செவ்வாய், 30 ஏப்ரல், 2019

புல்லா ரெட்டியும் ப்ளட் ரிப்போர்ட்டும்.

2161. அடுத்தவர்களின் சின்னச் சின்னச் சந்தோஷங்களைக் கூட அனுமதிக்காத மனிதர்களுக்கு மத்தியில்தாம் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

2162. உருளைக் கிழங்கையே விதம் விதமாத் தர்றாய்ங்க. இந்த சோறு இட்லி இதெல்லாம் உங்கூருக்கு வந்தா கிடைக்காதாடா.

ப்ரெட்டும் சீஸ் ஸ்ப்ரெட்டும் சாப்பிட பழகிக்கங்கம்மா . டெய்லி ப்ரேக்ஃபாஸ்ட் அதுதான். அப்புறம் தெனம் 5 கிலோமீட்டராவது வாக் போகணும் நீங்க. ஏன்னா இங்கே நிறைய நடக்கணும்.

விசா எடுத்துறாதே . யோசிச்சு சொல்றேன் : D

2163. அதிகம் நடந்தால் பழைய செருப்பும் கடிக்குது :D :D :D
#walk-o-maniac

திங்கள், 29 ஏப்ரல், 2019

உயிர் ஒன்று உடல் இரண்டு. தினமலர் சிறுவர்மலர் - 14.

உயிர் ஒன்று உடல் இரண்டு.
அதென்ன உயிர் ஒன்று உடல் இரண்டு. அப்படி யாரும் இருக்க முடியுமா. இருந்தாலும் எப்படி வாழ முடியும். எப்படி இரு உடலில் ஒரு உயிர் இருக்கும், கேட்கவே விநோதமாக இருக்கிறதல்லவா குழந்தைகளே. அது எப்படி எனச் சொல்கிறேன் கேளுங்கள்.
மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்த போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை ஈசன் உண்டு கண்டத்தில் நிறுத்தி உலகைக் காப்பாற்றினார்.
அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், லெக்ஷ்மி, சந்திரன், ஐராவதம், உச்சைசிரவஸ், அமிர்தம் போன்றவை வெளிப்பட்டன. இதில் அமிர்தம் கொண்ட கலசத்தை ஏந்தியபடி தன்வந்திரி வெளிவந்தார். இந்த அமிர்தம் சாகாவரம் கொடுக்கக் கூடியது. இதை வேண்டித்தானே அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள்.
அதனால் அமிர்தம் கிடைத்தவுடன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அதை அடையப் போட்டி ஏற்பட்டது. ஒரே களேபரம். பார்த்தார் விஷ்ணு . உடனே மோகினி அவதாரம் எடுத்து தன்வந்திரியின் கையில் இருந்த அமிர்த கலசத்தைத் தன் கையில் வாங்கி அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதாகக் கூறினார்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

தினமலர் திண்ணையில் விடுதலை வேந்தர்கள்.

தினமலர் திண்ணையில் முன்பே விடுதலை வேந்தர்கள் நூல் பற்றியும் வேலு நாச்சியார் பற்றியும் வெளியாகி உள்ளது.

கடந்த 21. 4. 2019 திண்ணையில் ஏவுகணை நாயகன் என்ற தலைப்பில் விடுதலை வேந்தர்களில் இருவர் பற்றி - ஹைதர் அலி, திப்புசுல்தானின் வீர தீரங்களும் வெளியாகி உள்ளது.

நன்றி திண்ணை, தினமலர் , மதுரை, திருச்சி, சேலம் , ஈரோடு பதிப்பு. & நன்றிகள் திரு. ப. திருமலை சார். 

சனி, 27 ஏப்ரல், 2019

வெண்புரவியில் ஒரு மாப்பிள்ளை அழைப்பு.

காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பம் வாழ்வில் கசக்குமா இல்லை ருசிக்குமா. :) என்ற பாடலை ஹம் செய்துகொண்டிருந்தேன். உண்மையாகவே உறவினர் ஒருவரிடமிருந்து ஃபோன். இருமணம் கூடிய திருமணத்துக்கு வரச் சொல்லி அழைப்பு.

இன்றைய காலகட்டத்தில் ஜாதி மதம் இனம் தாண்டிய திருமணங்கள் பெருகிவிட்டன. கட்டாயத்துக்காக ஒரே ஜாதியில் திருமணம் செய்து  பிரிவதை விட பிடித்த ஒருவரை எந்த ஜாதி மதம் இனமானாலும் திருமணம் செய்து வாழ்நாள் முழுக்க மனநிறைவோடு வாழ வேண்டும் என்பது என் கருத்து.

