வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ராசக்ரீடை...



ராசக்ரீடை..
********************
எல்லாமும் தேவதைதான்..
ஒன்று காளியாய்
ஒன்று சூலியாய்
ஒன்று சரஸ்வதியாய்
ஒன்று வராஹியாய்
ஒன்று லக்ஷ்மியாய்..


பெயரெழுதிய
சோறைப்போல
தனக்கானதை மட்டும்
உண்ணும்
ஒழுக்கம் வளரட்டும்..

எல்லா தேவதையும்
சிறகடித்து
கண்முன்னே
பறந்து கொண்டிருக்கலாம்
தன் சுய தேவதையோடு
கை கோர்த்து..

தேவதைகளின்
தரிசனத்தில்
தனக்கான ப்ரத்யேக
தேவதையைத்
தொலைத்துவிட்டு

இன்னொன்றைத்
தேடித் தொடர்ந்து
தூக்கமும் கனவுமற்று
விழித்தே இறக்காமல்

விழிப்புற்று
கிடைத்ததே வரம்தானென
தன் தேவதையின்
இறகு பிடித்து
மறைந்து கொள்ளலாம்
அல்லது பறந்து
அதனோடு களிக்கலாம்..

டிஸ்கி..1..:- இந்தக் கவிதை 21.3.2011 ( உயிரோசை 134 இல்) வெளிவந்துள்ளது.




11 கருத்துகள்:

  1. விழிப்புற்று
    கிடைத்ததே வரம்தானென
    தன் தேவதையின்
    இறகு பிடித்து
    மறைந்து கொள்ளலாம்
    அல்லது பறந்து
    அதனோடு களிக்கலாம்.. //

    களிப்பான கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பெயரெழுதிய
    சோறைப்போல
    தனக்கானதை மட்டும்
    உண்ணும்
    ஒழுக்கம் வளரட்டும்.. .////

    சிந்திக்கும் வரிகள் சிலிர்க்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. பெயரெழுதிய
    சோறைப்போல
    தனக்கானதை மட்டும்
    உண்ணும்
    ஒழுக்கம் வளரட்டும்..


    அருமை

    r.v.saravanan
    kudanthaiyur.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. //தேவதைகளின்
    தரிசனத்தில்
    தனக்கான ப்ரத்யேக
    தேவதையைத்
    தொலைத்துவிட்டு

    இன்னொன்றைத்
    தேடித் தொடர்ந்து
    தூக்கமும் கனவுமற்று
    விழித்தே இறக்காமல் //

    தற்காலத்துக்கேற்ற ராசக்ரீடை நன்றாகவே எழுதியுள்ளீர்கள்.
    பாராட்டுக்கள். vgk

    பதிலளிநீக்கு
  5. பெயரெழுதிய
    சோறைப்போல
    தனக்கானதை மட்டும்
    உண்ணும்
    ஒழுக்கம் வளரட்டும்..



    ...super!

    பதிலளிநீக்கு
  6. கவிதை அருமையா இருக்கு அக்கா... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. கவிதை அருமை ...
    வரிகள் அருமை ...

    பதிலளிநீக்கு
  8. அருமையான வரிகள் கோர்த்த கவிதை.

    நல்லாயிருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
  9. நன்றி ராஜி., ரமேஷ்., சரவணன்., சாந்தி., கோபால் சார்., சித்து., குமார்., ரெவெரி., அமல்ராஜ்., அக்பர்.:)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)