எனது பதிநான்கு நூல்கள்

சனி, 5 ஜூன், 2021

காதல் வனத்தில் மணிமேகலைகள்.

 அதிசயமான விஷயம் ஒன்று உண்டென்றால் அது காதல் வனம் நூலை வெளியிட்டவர்கள் , பெற்றுக் கொண்டவர் இருவருமே மணிமேகலைகள். காதலை வெறுத்த துறவி மணிமேகலையின் பெயர் கொண்ட இருவரும் எனது காதல்வனம் நூலைப் படித்துப் பார்த்தார்கள் வெளியிடும் முன். :) 

ஒருவர் எனது அன்பிற்குரிய தோழி சாஸ்திரி பவன் பெண்கள் சங்கத் தலைவி, தலித் பெண்கள் நலச் சங்கத் தலைவி மணிமேகலை. இன்னொருவர் பேராசிரியை மணிமேகலை சித்தார்த்தன். ( இவரது பெயரில் இருவரின் பெயருமே காதலையும் இல்வாழ்வையும் துறந்தவர்களாக இருப்பது ஆச்சர்யத்துக்குரியது ) 


என்னப்பா நம்மளக் கூப்பிட்டுத் தேன் இப்பிடி ஒரு புக்கை வெளியிடுறா.. என்று கூறுகிறார் தோழி மணிமேகலை :) 


ஆழ்ந்து வாசிக்கிறார் சிறப்பு விருந்தினர் மணிமேகலை சித்தார்த்தன். 
பின்னர் அது பற்றியும் சிறப்பாக உரையாற்றினார். 

சீத்தலைச் சாத்தனார் இருந்திருந்தால் இவர்களைப் பார்த்துப் பெருமை அடைந்திருப்பார். 

காவிரி மைந்தன் அவர்களுடன் 


குறிப்புகளோடு தயாராய் இருக்கிறார் தோழி மணிமேகலை. 

புத்தகத்தில் இருந்து எடுத்துக்காட்டுகளோடு உரையாற்றினார் மணிமேகலை சித்தார்த்தன். பாடல்களும் அழகாகப் பாடினார் ! மலர்ந்த முகத்தோடு அவர் உரையாடியது காணக் கண் கோடி வேண்டும். 
மொத்தத்தில் இரு மணிமேகலைகளும் கலந்து கொண்டு காதல் வனத்தை வனப்பாக்கினார்கள். 


நன்றி சிறப்பாக நூலாக்கம் செய்து வெளியீட்டு விழாவும் நடத்திய டிஸ்கவரி புக் பேலஸ் திரு வேடியப்பன் அவர்களுக்கும், கலந்து கொண்ட உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சிறப்பு விருந்தினர் மணிமேகலை சித்தார்த்தன் அவர்களுக்கு, தோழி மணிமேகலை அவர்களுக்கும் :)

1 கருத்து:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...