கருவறைக்குள் இருந்து
வெளிவந்தோம்
முந்தானையால்
போர்த்தப்பட்டு......
தாயோ சகோதரியோ
மனைவியோ தோழியோ
அது ஆறுதலாய்...
கர்ப்பக்கிரகம் சுமந்த
தெய்வம் நம் அம்மா
அவளுக்குத் தாய்மை
மட்டுமே அணிவித்துப்
பார்க்கும் நாம்...
தன் முந்தானையால்
நம்மை ஏந்தி
முகம் துடைத்து
கண்ணீரையும்...
சாப்பிட்ட கைகளைத்
துடைத்துக்கொள்கிறோம்
சில சமயம் அவள் நம்
மூக்கையும் துடைக்கிறாள்
நம் காயங்களுக்குக் கட்டாகவும்...
அவள் வெட்கத்தாலும்
காதலாலும் தன்
முந்தானையில் முகம் மறைத்து
காமத்தில் முறுக்கியும்
இருக்கக் கூடும்...
வேலைக்குச் சென்று
அலுத்தும் களைத்தும்
வியர்வையை ஒற்றி
வருத்தத்தில்
சிலசமயம் கண்ணீரையும்...
அது நமக்கு மட்டுமேயான
உரிமைப்பொருளாய்
ஊக்கில் அடுக்கிடப்பட்ட
அவள் முந்தானையை
புடவை கிழியும்வரை
இழுத்து ஒளிந்து கொண்டும்
அணைத்துக் கொண்டும்
எதிர்பார்க்கிறோம்...
நமக்கு மட்டுமேயான அம்மாவாய்!
இந்தக் கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem120410.asp
வெளிவந்தோம்
முந்தானையால்
போர்த்தப்பட்டு......
தாயோ சகோதரியோ
மனைவியோ தோழியோ
அது ஆறுதலாய்...
கர்ப்பக்கிரகம் சுமந்த
தெய்வம் நம் அம்மா
அவளுக்குத் தாய்மை
மட்டுமே அணிவித்துப்
பார்க்கும் நாம்...
தன் முந்தானையால்
நம்மை ஏந்தி
முகம் துடைத்து
கண்ணீரையும்...
சாப்பிட்ட கைகளைத்
துடைத்துக்கொள்கிறோம்
சில சமயம் அவள் நம்
மூக்கையும் துடைக்கிறாள்
நம் காயங்களுக்குக் கட்டாகவும்...
அவள் வெட்கத்தாலும்
காதலாலும் தன்
முந்தானையில் முகம் மறைத்து
காமத்தில் முறுக்கியும்
இருக்கக் கூடும்...
வேலைக்குச் சென்று
அலுத்தும் களைத்தும்
வியர்வையை ஒற்றி
வருத்தத்தில்
சிலசமயம் கண்ணீரையும்...
அது நமக்கு மட்டுமேயான
உரிமைப்பொருளாய்
ஊக்கில் அடுக்கிடப்பட்ட
அவள் முந்தானையை
புடவை கிழியும்வரை
இழுத்து ஒளிந்து கொண்டும்
அணைத்துக் கொண்டும்
எதிர்பார்க்கிறோம்...
நமக்கு மட்டுமேயான அம்மாவாய்!
இந்தக் கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem120410.asp
நீங்கள் சமீபத்தில் எழுதிய கவிதைகளில், இதுதான் மிக சிறந்தது. கவிதை வாசிக்கும் போதே, என் அம்மாவின் முந்தானையை தேடியது, என் மனம்.
பதிலளிநீக்குநல்ல கவிதை .
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குவாங்க தேனம்மை
பதிலளிநீக்குரொம்ப நாளா காணலியேன்னு நெனச்சுட்டு இருந்தேன்
சூபரா இருக்கு
அப்புறம்.. Ammas are always taken for granted.
பதிலளிநீக்குஓவர் பொஸஸிவோ? அது நம் கலாச்சாரம். :)
பதிலளிநீக்குரெம்ப பாதித்த கவிதை. தற்போது உங்கள் தளத்தில் மீண்டுமொரு முறை வாசிக்கிறேன்.
