வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

கண்கள் உதிர்த்துச் சென்றவனுக்கு...

மீளுதலற்ற பாதைகளில்
உலா சென்றன கண்கள்.

கார்னியா கிரணங்களை விழுங்க
யத்தனித்தன கிரஹணங்கள்.

கவ்வுதலும் விடுவித்தலும்
பலநூற்றாண்டுகளுக்கு
விழி தப்பியபடி.


விழிக்கத்துவங்கிய சமயம்
மின்சாரம் பாய்வதும் அறுவதும்.

முழுசாய் அறுத்து மூடியபோது
பாதங்களின் கீழ் அவன் விழிகள்.

நெஞ்சை அறுக்கும் ஆக்ஸாவில்
தப்பிக்க திரும்பி நடந்தாள்
கண்களற்ற பாதைகளில்.

டிஸ்கி:- நன்றி ஜூன் 29., 2011 அதீதம்.. படத்துக்கு நன்றி ஷண்பகநாதன் ப்லாக்ஸ்பாட்.:))

12 கருத்துகள்:

  1. எப்பவும்போல தப்பிப் பிழைக்கும் அருமையான கவிதை தேனக்கா.

    பதிலளிநீக்கு
  2. மின்சாரம் பாய்வதும் அறுவதும் பார்வையில்...கண்களற்ற பாதையில் கவிதையில்...புதுமை வரிகள் பாராட்டுக்கள் சகோதரி

    பதிலளிநீக்கு
  3. நன்றி சசி., டிவிஆர்., ஹேமா., ரத்னவேல் ஐயா., அஷோக்., சித்து., ராமலெக்ஷ்மி, மாய உலகம்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)