வியாழன், 27 ஏப்ரல், 2017

சில மொக்கைக் குறிப்புகள் :- 6.

** அளவுகதிகமாகவே   வழங்கிவிட்டாய்
உப்புக்கண்ணீர் வடிக்கின்றன
நன்றிமிகு கண்கள்.

** தொலைத்துத் தொலைத்துத்
தேடுகிறாய்
தொலைந்து தொலைந்து
கிட்டித் தொலைக்கிறேன்.

** கவலைத் துளிகளைத் திருடிக்
கண்ணீர் வடிக்கிறாய் மேகமாய்
பரிதவித்து நனைகிறேன் பசும்புல்லாய்.

** மறைந்தும் குறைந்தும்
காணாமல் போய்விடுகிறாய்
நிலவே
உன்னைத் தேடித் தேடிக்
கண்டுபிடிக்கும்போது
அமாவாசை வந்துவிடுகிறது
அசந்தர்ப்பமாய்.

**மழை முழுக்காட்டில்
முழுக்க நனைந்துவிடுகின்றன
இலையின்கீழ் ஒளிந்துள்ள பூக்களும்.

**இருக்கும் இடத்தை வெட்டி
இல்லாத இடத்தில் பதியமிடுவது
அரேஞ்ச்ட் மேரேஜ்
இருக்கும் இடத்திலிருந்து
இல்லாத இடத்திற்கு
மகரந்தம் பறப்பது
லவ் மேரேஜ்

**கரங்கள் கூப்பினாலும்
கள்ளத்தனத்தையும்
குள்ளநரித்தனத்தையும்
காட்டிக்கொடுத்துவிடுகின்றன கண்கள்.

**திசையறியாது பறந்து
முகத்தில் மோதிய
வண்ணத்துப்பூச்சியால்
வண்ணமயமாகிவிட்டதாக
நினைத்துக் கொள்கிறது
கோவேறு கழுதை

**ஒன்றைத் தொட்டு ஒன்றெனப்
பலவற்றின் பின் திரிந்த வண்டு
அடிபட்டுவிடுகிறது
கதவடைத்த வீட்டின் ஒளி ஈர்க்க
ஜன்னல்வழி நுழையும்போது.

** ஒரு சந்தி விரதம்
இரு சந்தி தியானம்
இவை களைந்த காமம்
நிறுத்துகிறது முச்சந்தியில்.


டிஸ்கி :- இதையும் பாருங்க.

சில மொக்கைக் குறிப்புகள்: - 1

சில மொக்கைக் குறிப்புகள் :- 2.

சில மொக்கைக் குறிப்புகள் :- 3. 

சில மொக்கைக் குறிப்புகள் :- 4

சில மொக்கைக் குறிப்புகள் :- 5

சில மொக்கைக் குறிப்புகள் :- 6

சில மொக்கைக் குறிப்புகள் :- 7

 


3 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைத்தும் அருமை. தொடரட்டும் குறிப்புகள்!

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Venkat sago :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...