எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

செவ்வாய், 20 அக்டோபர், 2020

இன்னும் சில சந்திப்புகள்.

 

ஜம்முவுடன் இரண்டாவது சந்திப்பு வைல்ட் அமேஸானில் :) 

பார்பக்யூ உணவுகள். மிக அருமையான விருந்து. புன்னகை அரசி ஜம்மு என்ற ராஜேஸ்வரி மலரவனுக்கு நன்றி :) 


ஜம்முவுடன் வைல்ட் அமேசானின் அல் அராபில்... ஜூலை 10 2011 இ்ல்.. என முகநூலில் பதிந்திருக்கிறேன் :) இது அதே மாலையில் மெரீனாவில் ஸ்ரீஜி & ஃபாமிலி்யுடனும்., ஜம்முவுடனும். எங்கள் சென்னை முக நூலர்களுடன். ஜூலை 10, 2011


சென்னைப் பெண் வலைப்பதிவர்கள் சந்திப்பு ஒன்று நிகழ்த்தவேண்டும் என லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜாம்மா கூறினார்கள். அதன்படி கவிதா சொர்ணவல்லி ஹுசைனம்மா, மணிமேகலை மேம், கீதா இளங்கோவன், ரம்யா ஈழவாணி, ருக்கும்மா, வசு, மதுமிதா, அனுராதா, விஜயலெக்ஷ்மி ஆகியோர் சந்தித்தோம்.

மே 20., 2011., மெரீனாவில்., ஃபேஸ்புக்கர்ஸ் அண்ட் லேடி ப்லாகர்ஸ்., கிரிஜாம்மாவுடன்.நன்றி கிரிஜாமேம். 


ஸ்ரீஜியுடன் சிம்ரனில்.. மே 9. 2011. சிம்ரன் ஆப்பக்கடையில் ஸ்ரீஜி வந்திருந்தபோது தமிழ், நான், காவேரி கணேஷ், மணிவண்ணன், ஜேபி, செல்வா இன்னும் பலர் உணவருந்தினோம். பனீர் ஆப்பம் & தேங்காய்ப்பால். இன்னும் விதம் விதமான ஆப்பங்கள் உண்டு. ஏவிஎம் எதிரில் உள்ளது இக்கடை. திரைப்படங்களில் விவேக்குடன் காமெடி ட்ராக் நடிக்கும் நடிகர் ஒருவரையும் கண்டோம் அங்கே. அருமையான உணவுக்கு நன்றி ஸ்ரீஜி 


மார்ச் 18 மச்சி வீட்டில்:) 2011. இளங்கோ மச்சி வீட்டில் செல்வா வீடு, கிஷோர் வீடு, நாங்கள் , மதுமிதா ஆகியோர் சந்தித்தோம். ப்ரகாஷ் அருமையான உணவு அளித்தார். கீதா இந்த விருந்தை மிக அருமையாகப் ப்ளான் செய்திருந்தார். சப்பாத்தி, புலவ், முளைகட்டிய பயறு வகைகள், வெந்தயம், சாலட்ஸ், ஐஸ்க்ரீம் என்று சிறப்பாக இருந்தது. நன்றி ப்ரகாஷ், இளங்கோ மச்சி & கீதா. 


OCT 14TH WELCOME MEET TO VETRI AT RESIDENCY. மதுரையைச் சேர்ந்த முகநூல் நண்பர் வெற்றிவேல் அவர்கள் வந்தபோது அவர்கள் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற விருந்து. அன்பு, செல்வா,செந்து, மது, மது, வசு, தமிழ், கயல் கலந்து கொண்டோம். நன்றி வெற்றி சார்.


ஜீவாவின் திரைச்சீலை. டிஸ்கவரியில் ஜூலை 17. 2011 இல். திரைச்சீலை பற்றிய விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வலைப்பதிவர்கள் கலந்து கொண்டார்கள். நான், பத்மா, வசு ஆகியோர் கலந்து கொண்டோம். ராஜன் குறை இந்நூல் பற்றிய விமர்சனங்களை முன்வைத்தார். 


வாசமும் வண்ணமும்.ஜூலை 16 2011 இல் அம்பாசடர் பல்லவாவில். தோழி அனுராதா நிகேதும், மீனாட்சி மதனும் அம்பாசடர் பல்லவாவில் ஓவியக் கண்காட்சி நடத்தினார்கள். ஜீவா நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அவர் வரைய அந்த ஒரே ஒரு ஓவியத்தை நாங்கள் அனைவரும் வரைந்து எங்கள் ஓவியத் திறமையை ஒட்டுமொத்தமாகக் காட்டினோம்.! மேலும் அது  யூ ட்யூபிலும் உள்ளது. ! 


ஸ்ரீஜியின் இன்னிசை நிகழ்ச்சி.. உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன்னில். ஜூன் 25 . 2011. மிக அருமையான இசை நிகழ்வு. விதம் விதமான தாள வாத்யங்களை அன்று நேரில் கண்டேன். வித்யாசமான இன்னிசை. செவிக்கும் வயிற்றுக்கும் உணவு கிடைத்தது. நன்றி ஸ்ரீஜி. 


OCT 18TH YUVANS B DAY & FEAST AT VASU'S HOUSE. எங்கள் வசுவின் சின்ன மகன் யுவனின் பிறந்தநாள் கொண்டாட்டம். மறக்க இயலாதது. அருமையான விருந்து. அனைத்து முகநூல் நண்பர்களும் சந்தித்தோம். நன்றி வசு. 

இவள் கிஷோரின் பெண். எல்லா சந்திப்புகளிலும் என்னைத் தன் காரில் கூட்டிச் சென்று வீட்டில் கொண்டு விட்ட கயலின் உதவியை மறக்க இயலாது. நன்றி கயல் :)

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...