எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஜூலை, 2017

வலையுலக திரையுலகச் சந்திப்புகள்.

வலையில் எழுத ஆரம்பித்து அவை பத்ரிக்கைகளில் வெளியாகத் துவங்கியபின் சில பல வலையுலக திரையுலகப் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

அவற்றுள் சில சந்திப்புகளை இங்கே பகிர்ந்துள்ளேன்.


சென்னை லாமிகிளில் எங்கள் முகநூல் நட்பு வட்டத்தின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் நண்பர்களின் அன்பு அழைப்புக்கிணங்க இந்த வி ஐ பி வந்திருந்தார்.

அதற்கு முன்பே முகநூல் வலைத்தளப் பகிர்வுகளில் ஆச்சியின் தீபாவளிப் பலகாரங்கள் அட்டகாசம் என்று கருத்துரை நல்கியிருந்தார்.

நல்ல படங்களின் மூலமே அறிந்திருந்த மிகவும் எளிமையான இந்த மனிதரைச் சந்திப்போமென்று நினைக்கவேயில்லை.

அனைவருடனும் உரையாடிப் புகைப்படம் எடுத்துக் கொண்டார் நண்பர் இயக்குநர் சேரன். அதன்பின்னும் சிலமுறை நட்புவட்டங்களிலும் விசேஷங்களிலும் சந்தித்திருக்கிறோம்.

இதில் இருக்கும் விஐபிக்களின் லிஸ்ட் பெரிது. அனைவரும் நண்பர்கள் என்றாலும் எழுத்தாளர் மதுமிதா, மென்சஸ் குறும்படம் எடுத்த கீதா, இயக்குநர் மாகி, டெக்கான் க்ரானிக்கிள்ஸ் எடிட்டர் பாகி, இயக்குநர் நவீன், நடிகர் நிதீஷ்குமார் ஆகியோருடனான சந்திப்பு நம்மவீடு வசந்தபவனில் நிகழ்ந்தது.




இசையுலக ஜாம்பவான் ஸ்ரீஜியுடனான முகநூல் சந்திப்பு சென்னை மெரினா பீச்சில் நிகழ்ந்தது. கூடவே ஒன்பது ஆண்டுகளாய் நீடித்து நிலைத்து நிற்கும் எங்கள் முகநூல் இன்பாக்ஸ் நட்புக் குழுமத்தினர். :)

அக்கார்டில் நிகழந்த சந்திப்பில் பாகி, மற்றும் இயக்குநர் நண்பர் செல்வகுமாருடன் ரங்க்ஸ்.

மக்கா புகைப்பட ஸ்பெஷல் ஜெயராஜ் பாண்டியன் மிக அருமையாகப் புகைப்படம் எடுப்பார். அவருடன் நம் இளங்கோ மச்சி, மாகி, பாகி ஆகியோருடன் ரங்க்ஸும்.

தங்கை கயலுடன் சென்று உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் அவர்களை அவர்களது அபிராமபுரம் இல்லத்தில் ஒரு முறை சந்தித்தேன்.

நண்பர் ஷிகான் ஹுஸைனி அவ்வப்போது எனது வலையைப் படிப்பதாகச் சொல்வார். அவரிடம் ஓரிரு பேட்டிகளும் எடுத்துப் பத்ரிக்கைகளுக்கு அனுப்பி இருக்கிறேன்.

டிஸ்கவரியில் நண்பர் பொன் காசிராஜனுடன் ஸ்விஸ்ஸிலிருந்து வந்திருந்த ( செம்மொழி மாநாட்டுக்காக ) நண்பர் அருள்ராசா அவர்களுடன்.
பெருமதிப்பிற்குரிய பெரிய நண்பர் நாங்கள் பாட்டையா என்று அழைக்கும் நண்பர் நடிகர் பாரதி மணி ஐயாவுடன்.


காதல் ஆழியின் கலந்துரையாடலின் போது சந்தித்த ஞாநி சங்கரன் அவர்கள்.அதன்பின்னர் ஒரு திரைப்பட ப்ரிவியூவிலும் சந்தித்திருக்கிறோம்.

நாடகக் கலையின் வாத்யார் திரு வெளிரங்கராஜன் அவர்களுடன் மாணவிகளாய். அன்று அவர் கூறிய அம்பையின் ஆற்றைக் கடத்தல் எங்களை உணர்வுபூர்வமாக வேறொரு உலகத்துக்கு இட்டுச் சென்றது. மிக வித்யாசமான அனுபவம்.  


நண்பர் திரு மிஷ்கினுடன் யுத்தம் செய் கலந்துரையாடலில்.

ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நாஞ்சிலாருக்கு நடந்த பாராட்டு விழாவில் கிழக்குப் பதிப்பகம் பத்ரி அவர்களுடனும் தோழி எழுத்தாளர் மதுமிதாவுடனும் .
ஸ்பெஷல் நீயா நானாவில் சந்தித்த சின்னத்திரைப் பிரபலங்களுடன்.
அந்நிகழ்விலேயே நடிகை வடிவுக்கரசி அவர்களுடன்.
அந்நிகழ்வின் ஆங்கர் திரு கோபிநாத் உடன். 
ஒரு திருமணத்தில் நம் உரத்த சிந்தனை அமைப்பினருடன்.
ஹோட்டல் பல்லவாவில் மீனாக்ஷி மதன், அனுராதா நிகேத் நடத்திய ஒரு ஓவியக்கண்காட்சியில் சிவாஜி சந்தானம் சாருடன்.

சூரியக்கதிருக்காக முப்பெரும் தேவியருடன் எடுத்தது. நாட்டிற்காகப் பாடுபட்ட வீராங்கனைகள், ப்ரிகேடியர் முத்துலெக்ஷ்மி, ப்ரிகேடியர் துர்காபாய், ருக்மணி சேஷாயி அம்மாவுடன்.


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த திரு. உதயன் அவர்கள்.

தகிதா பதிப்பகம்  நண்பர் திரு மணிவண்ணன், நாணற்காடன் சரா, தோழிகள் பூவரசி ஈழவாணி ஜெயதீபன், வசுமதிவாசனுடன்.
பொதிகையின் காரசாரத்தின்போது சந்தித்த முனைவர்கள்.  முனைவர் ஜேனட் செல்வகனி, முனைவர் ஷைலா சாமுவேல். இன்னொருவர் முனைவர் பத்மாவதியா, சத்யவதியா... ஹ்ம்ம் நினைவில் இல்லை. !


5 கருத்துகள்:

  1. உங்கள் பிரபலம் வியக்க வைக்கிறது யூ ஆர் எ செலிப்ரடி

    பதிலளிநீக்கு
  2. படங்களுடன்
    தங்கள் ஆளுமைச் செல்வாக்கு
    புலப்படுகிறதே
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. APPIDI ELLAM ILLA BALA SIR :)

    NANDRI JAYAKUMAR SAGO

    NANDRI SRIRAM :)

    NANDRI DD SAGO

    NANDRI YARLPAVANNAN SAGO.


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...