எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 14 நவம்பர், 2022

உணவுப் பழமொழிகளும், பயன்களும்

 நொறுங்கத்தின்றவனுக்கு நூறு ஆயுசு

உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டுலயும் சாப்பிடலாம்
சீரகம்= சீர் அகம் =  உடல்நலத்தை சீராக வைக்கும். 
சீரகம் இல்லா உணவும் சிறுகுழந்தை இல்லா வீடும் சிறப்பதில்லை.
காட்டுலே புலியும் வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
போன ஜுரத்தைப் புளியிட்டு அழைக்காதே
பொங்குற காலத்தில் புளி, மங்குற காலத்தில் மாங்கா
நெய்க்குடத்தைச் சுற்றிய எறும்பு போல
நெய் வயிற்று அக்கினியை அணைக்கும்
தன் காயம் காக்க வெங்காயம் போதும்
வாழை வாழ வைக்கும். 
வாழையடி வாழை
அவசரச் சோறு ஆபத்து
ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
முடக்கை நீக்குவது முடக்கற்றான் கீரை
வாய்ப்புண் நீக்கும் மணத்தக்காளி
இரப்பைப் புண்ணுக்கு எலுமிச்சைச் சாறு
ரத்தக் கொதிப்புக்கு அகத்திக் கீரை
கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராக்ஷை
சித்தம் தெளிய வில்வம்
சிறுநீர்க் கடுப்புக்கு அன்னாசி
சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு
மூலம் போக்கும் கருணைக்கிழங்கு மசியல்
ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்
நோய் எதிர்ப்பு சக்திக்கு முந்திரி பாதாம் பிஸ்தா அக்ரூட்
மலச்சிக்கல் போக்கும் கிஸ்மிஸ் 
இருமல் நீக்கும் கற்பூர வல்லி. 
உஷ்ணம் தணிக்கும் வெந்தயம். 
உடல்குளிர்ச்சிக்குச் சின்ன வெங்காயம்
தொண்டைக்கரகரப்பை நீக்கும் பனங்கல்கண்டு
குடல்புழு நீக்கும் வேப்பம்பூ
சர்க்கரை நோய்க்குப் பாகற்காய்.
பித்தம் தணிக்கும் நெல்லிக்காய்
இரத்த விருத்திக்கு கருப்பட்டி வெல்லம் 
இரும்புச் சத்துக்குக் கருவேப்பிலை
கண்பார்வை தெளிவாயிருக்கப் பொன்னாங்கண்ணி.
பசியைத் தூண்டுவது இஞ்சி
வாய் நாற்றம் போக்கும் புதினா
குடிவெறி நீக்கும் கொத்துமல்லி
வயிற்றுப்புண் நீக்குவது மஞ்சள்
தலைவலி நீங்க முள்ளங்கிச் சாறு
தேனுடன் இஞ்சி இரத்தத்தூய்மை
பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
மூலநோய் தீர வாழைப்பூக் கூட்டு
வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
குழந்தைப் பேறுக்கு சோம்புக் கசாயம்
வாயுத்தொல்லை நீக்கும் பெருங்காயம்
வாத நோய் தடுக்க அரைக்கீரை
சளியைப் போக்கும் வெற்றிலை ரசம்
வாய் துர்நாற்றம் நீக்கும் ஏலக்காய்
பருமன் குறைய முட்டைக் கோஸ்
உடல் எடை குறைய கீரைகள்

சர்க்கரை நோய்க்கும் சாப்பிடும் பழங்கள் கொய்யா, பப்பாளி
மாதுளை ஜூஸ் குடலை பலமாக்கும்
சீதாப்பழம் புற்றை நீக்கும்
வெண்ணெய் நெய் வாய்ப்புண் நீக்கும்
எண்ணெய் செரிமானத்தைச் சீராக்கும்
ஓமம் வயிற்றுப் பொருமலை நீக்கும்
எள் இரத்தத்தை சுத்திகரிக்கும்
கொழுத்தவனுக்குக் கொள்ளு 
இளைத்தவனுக்கு எள்ளு
பச்சை வேர்க்கடலை பித்தம் உண்டாக்கும்
எலும்பு வளர்ச்சிக்குப் பாலும் தயிரும்
குடல் கிருமிகளை நீக்கும் மோர்
கொழுப்பை நீக்கும் பார்லியும் கொள்ளும்
வாழைத்தண்டு மலச்சிக்கல் போக்கும்
கிழங்கு வகைகள் வாய்வு உண்டாக்கும்
உடல் ஊட்டம்பெறப் பயறு வகைகள்
உணவு செரிக்க வெற்றிலை பாக்கு
இரத்த ஓட்டத்தை சீராக்கும் பீன்ஸ்
மஞ்சள் காமாலைக்கு முள்ளங்கிச் சாறு
உடலைக்குளுமையாக்க உப்புப் போட்ட நார்த்தங்காய்
சள்ளைக் கடுப்பைப் போக்கும் தூதுவளை
அலுக்கையைப் போக்கும் ஆரஞ்சுச் சாறு
சளியை நீக்கும் ஆடுதோடா இலை.  
உட்புண்ணைக் குணமாக்கும் அதிமதுரம்
கர்ப்பப்பை பலமாக்க உளுந்தங்களி
குழந்தைகள் உரம்பெற கேப்பைக் கூழ்
குளிர்ச்சியைத் தருவது கம்பங்கூழ்.
இரும்புச் சத்து நிறைந்தது கவுனி அரிசி
மூளைக்கு நல்லது அரிசி உணவு
கண்ணுக்கு நல்லது கேரட்
கெட்ட கொழுப்பை நீக்கும் தேங்காய்ப் பால்
இரத்தத்தை சுத்திகரிக்கும் பெரிய வெங்காயம்
ஆண்மையைத் தருவது முருங்கைக்காய் முருங்கைப்பூ
மலமிளக்கி பூவன் வாழைப்பழம்
உடல் ஊட்டம் தரும் கற்பூர வல்லி/சாம்பல் வாழை
நீர்ச்சத்துத் தரும் சுரைக்காய் , பீர்க்கங்காய்.
தாகவிடாய் நீக்கும் வெண்பூசணி
இரத்தத்தைப் பெருக்கும் பீட்ரூட் (கதிர்வீச்சையும் எதிர்க்கும்)
இடுப்பைபலமாக்கும் கறுப்பு உளுந்துசுண்டல்
குளிர்ச்சியைத்தருவது நல்லெண்ணெய்.
பருப்பு வகைகள் உடலைக் கட்டமைக்கும்
பயறு வகைகளில் புரோட்டீன் அதிகம்
உப்புத்தண்ணீர் தொண்டைவலி போக்கும். 
உப்பு வெந்நீர் கால்வலி நீக்கும்
காய்ந்த மிளகாய் பசியைத்தூண்டும்
நார்ச்சத்து உள்ளவை கீரைகள்
கால்சியம் சத்து உள்ளது பால். 
பொட்டாசியம் சத்து உள்ளது வாழைப்பழம்

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...