் செயலாளர் பொறுப்பில் இல்லாத )அடுத்தவருடம் வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததாகவும் கூறுகிறார்.

சிறப்பாக எழுதும் இவர் உண்மை நிகழ்வுகளைப் பகிரும்போது அங்கே நடந்த கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்து தமிழுக்கான நயமான மொழியிலேயே தன் கருத்துக்களைப் பகிர வேண்டும் என்பது என் விருப்பம். நறும்புனல் என்ற வலைப்பதிவில் தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். எழுத ஆரம்பித்த புதிதிலேயே தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கி. ராஜ நாராயணன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, மாலன் போன்ற இலக்கிய கர்த்தாக்களின் பரிச்சயம் அதிகம். பாரதி மணி, சுகா, மரபின் மைந்தன் முத்தையா ஆகியோரை நண்பர்களாகப் பெற்றவர். தமிழை வாசித்து நேசித்து சுவாசித்தும் வாழ்பவர். சிவாஜி, கண்ணதாசன், கலைஞர் போன்றோரிடம் தமிழ் சார்ந்து பிரியம் அதிகம். அவர்களே தன்னை உருவாக்கியவர்கள் என்று சொல்வார்.

நன்றும் தீதும் பிறர் தர வாரா என்பதை தன் வலைப்பூவில் சுயவிவரத்தில் பகிர்ந்திருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் நண்பர் திரு வெற்றிவேல், தமிழோடும் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.


4 கருத்துகள்:

  1. நன்றி தேனம்மை..என்னைப் பற்றிய அறிமுகத்திற்கு.. அத்துடன் பிறந்த நாள் வாழ்த்துகளுக்கும் நன்றீகள் பல்..

    பதிலளிநீக்கு
  2. நன்றி..தேனம்மை.. உங்கள் அறிமுகக் கட்டுரைக்கும் உங்களின் பிறந்த நாள் வாழ்த்திற்கும்..

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)