காதல் வனம் நூல் வெளியீட்டின் போது எனக்கு முழு ஊக்கம் கொடுத்தவர் அன்புத் தோழி மணிமேகலை அவர்கள். இவர் சாஸ்த்ரி பவன் பெண்கள் சங்கத்தலைவி மற்றும் தலித் பெண்கள் நலச் சங்கத்தலைவி. இரு முறை சிறப்பு விருந்தினராகப் பெண்கள் தினத்தில் அழைத்துச் சிறப்புச் செய்தவர். மகப்பேறு சிறப்பு மருத்துவர் கமலா செல்வராஜ் மற்றும் அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா ஆகியோருடன் சம மேடையில் அமர வைத்தவர்.
நமது நூல் வெளியீடு என்றால் நாம்தான் , நினைவுப் பரிசு, சிறப்புப் பரிசு வழங்கிப் பொன்னாடைபோர்த்துவோம். ஆனால் எனது நூல் வெளியீட்டைத் தனது நூல் வெளியீடாக மகிழ்ந்து எங்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்ததோடு மட்டுமல்ல. சிறப்புப் பேச்சாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கார் படத்தை நினைவுப் பரிசாகவும் வந்திருந்த பெண்களுக்குப் “ பெண் ஏன் அடிமையானாள் ?” என்ற பெரியாரின் நூலை நினைவுப் பரிசாகவும் வழங்கி மகிழ்ந்தவர்.
அவர் தனது பால்யகால நினைவுகளையும் தைர்யலெக்ஷ்மியாய்ச் சிறுவயதிலிருந்தே தன்னுள் ஊறிய புரட்சிகர சிந்தனைகளையும் தொகுத்து வரும் மகளிர் தினத்தில் நூலாக்கம் செய்யவிருக்கிறார். அந்நூலை உங்களைப் போல நானும் எதிர்பார்த்து நிற்கின்றேன்.
என் புத்தக வெளியீட்டில் என்னைச் சிறப்பு செய்த அவருக்கு நாங்களும் ஒரு பொன்னாடை போர்த்தி மகிந்தோம்.
எளிமையை விரும்பும் அன்பு மனுஷி இவர். மிகக் கூச்சத்தோடு ஏற்றுக் கொண்டார் :)
சென்னைத் தமிழில் அவர் ஃபோனில் உரையாடும்போதெல்லாம் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உடன்பிறவா சகோதரி போன்றவர்.
அனைவருக்கும் அவர் தந்த அண்ணலின் படத்தை அவரே தராமல் என்னையும் எனது கணவரையும் அவரது சகோதரியையும் மற்றவர்களுக்கு வழங்கச் செய்து பெருமைப்படுத்தினார்.
பதிப்பாளர் டிஸ்கவரி புக்பேலஸ் திரு. வேடியப்பனுடன், திரு. காவிரி மைந்தன், சிறப்புப் பேச்சாளர்களாய் வந்திருந்து கௌரவித்த திருமதிகள். மணிமேகலைகள், தம்பதியராய் எப்போதும் வந்து என் புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ளும் திரு. இளங்கோ சார் ( திருமதி பத்மா இளங்கோ மேடம் ), மணிமேகலை மேடத்தின் சகோதரி, எழுத்தாளர் செல்வி கவிதா சொர்ணவல்லி, ஆகியோருடன் எழுத்தாளர் பத்ரிக்கையாளர் திருமதி நாச்சியாள் சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தலைவியின் தலைமை உரை.
மந்தகாசப் புன்னகையோடு பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலை திருமதி பத்மா இளங்கோ அவர்களுக்கும் திருமிகு உலகம்மை அவர்களுக்கும் மணிமேகலை வழங்கிய காட்சி.
பெரியாரையும் அண்ணலையும் உள்ளத்தளவிலும் கருத்தளவிலும் மட்டுமல்ல உண்மையாகவே புகைப்படமாகவும் நூலாகவும் சுமந்து வந்து அனைவருக்கும் சேர்த்த இவரின் ஆக்கப்பூர்வமான பணி போற்றற்குரியது.
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!