எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

காதல் வனத்தின் பதிப்பாளர் வேடியப்பன்

 சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் வேடியப்பனை 2009 இலிருந்தே தெரியும். அவர் புத்தக நிலையம் ஆரம்பித்த புதிது. அப்போது அகநாழிகையின் புத்தக வெளியீடு. நாகரத்னா பதிப்பகம். லாவண்யா சுந்தராஜன், பாரா ஆகியோரின் நூல்கள் வெளியாகின. 

அதன் பின் கேபிள் சங்கர் & பரிசல் கிருஷ்ணா ஆகியோரின்  நூல் வெளியீடு அங்கே மாடியில் நடந்தது. அரங்கம் கொள்ளாத வலைப்பதிவர் கூட்டம். இதுவரை மூன்றுமுறை தன் தோற்றத்தைப் பொலிவு படுத்திக் கொண்டது டிஸ்கவரி. 

சகோ வேடியப்பனைச் சந்திக்கும்போது அவர் தன் வலைப்பதிவு பற்றிக் கூறினார். மதிவதனி கைக்குழந்தை. அதன்பின் அவரது சகோதரன் சஞ்சயின் திருமணம். வேடியப்பன் மகன், சஞ்சயின் பிள்ளைகள் என அவர்கள் குடும்பத்தினர் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. 2012 இலேயே நான் சென்னையிலிருந்து வந்துவிட்டாலும் அவ்வபோது முகநூல், கைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தோம். 

இதுவரை வெளியான பதிமூன்று நூல்களில் எனது எல்லா நூல்களும் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. எனது முதல் நூல் நண்பர் செல்வகுமாரின் மூலம்  கரிசல் மீடியாவால் ( மகேந்திரன் )  பதிப்பிக்கப்பட்டது. ஆனால் வெளியீடு 36 ஆவது புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரியின் அரங்கில்தான். மாபெரும் கூட்டம். ஓரளவு நல்ல விற்பனையும் கூட. அதன் தொகையையும் எனக்கு அவர் அப்படியே கொடுத்தார். 

எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறை அவரே வெளியிட்டார். கிருஷ்ணப் ப்ரபு அவர்களின் எடிட்டிங்குடன் அந்நூல் சிறப்பாக வெளிவந்தது. டிஸ்கவரியின் க்ளாசிக் நூல் பிரிவில் வெளிவந்த அதை கிருஷ்ணப் ப்ரபு “இந்நூல் வெகு ஜனம், மற்றும் இலக்கியம் இரண்டுக்கும் நடுவில் ஒரு தடத்தில் பயணிக்கிறது. நல்ல ரீச் ஆகும் என்றார்.” அதன்படியே அந்நூல் இரண்டாவது பதிப்பும் கண்டது. 

ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள், ஒன்பதாவது நூலான காதல்வனம் நாவல், பன்னிரெண்டாவது நூலான கீரைகள், பதிமூன்றாவது நூலான ஆத்திச்சூடிக் கதைகள் ஆகியனவும் டிஸ்கவரியின் படி பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தன. 

இவை எல்லாவற்றுக்கும் அட்டைப்படம், எடிட்டிங், பிடிஎஃப், பிரிண்டிங், டிஸ்கவரி அரங்கத்தில் வெளியீடு எல்லாமே அவர்தான். நூல்வழிச் சகோதரர்கள் என்று அவரையும் சஞ்சுவையும் கூறலாம். 

பார்க்கப் பார்க்கவே டிஸ்கவரியும் சென்னையின் முக்கிய நூல் நிலையத்தில் ஒன்றாகவும், சர்வதேச புத்தகக் கண்காட்சிகளில் பங்கு கொண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனது சிவப்புப் பட்டுக்கயிறு நூலையும் ஷார்ஜா கண்காட்சிக்குக் கொண்டு சென்று ஜெர்மனி வரை ( நிம்மி சிவா அவர்கள் ) சேர்த்தது. அதன் இன்றைய பிரம்மாண்ட வளர்ச்சியை அதன் வேரிலிருந்து விழுது விட்டிருப்பது வரை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். 