பதிலளிநீக்கு\\நமக்கு மட்டுமேயான
பதிலளிநீக்குஉரிமைப்பொருளாய்
ஊக்கில் அடுக்கிடப்பட்ட
அவள் முந்தானையை
புடவை கிழியும்வரை\\
அழகா சொல்லியிருக்கீங்க.
கருவறை பந்தத்தை மீறிய சொந்தம் கிடையவே கிடையாது
பதிலளிநீக்குதொடர்ந்து விகடனில் கலக்குவதற்கு வாழ்த்துக்கள் அக்கா
விஜய்
வெளிநாடு சென்று திரும்பிய தஙகளுக்கு வாழ்த்துக்கள். மறுபடியும்
பதிலளிநீக்குதங்கள் கவிதை மழையில் நனைய காத்திருக்கோம்.
//வேலைக்குச் சென்று
பதிலளிநீக்குஅலுத்தும் களைத்தும்
வியர்வையை ஒற்றி
வருத்தத்தில்
சிலசமயம் கண்ணீரையும்...//
எல்லாமே அழகிய வரிகள் தேனக்கா...
கவிதை மிக அருமை.. தாயின் பாசத்தை உணர்வுப்பூர்வமாக வரிகளில் உணர்த்திருக்கிறிர்கள் தேனக்கா.. வாழ்த்துக்கள் தேனக்கா..
பதிலளிநீக்குநாந்தான் முதல்லயா...
அம்மாவில் சொந்தச் சகோதரம் கூடுதல் பாசம் வைத்தாலே பொறாமைதான் வருகிறது.அவள் எனக்கேயானவளாய்த்தான் என்றும் !
பதிலளிநீக்குஅம்மா என்கிற அந்த உணர்வு எல்லோருக்குமே தனிதான்..
பதிலளிநீக்குஅன்பின் தேனு
பதிலளிநீக்குநல்ல கவிதை - இயல்பான சொற்கல் - நடை - முந்தானையின் அருமை - சிறப்பு அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது
நல்வாழ்த்துகள் தேனு
நட்புடன் சீனா
"நமக்கு மட்டுமேயான அம்மா"
பதிலளிநீக்குபாசத்தின் வெளிப்பாடு அருமை.
விகடனில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தேனக்கா. விகடன்ல வந்ததுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமை, அருமை அத்தனையும் அருமை அக்கா, அம்மாவை போற்றிய விதம் அருமை. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//அவள் வெட்கத்தாலும்
பதிலளிநீக்குகாதலாலும் தன்
முந்தானையில் முகம் மறைத்து
காமத்தில் முறுக்கியும்
இருக்கக் கூடும்...//
அழகிய அழத்தமான வரிகள்...
அம்மாவைப் பற்றிய கவிதை எப்போதுமே
பதிலளிநீக்குஅழகுதான்!
உங்கள் நடையில்
இன்னும் அழகாக..
அம்மாவின் அருமையை அழகாய்
பதிலளிநீக்குசொல்லி விட்டீர்கள், வாழ்த்துக்கள்.
அருமையாகவுள்ளது..
பதிலளிநீக்குஇளமைவிகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.
அம்மாவின் முந்தானை வாசம் வீசுகிறது அழகாக.
பதிலளிநீக்கு//வேலைக்குச் சென்று
பதிலளிநீக்குஅலுத்தும் களைத்தும்
வியர்வையை ஒற்றி
வருத்தத்தில்
சிலசமயம் கண்ணீரையும்...//
தேனக்கா,
இதில் கடைசிவரி..... நிறைய அர்த்தங்களை உள் வைத்திருக்கிறாது.
அம்மாவை மேலும் அழகாக்கும் கவிதை
பதிலளிநீக்குமிகவும் பாதித்த நல்ல கவிதை அக்கா...
பதிலளிநீக்குஓய்விற்குப் பிறகு ஆரம்பமே அமர்க்களம்.
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
விகடனுக்கு இந்த கவிதை ஒரு கிரீடம்.
உங்களுக்கு இது ஒரு வைரம்.
நீங்கள் விதைத்த (க)விதைகளில் தனி (க)விதை இது.
வாழ்த்துக்கள் அக்கா.
அம்மாவைப் பற்றியக் கவிதை.அருமை தேனம்மை. குடியிருந்த கோயிலாச்சே..
