ஒரு பொருளின் மேல் ஆசைப்படுவதும் அது கிடைத்ததும் சலித்துப் போவதும் மனித இயல்பு. ஆனால் ஆசைப்பட்ட ஒரு பொருள் கிடைத்ததும் அடுத்த பொருளின்மேல் ஆசைப்படுவதும் அதை அடையப் போராடுவதும் அது கிடைத்ததும் அதை விட்டுவிட்டுக் கள்ளமாக இன்னொன்றை நாடுவதுமாகத் திரிந்தான் ஒருவன். அவன் செயல் தவறு என்று நீதி புகட்டினாள் ஒருத்தி. அந்தக் கள்வன் பற்றியும் அவனைத் திருத்தி நீதி புகட்டியவள் பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 16 டிசம்பர், 2019
வெள்ளி, 13 டிசம்பர், 2019
ஜபத்தால் உயர்ந்த ஜபேஸ்வரன். தினமலர் சிறுவர்மலர் - 44.
நாம் ஆசைப்படும் ஒரு விஷயம் கிடைக்க நாம்
தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்தோர் யாரும் இகழ்ச்சி
அடைந்ததில்லை. உயர்வே அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு ஜபேஸ்வரனின் உயர்வே சாட்சி.
மேலும் அவர் கருடனையே தன் மூச்சுக் காற்றால் வீழ்த்தியவர். யார் அந்த ஜபேஸ்வரன்
எப்படி உயர்வடைந்தார் அவர் என்று பார்ப்போம் குழந்தைகளே.
வியாழன், 12 டிசம்பர், 2019
மலை வளமும் மழை வளமும்.
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரைன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கித் திரிவோம் பறவைகள் போல்
அழகிய ரைன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கித் திரிவோம் பறவைகள் போல்
என்று சிவந்தமண் படத்தில் வரும் பாடல்போல் ஹனிமூன் என்றாலே நமக்கு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிம்லா, குலு, மணாலி, டார்ஜிலிங், ஸ்விட்சர்லாந்து ( ஆல்ப்ஸ், டிட்லிஸ்) ஆகியவற்றின் பனிபடர்ந்த மலைப்பிரதேங்கள் ஞாபகத்தில் முகிழ்க்கும். மலையை அடிப்படையாக வைத்து தங்கமலை ரகசியம், மெக்கன்னாஸ் கோல்ட் ஆகிய படங்கள் வந்துள்ளன.
சரித்திரப் பிரசித்திபெற்ற கோட்டைகளுடன் கூடிய மலைகளை ( கோல்கொண்டா,குல்பர்கா,குவாலியர்,பிதார்அறிந்திருக்கலாம். ஆனால் பூகோளத்தில் ஒரு காலத்தில் இடம்பெற்றிருந்தும் கடல் விழுங்காமல் காற்றுக் குடிக்காமல் சிதறிச் சரிந்த மலைகள் மதுரை செல்லும் வழியிலும் திருச்சி செல்லும் வழியிலும் உண்டு.ஆட்டுக்கிடாய்களின் உப்புக்கண்டக் கவிச்சியைப் போல வெய்யிலில் காயும் வெண் துண்டங்களைக் கண்டு மனம் பதறியதுண்டு. வெட்டிச்சாய்க்கப்பட்ட மரங்களைப் போல வீழ்ந்து கிடக்கும் மலைகளைக் கண்டு கண்கசிந்ததுண்டு.
புதன், 4 டிசம்பர், 2019
டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.
2401. கிணற்றுப் பொந்தில், மரக்கிளைகளில் அமர்ந்து, வயலோரப் பாறைக்குப் பின்னால் என்று வினோதமான குடிக் கதைகளும், ஐந்து பெண்களை மணந்து கொள்வது பத்தும் பத்தாதற்குப் பண்ணையப் பெண்களிடம் வல்லுறவு கொள்ளும் கதைகள்தான் சிறந்த நாவலென்று சிலாகிக்கப்படுகின்றன
2402. டிவி சீரியல் டயலாக்குகள் போல இருக்கின்றன சில முகநூல் நிலைத்தகவல்கள்.
#காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்கிறார்கள்.
2403. மெலடீஸ்தான் பிடிக்கும்னாலும் அப்பப்போ இந்த டப்பாங்குத்துக்களையும் பார்க்க வேண்டியிருக்கு. ஹாஹாஹா
http://lyricsdhool.blogspot.com/2016/09/yaar-yaaru-ennannudhaan-solrendaa-muthu.html
2404. என் ஃபோட்டோவுக்கு ஹார்ட்டின் விடாதவுங்க கனவுல எல்லாம் இந்த டைனோசர் வந்து கடிச்சு வைக்கும். சொல்லிட்டேன் ஆமா
2405. கலகலக்கும் முகமூடிகள்
2402. டிவி சீரியல் டயலாக்குகள் போல இருக்கின்றன சில முகநூல் நிலைத்தகவல்கள்.
#காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்கிறார்கள்.
2403. மெலடீஸ்தான் பிடிக்கும்னாலும் அப்பப்போ இந்த டப்பாங்குத்துக்களையும் பார்க்க வேண்டியிருக்கு. ஹாஹாஹா
http://lyricsdhool.blogspot.com/2016/09/yaar-yaaru-ennannudhaan-solrendaa-muthu.html
2404. என் ஃபோட்டோவுக்கு ஹார்ட்டின் விடாதவுங்க கனவுல எல்லாம் இந்த டைனோசர் வந்து கடிச்சு வைக்கும். சொல்லிட்டேன் ஆமா
2405. கலகலக்கும் முகமூடிகள்
செவ்வாய், 3 டிசம்பர், 2019
ஓவியத்திலிருந்து உயிர்பெற்ற குழந்தை. தினமலர். சிறுவர்மலர் - 43.
குழந்தை என்றால் அன்னையர் பத்துத்திங்கள் சுமந்து பெற்று வளர்ப்பார்கள். கருவில் உருவாகும் அக்குழந்தைக்கு எந்நோவும் வரக்கூடாது என்று மருந்துண்பார்கள். நதிகள்தோறும் கடலிலும் கூடத் தீர்த்தமாடுவார்கள். புண்ணிய ஸ்தலங்களின் தீர்த்தங்களையும் அருந்துவார்கள். வளைகாப்பு, சீமந்தம் என்று தாய்வீட்டில் சீராடுவார்கள். இப்படி எந்த நிகழ்வும் இல்லாமல் ஓரிரு நொடிகளில் ஒரு குழந்தை உருவானது. அதுவும் ஒரு ஓவியத்திலிருந்து உயிர்பெற்றது. இந்த அதிசயத்தைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




