வியாழன், 1 மார்ச், 2012

முருதாடி. பூவரசி காலாண்டிதழில்.


முருதாடி..:-
******************

பெல்லாப் பூடம்.,
அடம்., சீண்டரம்.,
லண்டி., சகடை.,
குந்தாணி மட்டை.,
காளி., முருதாடி
இதெல்லாம் அம்மாவின்
வழங்குபெயர்கள் அவளுக்கு.


எப்படிக் கேட்பதென
எதவு தெரியாமல்
எதைப்பற்றியாவது
அசந்தர்ப்பமாய்
எதிர்க்கேள்வி கேட்டால்
எதிர்த்துப் பேசாதே என
முடி பற்றி அடிப்பாள் அம்மா.

வாங்கிய அடிகளை
கொஞ்சம் தலையணைக்கும்.,
ஊஞ்சலாடும்போது
உதைக்கும் உத்தரவளையத்திலும்
கல்லாய் நிற்கும் சுவற்றுக்கும்
கைவலிக்கத் திருப்பிக் கொடுப்பாள்.,
வணங்காமுடியென தன்னை நினைக்கும் முருதாடி.

தூக்கத்தில் தலைவிரித்த காளி
எட்டுக் கையும் கபாலமும்
மிதித்த முயலகனுமாய்
ஒற்றைக் காலுயர்த்தி சிரசில் வைக்க
உளறியடித்தெழும் முருதாடி
மகிழ்வாள் காளி நான்தானம்மா..
குணங்கெட்டவளல்ல... முருதாடி..

குறிப்பு :- முருதாடி-- முரட்டுப்பெண்.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)