வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கலம்பகம் விரும்பி....

கலம்பகம் விரும்பி..
******************************
மரிப்பதற்கான நேரம்
இல்லை இது ..
வாகை மாலையில்
உலா வந்தாய்..
யானையோ..
ஒட்டகமோ..

இணைந்த கரங்களும்
பிணைந்த விழிகளுமாய்
நனைந்து கிடந்தோம்..
உலராமல்..


கோட்டை கொத்தளங்களும்
குலவிய அந்தப்புரங்களும்
கொடிகள் வேரோடி
மண்பாயக் கூடுமோ..

உப்பரிகையில்
தலை உலர்த்தி நான்.
சோகம் பாய்ந்த விழியோடு
உன் மேல் வெறுப்புற்று..

கலம்பகம் விரும்பி
காதலோடு விழுங்கி
கூர்ச்சூலம் பாய
புறமுதுகிடாத வீரனாய்


அருஞ்சொற்பொருள்
எப்படி அறிந்தாயோ..
என் அன்பழிந்த அக்கணம்
நீ மரித்திருந்தாய்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 13.2. 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது>:))

15 கருத்துகள்:

  1. அசத்தலான வரிகள்.. எங்கியோ போயிட்டீங்க தேனக்கா :-)))

    பதிலளிநீக்கு
  2. அருஞ்சொற்பொருள்
    எப்படி அறிந்தாயோ..
    என் அன்பழிந்த அக்கணம்
    நீ மரித்திருந்தாய்..


    ..... அக்கா, ஒவ்வொரு கவிதையிலும் அசத்துறீங்க....

    பதிலளிநீக்கு
  3. செதுக்கி எடுத்தது போல வார்த்தைகள் அழகு.

    பதிலளிநீக்கு
  4. அழகு கவிதை அம்மா.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதைங்க.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. nantru... erunthum porul sariyaga enakku puriyavillai?

    பதிலளிநீக்கு
  7. என அன்பழிந்த அக்கனம் நீ மரித்திருந்தாய் ... கவிதையில் கடைசியான வரியாக வந்தாலும் முன் நிற்கிறது... அசத்தல்

    பதிலளிநீக்கு
  8. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி

    பதிலளிநீக்கு
  9. தொடர்ந்து இயங்குறது சந்தோஷம் :)

    பதிலளிநீக்கு
  10. நன்றி ப்ரகாஷ்., சாந்தி., சித்து., ரமேஷ்., ராஜா., ஸாதிகா., ரத்னவேல் ஐயா., ரெட் ரோஸ்.., ஜிஜி., கோபால சார்., மாய உலகம்., நேசன்.:)

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)