வெள்ளி, 23 ஏப்ரல், 2010

நமக்கு மட்டுமேயான அம்மா

கருவறைக்குள் இருந்து
வெளிவந்தோம்
முந்தானையால்
போர்த்தப்பட்டு......

தாயோ சகோதரியோ
மனைவியோ தோழியோ
அது ஆறுதலாய்...

கர்ப்பக்கிரகம் சுமந்த
தெய்வம் நம் அம்மா
அவளுக்குத் தாய்மை
மட்டுமே அணிவித்துப்
பார்க்கும் நாம்...


தன் முந்தானையால்
நம்மை ஏந்தி
முகம் துடைத்து
கண்ணீரையும்...

சாப்பிட்ட கைகளைத்
துடைத்துக்கொள்கிறோம்
சில சமயம் அவள் நம்
மூக்கையும் துடைக்கிறாள்
நம் காயங்களுக்குக் கட்டாகவும்...

அவள் வெட்கத்தாலும்
காதலாலும் தன்
முந்தானையில் முகம் மறைத்து
காமத்தில் முறுக்கியும்
இருக்கக் கூடும்...

வேலைக்குச் சென்று
அலுத்தும் களைத்தும்
வியர்வையை ஒற்றி
வருத்தத்தில்
சிலசமயம் கண்ணீரையும்...

அது நமக்கு மட்டுமேயான
உரிமைப்பொருளாய்
ஊக்கில் அடுக்கிடப்பட்ட
அவள் முந்தானையை
புடவை கிழியும்வரை

இழுத்து ஒளிந்து கொண்டும்
அணைத்துக் கொண்டும்
எதிர்பார்க்கிறோம்...
நமக்கு மட்டுமேயான அம்மாவாய்!

இந்தக் கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem120410.asp

58 கருத்துகள்:

  1. நீங்கள் சமீபத்தில் எழுதிய கவிதைகளில், இதுதான் மிக சிறந்தது. கவிதை வாசிக்கும் போதே, என் அம்மாவின் முந்தானையை தேடியது, என் மனம்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க தேனம்மை
    ரொம்ப நாளா காணலியேன்னு நெனச்சுட்டு இருந்தேன்
    சூபரா இருக்கு

    பதிலளிநீக்கு
  3. ஓவர் பொஸஸிவோ? அது நம் கலாச்சாரம். :)

    பதிலளிநீக்கு
  4. ரெம்ப பாதித்த கவிதை. தற்போது உங்கள் தளத்தில் மீண்டுமொரு முறை வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. \\நமக்கு மட்டுமேயான
    உரிமைப்பொருளாய்
    ஊக்கில் அடுக்கிடப்பட்ட
    அவள் முந்தானையை
    புடவை கிழியும்வரை\\
    அழகா சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  6. கருவறை பந்தத்தை மீறிய சொந்தம் கிடையவே கிடையாது

    தொடர்ந்து விகடனில் கலக்குவதற்கு வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  7. வெளிநாடு சென்று திரும்பிய தஙகளுக்கு வாழ்த்துக்கள். மறுபடியும்
    தங்கள் கவிதை மழையில் நனைய காத்திருக்கோம்.

    பதிலளிநீக்கு
  8. //வேலைக்குச் சென்று
    அலுத்தும் களைத்தும்
    வியர்வையை ஒற்றி
    வருத்தத்தில்
    சிலசமயம் கண்ணீரையும்...//

    எல்லாமே அழகிய வரிகள் தேனக்கா...

    பதிலளிநீக்கு
  9. கவிதை மிக அருமை.. தாயின் பாசத்தை உணர்வுப்பூர்வமாக வ‌ரிகளில் உணர்த்திருக்கிறிர்கள் தேனக்கா.. வாழ்த்துக்கள் தேனக்கா..

    நாந்தான் முதல்லயா...

    பதிலளிநீக்கு
  10. அம்மாவில் சொந்தச் சகோதரம் கூடுதல் பாசம் வைத்தாலே பொறாமைதான் வருகிறது.அவள் எனக்கேயானவளாய்த்தான் என்றும் !

    பதிலளிநீக்கு
  11. அம்மா என்கிற அந்த உணர்வு எல்லோருக்குமே தனிதான்..

    பதிலளிநீக்கு
  12. அன்பின் தேனு

    நல்ல கவிதை - இயல்பான சொற்கல் - நடை - முந்தானையின் அருமை - சிறப்பு அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது

    நல்வாழ்த்துகள் தேனு
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  13. "நமக்கு மட்டுமேயான அம்மா"

    பாசத்தின் வெளிப்பாடு அருமை.

    விகடனில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தேனக்கா. விகடன்ல வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. அருமை, அருமை அத்தனையும் அருமை அக்கா, அம்மாவை போற்றிய விதம் அருமை. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. //அவள் வெட்கத்தாலும்
    காதலாலும் தன்
    முந்தானையில் முகம் மறைத்து
    காமத்தில் முறுக்கியும்
    இருக்கக் கூடும்...//

    அழகிய அழத்தமான வரிகள்...