நிற்க. இப்போது எங்கள் உறவினர் இல்லங்களில் நகரத்தார் திருமணங்களோடு பையன் மற்றும் பெண்ணின் விருப்பத்திற்கேற்ப ரெட்டியார் இல்லத்து மணமகள், மராட்டிய வம்ச மணமகன் ஆகியோர் மணமக்களாக பையன் பெண்ணின் பெற்றோரால் முழுமனதோடு ஸ்வீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். காலத்துக்கேற்ற மாற்றம். ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றமும் கூட.

இவர்/இவள் எனக்கு சகலவிதத்திலும் பொருத்தமானவன்/ள் என்று பையன்/பெண் பெற்றோரிடம் தெரிவிக்கும் துணிவு பெற்றிருப்பது இத்திருமணங்களின் சிறப்பு. வாழ்க மணமக்கள். அத்திருமண வைபவத்தின் ஒரு சில துளிகளைப் பார்ப்போம். ( மறுநாள் இன்னோரு திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டி இருந்ததால் முதல் நாள் நிகழ்வுகளை மட்டும் எடுத்தேன் )

தஞ்சாவூரில் ஒரு உறவினர் திருமணம். நகரத்தார் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. மணமகள் எனக்கு மகள் முறை. மாப்பிள்ளை மராட்டியர். தஞ்சையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே புலம் பெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் திருமணத்தில் மணமகள் தலையில் முந்தானையை முக்காடாக ( சரிகை மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகள் ) அணிவித்து அமர வைப்பது வெகு அழகு.


வியாழன், 25 ஏப்ரல், 2019

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

மின் புத்தகங்களும் புத்தகக் குழந்தைகளும்.


மின் புத்தகங்களும் புத்தகக் குழந்தைகளும்.


புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே தினம் இன்று புத்தக பதிப்புரிமை நாளாகவும் கொண்டாடப்படுவது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. ஏனெனில் ஆன்லைனிலேயே அனைத்தையும் வாசிக்கும் தெரிந்துகொள்ளும் ஒரு தலைமுறை உருவாகிவிட்டது.

திங்கள், 22 ஏப்ரல், 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.

1181. ஒரம் ( குழந்தைக்கு ) - கைக்குழந்தைகளுக்கு கழுத்தில் விழும் சுளுக்கு. இதை நீக்க புடவையில் குழந்தையைப் போட்டு உருட்டுவார்கள். 

1182. ஒறங்க - தூங்க.   

1183. குத்தாலந்துண்டு - பெண்கள் குளிக்கும்போது ( முடிந்துகொண்டு )   உடுத்தும் துண்டு. இருபுறமும் கரைகொண்டு சிறிது கெட்டியான பருத்தித் துணியில் அடர் வெளிர் நிறங்களில் இருக்கும். 

1184. மோந்தூத்தி - நீரை முகர்ந்து ஊத்தி. 

1185. ரொட்டிமுட்டாய் -பிஸ்கட் , சாக்லெட் , பிஸ்கட்டை ரொட்டி என்றும் சாக்லேட்டை மிட்டாய் என்றும் கூறுவார்கள்.  

சனி, 20 ஏப்ரல், 2019

சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் கூறும் க்ரவுண்ட் ரியாலிடீ.

இந்தவார சாட்டர்டே போஸ்டில் திரு விவிஎஸ் சார் கூறும் கிரவுண்ட் ரியாலிடீ பற்றித் தெரிந்துகொள்வோம். 

கவனிக்க வேண்டிய கிரவுண்ட் ரியாலிடீ !

கையகலச் சொந்த நிலம்.  யாருக்குத்தான் இல்லை இந்தக் கனவு.  நியாயமான ஒன்றும்தானே !  ஆனால் அதை வாங்குவதில்தான் நமக்கு எத்தனை அவசரம் !

1200 சதுர அடி.  செங்கல்பட்டிரிலிருந்து 2 கிலோ மீட்டரில்.  ரூ 5000 முதல் தவணை.  பின்னர் ரூ 500  இ எம் ஐ.  இந்த வகையில் அடிப்படை விவரங்கள் கொண்ட சுவரொட்டி. 

கற்கண்டு போல் தண்ணீர்.  5 அடி ஆழத்தில்.  உடனடியாக வீடு கட்டி குடி போகலாம்.  சுற்றிலும் இருக்கும் வீடுகளின் ஃபோட்டோ.  நாளேட்டில் விளம்பரம்.  

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்த அரசன். தினமலர் சிறுவர்மலர் - 13.


இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்த அரசன்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று திருக்குறளில் படித்திருப்பீர்கள் குழந்தைகளே. ஒரு மன்னன் தனக்கு இன்னா செய்த எதிரி மன்னனையும் தன் சகோதரனையும் கூட மன்னித்து அவர்களுக்கு இனியன செய்ததைப் படிக்கப் போகிறோம் வாருங்கள்.
மதுரையை இராஜேந்திர பாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது சகோதரன் பெயர் இராஜசிங்கபாண்டியன், இராஜேந்திர பாண்டியன் மிகுந்த இறைபக்தி கொண்டவன். நேர்மையானவன், வீரத்திருமகன். ஆனால் அவனது தம்பியான இராஜசிங்க பாண்டியனோ வஞ்சக எண்ணம் கொண்டவன். இராஜேந்திர பாண்டியனின் மேல் பொறாமை கொண்டவன்.
ஒரு முறை காடுவெட்டிச் சோழன் என்ற மன்னன் மதுரை சொக்கநாதரைத் தரிசிக்க விரும்பினான். எனவே இராஜேந்திர பாண்டியனுடன் நட்புக் கொண்டு மதுரை வந்து தரிசித்துச் சென்றான். பாண்டியனை நேரில் பார்த்ததும் அவனது நற்குணங்களால் கவரப்பட்டு அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்து இரு நாடுகளுக்கும் இணக்கம் ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

வாக்கைக் காப்பாற்றத் தன்னையே கொடுத்த சக்கரவர்த்தி . தினமலர் சிறுவர்மலர் - 12.

வாக்கைக் காப்பாற்றத் தன்னையே கொடுத்த சக்கரவர்த்தி :-
ராஜாக்கள் தன்னை நாடி வருவோருக்குப் பொன்னைக் கொடுக்கலாம், பொருளைக் கொடுக்கலாம். அன்னமிடலாம், ஆனால் தன்னை நாடி வந்த புறாவுக்காகத் தன்னையே கொடுத்த ஒரு அன்பான சக்கரவர்த்தி பத்தித் தெரிஞ்சுக்கப் போறோம்.
சோழ மன்னர்களில் ஒருவர்தான் சிபிச் சோழர். தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவர் எதையும் கொடுக்கத் தயாரா இருப்பவர். இவர் ஒரு முறை தன்னுடைய அரண்மனையின் தோட்டத்தில் அமர்ந்திருந்தார்.
சுற்றிலும் மரங்களும் செடிகளும் கொடிகளும் அடர்ந்து பல்வேறு வகைப் பூக்களால் வாசனையாயிருந்தது அந்த நந்தவனம். மன்னர் அமைச்சருடன் உரையாடியபடி அமர்ந்திருந்த போது வானத்தில் பல்வேறு பறவைகள் பறந்து களித்துக் கொண்டிருந்தன.

திங்கள், 15 ஏப்ரல், 2019

தேஜேஸ்வர் சிங்கும் இண்டியானா ஜோன்ஸும்.

2141. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

2142. ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன்
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே

சனி, 13 ஏப்ரல், 2019

சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் கூறும் அந்த ஐந்து பேருக்கு நன்றி. !

சாட்டர்டே போஸ்டில் இன்று ஒரு வித்யாசமான தகவலுடன் திரு விவிஎஸ் சார் அவர்கள் உஙக்ளை சந்திக்கிறார்கள். 
முன்னோர் அஸ்தியை வைத்து செடியை நட்டுவிடுகிறார்கள். அப்படி வளர்ந்த செடி இது. வருடா வருடம் குடும்பத்தினர் அங்கே சென்று தியானம் செய்கிறாரகள்.

அந்த ஐந்து பேருக்கு நன்றி !

“ஸார்,  நா எல் ஐ சி-ல ஒரு ஜீவன் ஆனந்த் பாலிஸி போட்டேன்.  ஒரு லட்சத்துக்கு.  15 வருஷ டேர்ம்(term).  7200 ரூபா பிரீமியம்.  அடுத்த வருஷம் மெச்சூர் ஆகுது.   மெச்சூரிடீ அமவுண்ட் 140000 ரூபா வரும்ன்னு சொல்றாங்க.  என்ன ஸார் இது அநியாயமா இருக்கு ?  நா கட்டினது ஒரு லட்சத்தி பத்தாயிரம்.  அதுக்கு வெறும் முப்பதாயிரம் ரூபா மட்டும்தான் பெனிஃபிட்டா ?”

ஒரு தொலைக்காட்சி நேரலையில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.  கேள்வி என்று கூடச் சொல்ல முடியாது.  புகார்.

