திங்கள், 9 ஜனவரி, 2017

இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும்.

தீமையை அழித்து நன்மையைப் புதுப்பிக்க சிவன் விஷ்ணு காளி மூவரும் உக்கிர வடிவம் எடுத்த ஊர் இரணியூர்.

நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனை வதம் செய்த விஷ்ணுவின் தோஷம் நீங்க சரபேசுவரராக ஆட்கொண்டார் சிவன். எனவே ஆட்கொண்டநாதராக சிவனும், நரசிம்மேஸ்வரராக விஷ்ணுவும் அருள் பாலிக்கும் தலம் இது.

இங்கே ஸ்ரீ ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி  திருக்கோயிலும், ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கனகவல்லித்தாயார் திருக்கோயிலும், ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயிலும் அமைந்து அருள் பாலிக்கின்றன.

நீலமேகப் பெருமாள் கோயிலில் சிவனின் திருவிளையாடற் சிற்பங்கள் போல இங்கே  தசாவதாரச் சிற்பங்களோடு கிருஷ்ணரின் பால்ய லீலைகளும் சிற்பங்களாகப் பிரகாரக் கற்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பெருமாள் சந்நிதிக்கு முன்புற நடையின் விதானத்தில் கல்லால் செதுக்கப்பட்ட பன்னிரெண்டு ராசிகளும் மிக அழகு.  அவை கண்ணையும் கருத்தையும் கவர்ந்த்தால் புகைப்படம் எடுத்தேன். அவை உங்கள் பார்வைக்கு.

“பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!”
முன்புற நடையும் வாயிலும்
நீலமேகப் பெருமாள் சந்நிதி . இங்கே பட்டர் இருந்ததால் புகைப்படம் எடுக்க முடியவில்லை :)


கனகவல்லித் தாயார் சந்நிதி.
பிரதட்சணம் வரும்போது எடுத்தது. சுற்றுப் பிரகாரத்தில் கோஷ்ட தெய்வங்கள். - கோதண்டராமர்.
கிருஷ்ணரின் லீலைகள். பூதனை சம்ஹாரம் , கோதண்ட  ராமர், பலராமரும் கிருஷ்ணரும்,
கட்டிய உரலை இழுத்துக் கொண்டு மரங்களாயிருந்த அசுரர்களை வதைத்தது., வாமன மூர்த்தி, சீதாராமர், அனுமன். 
பரசுராம அவதாரம்.
மச்சாவதாரம், மதங்க நர்த்தனம்,
கூர்மாவதாரம், ஆலிலைக் கிருஷ்ணர்,
தாயார் சந்நிதியின் கருவறை.
கோமுகி
வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம்.
ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம்.
வித்யாசமான கோமுகியும் சிற்ப வேலைப்பாடுகளும்.
வாமன அவதாரம்,பரசுராம அவதாரம்
வாமன அவதாரம்,
ராமர் லெக்ஷ்மணன் சீதை வனவாசம் சென்றது.
கண்ணைக் கவர்ந்த தூண் சிற்பங்கள் வெகு அழகு. அதிலும் எல்லாச் சிற்பங்களும் இரு இரு முறை  பக்கம் பக்கமாகச் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு.!!!

குழலூதும் கிருஷ்ணர், கோபியர்கள், முனிவர்கள், ரிஷிகள் ஆகியோரும் சிற்பவடிவில் அமைந்துள்ளனர். மிக மிக அழகாகச் செதுக்கிய சிற்பிகளுக்குக் கோடானு கோடி வந்தனங்கள்.

இது ஒரே கல்லால் அமைந்த குடைவரைக் கோயில் போலத் தென்படுகிறது.

ஸ்ரீதேவி ,பூதேவி,  பெருமாள்.
ஓம் பக்ஷிராஜாய வித்மஹே 1
ஸ்வர்ணபக்ஷாய தீமஹி 1
தந்நோ கருடப் ப்ரஸோதயாத். 11
அனுமன் நரசிம்மர்.

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.
 

ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபதக நவா ரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்சநேயம் நமாம் யஹம்
பன்னிரெண்டு ராசிகளும் இந்தக் கல்மண்டபத்தின் மையத்தில் செதுக்கப்பட்டுள்ளன. சாமி சந்நிதிக்கு எதிரே உள்ள விதானத்தில் இவை கவினுறக் காட்சி அளிக்கின்றன.
மதில் சுவரில் சிம்மமும் ஆஞ்சநேயரும் காட்சி அளிக்கிறார்கள்.
இரணியூர் சென்றால் மிக மிக அழகான சிற்பக் களஞ்சியங்களான இவ்விரு கோவில்களையும் எல்லைக் காளியையும் தரிசித்து அருள் பெறுங்கள்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய வினாசாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமஹாவிஷ்ணவே நம;

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.

2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும்.
 

8 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

எவ்வளவு புகைப்படங்கள்! அழகு.

G.M Balasubramaniam சொன்னது…

திருக் கோவில்கள் பற்றி நிறையவே எழுதலாம் வாழ்க பதிவர் ஒற்றுமை

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

புகைப்படங்கள் மிக அழகு சகோ/தோழி!!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்

நன்றி பாலா சார்.

நன்றி துளசி சகோ

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஆஹா, அற்புதமான பக்திமயமான படங்கள். புதியதொரு கோயில் பற்றி அறிய முடிந்தது. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

தங்கள் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி விஜிகே சார்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...