    பதிலளிநீக்கு
  17. அம்மாவைப் பற்றிய கவிதை எப்போதுமே
    அழகுதான்!
    உங்கள் நடையில்
    இன்னும் அழகாக..

    பதிலளிநீக்கு
  18. அம்மாவின் அருமையை அழகாய்
    சொல்லி விட்டீர்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. அருமையாகவுள்ளது..

    இளமைவிகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. அம்மாவின் முந்தானை வாசம் வீசுகிறது அழகாக.

    பதிலளிநீக்கு
  21. //வேலைக்குச் சென்று
    அலுத்தும் களைத்தும்
    வியர்வையை ஒற்றி
    வருத்தத்தில்
    சிலசமயம் கண்ணீரையும்...//

    தேனக்கா,

    இதில் கடைசிவரி..... நிறைய அர்த்தங்களை உள் வைத்திருக்கிறாது.

    பதிலளிநீக்கு
  22. அம்மாவை மேலும் அழகாக்கும் கவிதை

    பதிலளிநீக்கு
  23. மிகவும் பாதித்த நல்ல கவிதை அக்கா...

    பதிலளிநீக்கு
  24. ஓய்விற்குப் பிறகு ஆரம்பமே அமர்க்களம்.

    அருமையான கவிதை.
    விகடனுக்கு இந்த கவிதை ஒரு கிரீடம்.
    உங்களுக்கு இது ஒரு வைரம்.

    நீங்கள் விதைத்த (க)விதைகளில் தனி (க)விதை இது.

    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  25. அம்மாவைப் பற்றியக் கவிதை.அருமை தேனம்மை. குடியிருந்த கோயிலாச்சே..

    பதிலளிநீக்கு
  26. //வேலைக்குச் சென்று
    அலுத்தும் களைத்தும்
    வியர்வையை ஒற்றி
    வருத்தத்தில்
    சிலசமயம் கண்ணீரையும்..//
    sorry amma naan ungala kastapadithirntha ,
    thank u for such a good posting

    பதிலளிநீக்கு
  27. தேனக்கா
    நல்ல கவிதை....

    அம்மாவை மேலும் அழகாக்கும் கவிதை

    கருவறைக்குள் இருந்து
    வெளிவந்தோம்
    முந்தானையால்
    போர்த்தப்பட்டு......

    இழுத்து ஒளிந்து கொண்டும்
    அணைத்துக் கொண்டும்
    எதிர்பார்க்கிறோம்...
    நமக்கு மட்டுமேயான அம்மாவாய்!

    விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. அருமை அக்கா!!

    இப்பத்திய அம்மாக்களுக்கு (நான் உட்பட) நைட்டி அல்லது துப்பட்டா முனைதான் இப்படி!! :-)))

    பதிலளிநீக்கு
  29. http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html

    மறக்காம ஓட்டு போடுங்க

    பதிலளிநீக்கு
  30. thozi thaaimai adiavathil yen kondadavendum athil irunthu veliyerunkal, and valaipookkalilirunthu veliyerunkal athu unkal padaipukkalai melum palappaduthum vazhthukkal.


    anbudan
    ursularagav

    பதிலளிநீக்கு
  31. கவிதை அருமை அக்கா.. :)

    அம்மாவை நினைவூட்டும்
    அழகிய கவிதை..

    பதிலளிநீக்கு
  32. மிக அவசரமாக வெளியிட்டதால் சில விஷயங்களை முறையாகவும் தமிழிலும் தட்டச்சு செய்ய இயலவில்லை...தமிழ் தரவிறக்கம் செய்து வெளியிட நான் சென்றிருந்த ஊரில் இயலவில்லை... இருந்தாலும் எப்போதும் போல் வந்து என்னை ஊக்கமூட்டிய உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் தலை வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  33. அம்மாவின் கவிதை மிக அருமை.

    யுத் ஃபுல் விகடனில் சிறந்த கவிதை வ்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. நன்றீ வெற்றி

    நன்றீ சீமான்கனி

    பதிலளிநீக்கு
  35. நன்றி ஜெய்லானி

    நன்றீ ஸ்டார்ஜன்

    பதிலளிநீக்கு
  36. நன்றீ ஸ்ரீராம்

    நன்றீ மாதேவி

    பதிலளிநீக்கு
  37. நன்றீ சரவணக்குமார்

    நன்றீ சசிக்குமார்

    பதிலளிநீக்கு
  38. நன்றி சங்கவி

    நன்றீ அண்ணாமலை

    பதிலளிநீக்கு
  39. நன்றி சை கொப

    நன்றி குணசீலன்

    பதிலளிநீக்கு
  40. நன்றீ அமைதிச்சாரல்

    நன்றி சத்ரியன்

    பதிலளிநீக்கு
  41. நன்றி ரோஹிணி

    நன்றீ தமிழ்மகன்

    பதிலளிநீக்கு
  42. நன்றி செந்தில் குமார்

    நன்றி ஹுசைனம்மா

    பதிலளிநீக்கு
  43. நன்றி ரிஷபன்

    நன்றி சூர்யேஷ்

    பதிலளிநீக்கு
  44. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)