எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 7 ஏப்ரல், 2021

காதல் வனத்தில் காதல் பொதுமறை வெளியீடு.

 என்னுடைய காதல் வனம் நூல் வெளியீட்டு விழா கடந்த 2019 ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தன்று டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டது. அன்றே இன்னொரு கவிதை நூலும் வெளியானது. அது அமீரகத்திலிருந்து தமிழ்த்தேர் என்றொரு இணையத்தை நடத்திக் கொண்டு அதே தமிழ்த்தேர் என்றொரு அச்சு இதழையும் வெளியிட்டு வரும் திரு காவிரி மைந்தன் அவர்களின் கவிதை நூல்தான் அது. மிகப் பெரும் சைஸில் வெளியிடப்பட்ட அந்நூலைப் பற்றி நான் முன்பே நூல் பார்வை எழுதி இருக்கிறேன். 


நிகழ்வில் திரு காவிரி மைந்தன் & பதிப்பாளர், புத்தக நிலைய அதிபர் திரு.வேடியப்பன்.

முதலில் என்னுடைய காதல் வனம் நூலை வெளியிட்டு கௌரவப்படுத்தினார்கள் திரு காவிரி மைந்தன், திரு வேடியப்பன், திருமதி மணிமேகலை மணி ( சாஸ்த்ரிபவன் யூனியன் லீடர் ), திருமதி மணிமேகலை சித்தார்த், திரு. இளங்கோ, செல்வி. கவிதா சொர்ணவல்லி மற்றும் என் கணவர் :) 

அடுத்துக் காதல் பொதுமறை நூல் வெளியீட்டு விழா. 

இந்நூலை நமது செட்டிநாட்டின் ஆசிரியர் திரு. ஆவுடையப்பன் நடராஜன் அவர்கள் வெளியிட முதல் பிரதியைத் திருமதிகள் -  மணிமேகலைகள் பெற்றுக் கொண்டார்கள். 

அடுத்த பிரதியை திருமதி கலையரசி அவர்கள் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். 
இல்வாழ்க்கையின் அன்பின் நிகழ்வுகளைக் காதல் காவியங்களாக ஆக்கி அளித்திருக்கும் காவிரி மைந்தனவர்களின் காதல் பொதுமறை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.  

காதலர் தினத்தில் மட்டுமல்ல. இந்தக் காதல் பொதுமறையை வாழ்வு நெடுக இல்லற நெறியாகக் கைக்கொண்டால்  இதயங்கள் இனிமையில் நிரம்பும். வாழ்வு வசந்தமாகும். நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் பேரன்பு.  

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...