இந்த ஆறு வித்யாசம் , எட்டு வித்யாசம் எல்லாம் குமுதம், தினமலர் பார்த்து வந்ததுதான்னு ஒப்புக்குறேன். அத கண்டுபிடிக்கிறதுல ஒரு குறுக்கெழுத்துப் புதிரையோ, சுடோகுவையோ போட்ட திருப்தி கிடைக்குது. :)
பொதுவா பயணப் பொழுதுகள் சுகமா இருக்கணும்னு நினைப்போம். அதுவும் இரவுப் பயணத்தில் ஏசி ட்ரெயின் என்றால் ரொம்பவே கன்வீனியண்ட். ஏசி பஸ்ஸும் கன்வீனியண்ட்தான். ஆனால் கொஞ்சம் குடலைப் புரட்டும் குலுக்கல் இருக்கும். ட்ரயின் எப்பவுமே தாலாட்டும். :) ரெண்டுலயும் போர்வை, தலையணை எடுத்துப் போக வேண்டாம்.
சாப்பிடக் கொள்ள, புக் படிக்க, பாத்ரூம் இன்னபிற வசதிகள் ட்ரெயினில் ( ஏசி ) ஆஹா ஓஹோதான். ப்ரைவசியும் கூட . சைட் லோயர் பர்த் கிடைத்தால் கொண்டாட்டம்தான். நம்ம ராஜாங்கம். திரையை மூடிக் கனவில் ஆழலாம். திரையை விலக்கி உலகைக் கண்டும் களிக்கலாம்.
ஏசி பஸ்ஸுக்கும் ஏசி ட்ரெயினுக்கும் ( செகண்ட் ஏசி, தேர்ட் ஏசி ) எடுத்த புகைப்படத்தில் உள்ள வித்யாசத்தைப் பார்த்தேன். ஹிஹி ஒரு இடுகை தேறிடுச்சு. :)
அப்புறம் ரெட் பஸ்ஸுல புக் பண்ணேன்பாங்க. ஆனா பஸ் ப்ளூ கலர்ல இருக்கும். ப்ளூ மவுண்டன்ல புக் பண்ணேன்பாங்க. உள்ள பூரா டிசைன் ரெட்டா இருக்கும் :)
பஸ்ஸுலயும் ட்ரெயின்லயும் உள்ள ஒரு ஒத்துமை அப்பர் பர்த் & லோயர் பர்த். அதுக்கு ஏறப் படி இருக்கு ! . ஆனா பஸ்ஸுல ஏறி இறங்கினா கொஞ்சம் குடிகாரன் மாதிரி தடுமாற வேண்டி இருக்கும். ஏன்னா திடீர்னு ஒரு வளைவுல வளைப்பாங்க. கம்பியைப் பிடிச்சிட்டே போகணும் வரணும்.
ட்ரெயின் எல்லாம் சிங்கிள் பர்த் & பெட்தான். பஸ்ஸில் ஒரு சைட் சிங்கிள், இன்னொரு சைட் டபுள். இதுல வேறு வேறு ஆளுங்களுக்கு அலாட் ஆனா கஷ்டம். ஒரே ஃபேமிலின்னானும் வேறு வேறு ஆட்களுக்குக் கிடைச்சா கஷ்டம்தான். ஹஸ்பெண்ட் வைஃப்னா பரவாயில்லை.