இந்தியாவிலேயே, ஏன் இந்த வேர்ல்ட்லேயே ஜீவன் ஆனந்த் பாலிஸி ஒரு பெஸ்ட் பாலிஸி.  (கரகாட்டக்காரன் கவுண்டமணி வாய்ஸில் படிக்கவும்.)

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

உள்ள நலன் அழிந்ததால் இழிந்த இராவணன். தினமலர் சிறுவர்மலர் - 11.

உள்ள நலன் அழிந்ததால் இழிந்த இராவணன்.
ள்ளம் கெடாதவரை எதுவுமே கெடுவதில்லை. உள்ளம் கெட்டால் அனைத்தும் கள்ளமாகும், அது ஒருவனை மலையில் இருந்து மடுவில் மட்டுமல்ல மரணத்துக்கும் செலுத்தும் என்று ஒருவனின் வாழ்க்கை நமக்குப் பாடம் புகட்டுகிறது.
அப்படி உள்ள நலன் அழிந்ததால் இழிந்தவன் சாதாரணன் அல்ல. உலகனைத்தையும் வென்றவனும், மூன்று கோடி வாழ்நாள் உடையவனும், முயன்று பெற்ற தவப்பயனால் யாராலும் வெல்லப்படமாட்டான் என சிவபெருமானே மனமகிழ்ந்தருளி வரம் வழங்கிய தசமுகன் எனப்படும் இராவணன்தான் அவன். அவனைப்பற்றிப் பார்ப்போம் குழந்தைகளே.
தென்கடலில் கெம்புப் பதக்கம் போல் ஒளிவீசி மின்னுகிறது இலங்கை மாநகரம். அங்கே அயோத்திக்கீடாக ஏன் அதை விடவும் அழகான மாட மாளிகை கூட கோபுரங்கள் எல்லாம் ஒளிவீசிப் பொலிகின்றன. அவற்றின் நடுவில் அதோ விஸ்வகர்மா சமைத்து விண்ணளாவி உயர்ந்து நிற்கின்றதே அந்த அரண்மனைதான் இலங்காதிபதி இராவணனின் மாளிகை.
இராவணனின் பெற்றோர் புலஸ்தியரின் பேரனான விஸ்ரவ முனிவரும், அசுரகுலத் தலைவனான கமாலியின் மகள் கேசியும் ஆவார்கள்.. இராவணனின் கூடப்பிறந்தவர்கள் விபீஷணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை. இவனது மனைவி மண்டோதரி. மகன்கள் இந்திரஜித்து, அட்சய குமாரன், அதிகாயன், பிரகஸ்தன், திரிசரன், நராந்தகன், தேவாந்தகன் ஆகியோர்.

புதன், 3 ஏப்ரல், 2019

அரசியலில் பெண்களின் பங்கு.

அரசியலில் பெண்களின் பங்கு.


நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில் நாடாளுமன்றத்தில் 9 சதமும் பாராளுமன்றத்தில் 11 சதமுமே பெண்கள் பங்களிப்பு செய்து வருகிறார்கள். ஆனால் மக்கள் தொகையில் நாம் சரிபாதி இருக்கிறோம்.
பெரிய நிறுவனங்களின் உயர் பொறுப்பிலிருந்து பொதுமக்களுக்கான களப்பணியில் இருக்கும் வரை எத்துறையில் பெண்கள் ஈடுபட்டாலும் அரசியல் என்றால் கொஞ்சம் பின்வாங்கவே செய்கின்றார்கள். சமூக சேவையில் ஈடுபடும் பெண்கள் கூட அரசியல் என்றால் தேர்தல் குளறுபடிகள், கொலைகள், அடியாட்கள் அராஜகம், சட்டமன்ற அமளி , பாராளுமன்ற ஒத்திவைப்பு, புறக்கணிப்பு போன்றவை பார்த்து ஒதுங்கி விடுகிறார்கள்.
பார்க்கப் போனால் சங்ககாலம் தொட்டு இக்காலம் வரை அரசியலில் பெண்களின் பங்களிப்பு இருந்து வந்தே இருந்திருக்கிறது என்றாலும் அது கணிசமான அளவு உயரவில்லை. அதியனை நேர்ப்படுத்திய ஔவை, ஜனகரின் அவையில் இருந்த கார்க்கி வாசக்னவி இவர்கள் மட்டுமல்ல, வேலு நாச்சியார், ஜான்சி ராணி, மங்கையர்க்கரசியார், ஆகியோரும் கூட அரசாட்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களே.