வியாழன், 2 மார்ச், 2017

திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

திருப்பூரில் ஆரவாரமிக்க குமரன் ரோட்டில் உள்ள மிக அமைதியான ஹோட்டல் தி ஹோம். ELIGANT ROOMS. அழகான காரிடார். ரிஸப்ஷன் தான் சின்னமா இருக்கு. நாம் என்ன அங்கேயேவா ஃபுல் டைமும் உக்காந்திருக்கப் போறோம்.பட் நல்ல வெல்கமிங் ரிஸப்ஷன். 

மிக அழகான ரிஸைடிங் ப்ளேஸ். விசாலமான ரூம்.  நல்ல வசதியான கௌச். ரீடிங் அண்ட் காஃபி சாப்பிட ஏதுவான இடம்.
டைனிங் டேபிள் வித் சேர். கீழே சில்வர் டஸ்ட் பின்.
இண்டர்காமுக்கு மேல் அலங்கார விளக்கு.


நீட் கபோர்ட் வித் ஹேங்கர்ஸ் & ஷெல்ஃப்ஸ்.  எதிரே தெரிவது வெனிஷியன் ப்ளைண்ட் டைப்பில் ஃபுல் ரோலர் ஸ்க்ரீன்.

தொலைக்காட்சிக்கென்று தனி இடம்.
ரீடிங் லேம்ப்ஸ் ரொம்ப அழகு :) எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
ஆளுயரக் கண்ணாடி.
இங்கே பாத்ரூமில் ஸ்பெஷலா லிக்விட் க்ளென்ஸர்ஸ். ஷாம்பூவும் லோஷனும் இருக்கு. செம சூப்பர். லேசா போட்டா போதும். ப்ரஸ் பண்ணி கைல சில துளிகள் எடுத்து தேய்ச்சா போதும். அதிகம் எடுத்தா ஒட்டிட்டு வழு வழுன்னு போகவே போகாது. :)

அப்புறம் ஹேண்ட் ஷவர் மட்டும்தான். நோ பக்கெட், கப் எட்ஸெட்ரா எட்ஸெட்ரா. ஹாட் வாட்டரை அட்ஜஸ்ட் செய்துட்டு ஷவர்லயோ, ஹேண்ட் ஷவர்லயோ சோப்புப் போட்டு லலல்லா பாடிட்டு ( !) நனையவேண்டியதுதான்.  :)

ஆரஞ்சு ஃப்ளேவர்ல கத கதப்பா குளிச்சிட்டு வரலாம்.
டவல் ஸ்டாண்ட்.
க்ளாமரூம்ஸ்.
வாஷ் பேசின். சுத்தம் , சுகாதாரம்.

 பல் தேய்ச்சுக் கொப்புளிக்க தண்ணீர் பிடிக்க ஒரு கப் இருக்கு. ஃபாரினர்ஸ் கலாச்சாரம் இந்த கப்பும் லிக்விட் சோப்பும்.
நீட் பெட்டிங்க்.

அப்புறம் வுட்டன் ஃப்ளோர் !. அதுவும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது :)

ஆங்க் சொல்ல மறந்துட்டேன். ஏசி போக ஃபேனும்  இருக்கு. அது போக நைட் லாம்ப் மேலே சீலிங் ல மறைஞ்சிருக்கது செம.

காஃபி குடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்கலாம். :)

இதுதான் படி. ரொம்ப நீட்டா இருக்குல்ல. லிஃப்டும் இருக்கு.

மெட்டல் எம்பாஸிங் ( ?) ஓவியம். ஃப்ளவர் வாஷ். கீழே காமிராவோ ?!
எனக்குப் பிடித்த காரிடார். ரூம் க்ளீனிங்குக்கான மெட்டீரியல்ஸ் இருந்தது ஒரு மாதிரி இருந்தாலும்  பரவாயில்லைன்னு ஒரு க்ளிக். அப்புறம் இதுக்குன்னு திரும்ப போ முடியுமா என்ன :)
ரிஸப்ஷன். வார்ம் வெல்கம்.
நீட்டான நறுவிசான ரூம்கள். குடும்பத்தினர் தங்க ஏற்றது. நல்ல பாதுகாப்பு. நிம்மதியா ரெஸ்ட் எடுக்க ஒரு இனிய இல்லம். தி ஹோம்.

ரூம் சர்வீஸ் இருக்கு. காஃபி மட்டுமே ஆர்டர் பண்ணோம்.

காலையில் காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் இல்ல. அத ப்ரொவைட் பண்ணி இருந்தா தாராளமா ஃபைவ் ஸ்டார் கொடுக்கலாம். :)

ரூம் ரெண்ட் 950/- ந்னு நினைக்கிறேன்.  என்னோட மதிப்பீடு நாலரை ஸ்டார்ஸ்.***** ( பாதி ஸ்டார் எப்பிடி போடுறதுன்னு தெரில :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1.  சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5.  ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6.  கேரளா சோழா & ஹைலாண்ட். 

7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8.  பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10.   குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29.  சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.

9 கருத்துகள் :

ஜீவன் சுப்பு சொன்னது…

இதே ரோட்ல நெறைய வாட்டி போயிருந்தும் கவனித்ததில்லை. 950 இருவருக்கா...? தங்குறதுக்கும், திங்குறதுக்கும் சேர்த்துன்னா சல்லிசா இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நம் இனிய நண்பர் ஜோதிஜி இல்லம் போல் வருமா சகோதரி...?

G.M Balasubramaniam சொன்னது…

பயணங்களின் போது பலவித அறைகளையும் பார்த்தாயிற்று பொதுவாக இடங்களை எல்லாம் பார்த்துவிட்டு அறைக்கு தூங்கவே வருவோம் திருச்சியில் ஒரு ரூம் பற்றி மட்டுமே எழுதி இருந்தேன் இதுவும் நல்ல ஐடியாதான்

Angelin சொன்னது…

950 ..பரவாயில்லையேக்கா ..வெரி நீட் அன்ட் க்ளீன்

Chellappa Yagyaswamy சொன்னது…

இது தாங்கள் புதிதாகத் தொடங்கியிருக்கும் ஓட்டலா? மிகவும் அழகாக வருணனை தந்திருக்கிறீர்களே!

பொதுவாக, திருப்பூரில் துவங்கப்படும் ஹோட்டல்களில் முதல் ஓராண்டு மட்டுமே நன்றாக பராமரிப்பார்கள். அதன்பிறகு மோசமாகிவிடும். சரியான வேலையாட்கள் கிடைப்பதில்லை என்பார்கள். கதவைப் பூட்டி சாவியை நீங்களே எடுத்துச் செல்லுங்கள் என்பார்கள். பொருட்கள் திருடு போகலாம் என்று முன்னாலேயே எச்சரிப்பார்கள். இப்போதும் அப்படித்தானா?

இராய செல்லப்பா நியூஜெர்சி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அறிமுகம். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி சகோதரியாரே

Thenammai Lakshmanan சொன்னது…

ஜீவன் சுப்பு ஒருவர் தங்க மட்டும்தான். உணவு இல்லை.

அதை மறந்துட்டேன் டிடி சகோ

ஆமாம் பாலா சார். எல்லாம் போஸ்ட் மயம் :)

ஆமாம்டா ஏஞ்சல்

ஹாஹா செல்லப்பா சார். இது தங்கி இருந்த இடம். :) இந்த ஓட்டலில் அப்படி இல்லை.

நன்றி வெங்கட் சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...