எனது காதல் வனம் நாவல் வெளியீட்டில் நண்பர் ( கல்லூரித்தோழி ஏர்னஸ்டினின் கணவர் ) அருளானந்த குமார் சார் அவர்கள் கலந்துகொண்டு நிறையப் புகைப்படங்கள் எடுத்தார்கள். அருமையான புகைப்படங்கள். அழகான கோணங்கள். நிகழ்வு முழுவதையும் கவர் செய்து அனைவரையும் எழிலார்ந்த சிற்பம் போல் செதுக்கிக் கிட்டத்தட்ட 500 புகைப்படங்கள்  எடுத்து அனுப்பினார்கள். இந்த அன்பிற்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம். மலர்ந்த புன்னகையோடு சகோ வேடியப்பன் உரையாற்றிய இந்தப் புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவர் மட்டுமல்ல இதில் அவர் மனைவி மகன் எனக் குடும்பமே பங்கேற்றது குறித்து நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி. பதிப்பாளரான அவர்களுக்கு அன்புத் தோழி சாஸ்திரி பவன் யூனியன் லீடர் மணிமேகலை அவர்கள் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்ததும் இதில் இனிக்கும் நிகழ்வு. இனி அனைத்துப் புகைப்படங்களும் உங்கள் பார்வைக்கு. கொஞ்சம் அவசரப் படாதீங்கன்னா இந்தத் தேனக்கா கேக்குறாங்க இல்ல. இப்ப புக் ஃபேர்ல உடனடியா புக் வெளியிடனும்னு என்ன அவசரம். கொஞ்சம் ஆறப்போடுங்க. நல்லா செதுக்கி வெளியிடுவோம். 


எல்லாத் தலைப்பிலயும் எழுதக் கூடாது. குறிப்பிட்ட தலைப்புகளிலேயே நல்லதாகொடுங்க.
ப சிங்காரம் உங்க ஊர் பத்தி எல்லாம் எழுதி இருக்காரு. அது போல எழுதுங்க, இதுபோல எழுதுங்கன்னு எல்லாம் சொல்லல. மேலும் பிரபலமடையிறதுக்காக,  பரபரப்புக்காக எழுத வேண்டாம். யதார்த்தமா எழுதத் தொடங்கினீங்கன்னாலே உங்க ஊர் , வாழ்க்கை இது பத்தி எழுதினீங்கன்னாலே போதும். 

இதெல்லாம் கேக்காம உடனடியா புக் வெளியிடணும்னு அவசரப் படுறாங்க அக்கா. பாருங்க கவிதாவும் நாச்சியாள் சுகந்தியும் ஷொட்டும் கொட்டும் வைச்சிட்டுப் போயிட்டாங்க. :) 

எனது நூல் வெளியிடப்பட்டதோடு காவிரி மைந்தன் அவர்களின் நூலும் ( காதல் பொதுமறை ) வெளியிடப்பட்டது. அன்று காதலர் தினம் என்பதால் காதல் ஜோடிகளான பதிப்பகத்தாருக்கும் மணி மேடம் கொடுத்த பொன்னாடையை அனைவரும் சேர்த்துப் போர்த்தி மகிழ்ந்தோம். 


(மரு) மகனார் முகிலின் வெட்கம். 

நானும் தயார் என்கிறார் . பதிப்பகம் & புத்தக நிலையத்தோடு சகோ வேடியப்பன் சினிமா எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். மகனார் முகில் புது ஹீரோ போல் போஸ் கொடுக்கும் ஃபோட்டோக்கள் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. அன்பும் நன்றியும் கலந்து கொண்ட உறவினர் , நண்பர்கள், வலையுலகத்தினருக்கு. மேலும் அன்பு நன்றிகள் சகோ வேடியப்பன் குடும்பத்தாருக்கும், நண்பர் அருளானந்த குமாருக்கும். 

3 கருத்துகள்:

 1. வணக்கம், வேடி வாசிப்பாளர்களை உருவாவாக்கும் நல் மனிதர்.நன்றி

  பதிலளிநீக்கு
 2. நன்றி வெங்கட் சகோ

  நன்றி தமிழ்த்தேசன்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...