பதிலளிநீக்கு//வேலைக்குச் சென்று
பதிலளிநீக்குஅலுத்தும் களைத்தும்
வியர்வையை ஒற்றி
வருத்தத்தில்
சிலசமயம் கண்ணீரையும்..//
sorry amma naan ungala kastapadithirntha ,
thank u for such a good posting
அருமையான கவிதை..
பதிலளிநீக்குதேனக்கா
பதிலளிநீக்குநல்ல கவிதை....
அம்மாவை மேலும் அழகாக்கும் கவிதை
கருவறைக்குள் இருந்து
வெளிவந்தோம்
முந்தானையால்
போர்த்தப்பட்டு......
இழுத்து ஒளிந்து கொண்டும்
அணைத்துக் கொண்டும்
எதிர்பார்க்கிறோம்...
நமக்கு மட்டுமேயான அம்மாவாய்!
விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.
அருமை அக்கா!!
பதிலளிநீக்குஇப்பத்திய அம்மாக்களுக்கு (நான் உட்பட) நைட்டி அல்லது துப்பட்டா முனைதான் இப்படி!! :-)))
நெகிழ வைத்தது..
பதிலளிநீக்குhttp://suryesh.blogspot.com/2010/04/blog-post.html
பதிலளிநீக்குமறக்காம ஓட்டு போடுங்க
thozi thaaimai adiavathil yen kondadavendum athil irunthu veliyerunkal, and valaipookkalilirunthu veliyerunkal athu unkal padaipukkalai melum palappaduthum vazhthukkal.
பதிலளிநீக்குanbudan
ursularagav
கவிதை அருமை அக்கா.. :)
பதிலளிநீக்குஅம்மாவை நினைவூட்டும்
அழகிய கவிதை..
மிக அவசரமாக வெளியிட்டதால் சில விஷயங்களை முறையாகவும் தமிழிலும் தட்டச்சு செய்ய இயலவில்லை...தமிழ் தரவிறக்கம் செய்து வெளியிட நான் சென்றிருந்த ஊரில் இயலவில்லை... இருந்தாலும் எப்போதும் போல் வந்து என்னை ஊக்கமூட்டிய உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் தலை வணங்குகிறேன்
பதிலளிநீக்குஅம்மாவின் கவிதை மிக அருமை.
பதிலளிநீக்குயுத் ஃபுல் விகடனில் சிறந்த கவிதை வ்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.
நன்றி சித்து
பதிலளிநீக்குநன்றி LK
நன்றீ நேசன்
பதிலளிநீக்குநன்றீ பத்மா
உண்மை பட்டியன்
பதிலளிநீக்குநன்றீ ரமேஷ்
நன்றீ அம்பிகா
பதிலளிநீக்குநன்றீ விஜய்
நன்றீ வெற்றி
பதிலளிநீக்குநன்றீ சீமான்கனி
நன்றி ஜெய்லானி
பதிலளிநீக்குநன்றீ ஸ்டார்ஜன்
நன்றீ ஹேமா
பதிலளிநீக்குநன்றீ சீனா சார்
நன்றீ ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றீ மாதேவி
நன்றீ சரவணக்குமார்
பதிலளிநீக்குநன்றீ சசிக்குமார்
நன்றி சங்கவி
பதிலளிநீக்குநன்றீ அண்ணாமலை
நன்றி சை கொப
பதிலளிநீக்குநன்றி குணசீலன்
நன்றீ அமைதிச்சாரல்
பதிலளிநீக்குநன்றி சத்ரியன்
நன்றி வேலு
பதிலளிநீக்குநன்றி மேனகா
நன்றி குமார்
பதிலளிநீக்குநன்றீ கோபி
நன்றி ரோஹிணி
பதிலளிநீக்குநன்றீ தமிழ்மகன்
நன்றி செந்தில் குமார்
பதிலளிநீக்குநன்றி ஹுசைனம்மா
நன்றி ரிஷபன்
பதிலளிநீக்குநன்றி சூர்யேஷ்
நன்றி ursula
பதிலளிநீக்குநன்றி ஆனந்தி
நன்றீ ஜலீலா
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்