சனி, 10 அக்டோபர், 2009

பூசணிப் பூ

தீப்பெட்டித் தொழிற்சாலையின்
வேன்களின் அதிகாலைப்
பொறுக்குதல்களிலும்...

அந்தி மாலை
வீசியெறிதல்களிலும்
குழந்தமையைத்
தொலைத்த நீ ...


வருமானம் போதாமல்
திருமணத்துக்குப் பின்னும்
எனக்காக வாசலில் அமர்ந்து
தீப்பெட்டி ஒட்டியபடி....

சிமெண்டுத் தூசியுடன்
சாந்துச் சட்டியுடன்
வீடு வந்து ...

வெந்நீரில் குளித்து
கறிச்சோறு தின்று
கயிற்றுக் கட்டிலில் நான்...

கூரையில் படர்ந்த
பூசணிப்பூக்களும்
படலில் பால் நிலவில்
நனைந்த இடுப்பாய்
பளபள பூசணிகளும்...

கிணற்றடியில் கந்தக நாற்றம்
தொலையுமளவு தேய்த்துக்
குளித்தபடி நீ...

சகடைச் சத்தமாய்
தடதடக்கும் இதயத்துடன்
விழித்து இருந்தோம்
பூசணிப் பூக்களும் நானும்...

14 கருத்துகள்:

  1. படலில் பால் நிலவில்

    சகடைச் சத்தமாய்

    சிந்தனைகள் படு வேகமாய் போகுது. வார்த்தைகள் அழகாக விழுகிறது. மொத்தத்தில் பின்றீங்க.

    பதிலளிநீக்கு
  2. // கூரையில் படர்ந்த
    பூசணிப்பூக்களும்
    படலில் பால் நிலவில்
    நனைந்த இடுப்பாய்
    பளபள பூசணிகளும்...//

    வாவ் அருமை..

    // சகடைச் சத்தமாய்
    தடதடக்கும் இதயத்துடன்
    விழித்து இருந்தோம்
    பூசணிப் பூக்களும் நானும்...//

    காத்திருத்தலை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
  3. ”பூசணிப்பூ” - பெயரைப் பார்த்தவுடன், மார்கழி மாதத்தில் பெரிய கோல இட்டு, அதன் நடுவில் வைப்பார்கள் - அதைப் பற்றி எழுதப் போகின்றீர்கள் என எதிர்ப் பார்ப்புடன் வந்தேன். அதில் ஏமாற்றம் அடைந்தாலும், இந்த கவிதை ரொம்ப அழகா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  4. காத்திருத்தலின் வலியை மிக நுட்பமான மொழியில் சொல்லி இருக்கிறீர்கள்
    அருமை .

    பதிலளிநீக்கு
  5. நன்றி ராகவன்
    மார்கழி மாதமும் இன்னொரு பூவும் பின்பு வரும்

    பதிலளிநீக்கு
  6. Kooraiyil poosanipoo,nalla ninaivoottal.You've leftout Maargazhi kolam,athil poosanipoo.

    பதிலளிநீக்கு
  7. சகடைச் சத்தமாய்
    தடதடக்கும் இதயத்துடன்
    விழித்து இருந்தோம்
    பூசணிப் பூக்களும் நானும்...


    arumai..
    thenammai.

    தேவதையின்
    வரமிட்டிருக்கின்றேன்
    உங்கள்
    கரமிட்டுச்செல்லுங்கள்..

    பதிலளிநீக்கு
  8. உலகெல்லாம் என் பந்தம்
    என் தேசத்தில் மட்டும்
    ஏன் தீப்பந்தம்

    சந்தான ஷங்கர் அருமை தேவதையின் வரம்

    நன்றி ஷங்கர் உங்கள் பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  9. தேனு,நானும் ஏதோ எழுதுறேன்.
    உங்க எழுத்தின் ரசனையே வேற தனி.

    பதிலளிநீக்கு
  10. அதென்ன ஹேமா அப்பிடிச் சொல்லீட்டீங்க.. நேசன், அதன் பின் நீங்க அப்புறம்தான் நான்.:)

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)