செவ்வாய், 27 டிசம்பர், 2016

ராசிபுரம் நவமாருதியும் வீரதீரத் தூதனும்.

ராசிபுரத்தில் ஒரு அற்புதமான ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போகும் பாக்யம் கிடைத்தது. மன்னார்குடியில் எங்கள் வீட்டிற்குப் பின்புறம் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருந்தது. அதைக் கடந்து போகும்போதெல்லாம் வெண்ணெய் வாசமும் மகிழம்பூ வாசமும் சுத்தும். சனிக்கிழமைகளில் சேவிக்கச் செல்வதுண்டு.

ஆஞ்சநேயர் என்றால் பிரம்மச்சரியம், மனோபலம், ஞானத் தெளிவு, சிரஞ்சீவித்தன்மை, வெற்றிலைமாலை, வெண்ணெய்க் காப்பு, தூது, சஞ்சீவி மலை, சூடாமணி, செயல்திறம், பணிவன்பு, எல்லையற்ற இறை பக்தி  எல்லாம் ஞாபகம் வரும். அசைக்க முடியாத மாபெரும் சக்தி அவர். ராமநாமம் ஜெபிக்கும் இடங்களில் எல்லாம் அவர் இருப்பார்.

த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்,த்ரிநேத்ர சதுர்புஜ ஆஞ்சநேயர், நாமக்கல் ஆஞ்சநேயர், சுசீந்திரம் ஆஞ்சநேயர், நெய்வேலி அஞ்சநேயர் ஆகிய ஆஞ்சநேயர்களைத் தரிசித்திருந்தாலும் கண்டவுடன் கொள்ளை கொண்டவர் இந்த ராசிபுரம் ஆஞ்சநேயர்.

நடக்க முடியாத காரியங்களையும் நடத்திக் கொடுப்பவர். கர்மவினைகளைத் தொலைப்பவர்.

”அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸ’ந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ”

ராசிபுரம் கச்சேரி தெருவில் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. அங்கே சென்று தரிசித்து நான் பிரமித்த ஆஞ்சநேயரை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தக்கோயிலில் முக்கியமாகத் தூது சென்ற ஆஞ்சநேயரின் வீரதீர பராக்கிரமம் சிறப்பிக்கப்படுகிறது.  வெளியிலேயே கோபுரத்தின் பக்கவாட்டில் வாலில் ஆசனம் அமைத்து அமர்ந்த திருக்கோலத்தில் கம்பீர ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார்.  ராவணன் சபையில் ஆசனம் மறுக்கப்பட ஆஞ்சநேயர் தனது வாலையே சுருட்டி ஆசனமாக்கி அமர்ந்து  எதிரியிடம் போர்முரசு கொட்டியவர்.

இந்தக்கோயிலின் சிறப்பு பற்றிக் கோயில் அர்ச்சகர் பலவாறு கூறியும் பல்வேறு அலங்காரங்களில் எடுத்த புகைப்படங்களையும் காண்பித்தார். அன்றே எழுதி இருந்தால் நிறைய எழுதி இருக்கலாம். இன்று பலது மறந்துவிட்டது. ஞாபகத்தில் உள்ளதை எழுதுகிறேன்.
வீரமாருதி கம்பீர மாருதி
தீரமாருதி அதி தீர மாருதி
கீத மாருதி சங்கீத மாருதி
தூத மாருதி ராம தூத மாருதி
வீர மாருதி.

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்
ச ஹனூமத் ஸம்ரணாத் பவேத்


நெஞ்சை அகழ்ந்து ராமரைக் காட்டிய ராமபக்த ஹனுமான்.

அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹ சாரிணம்
துஷ்ட க்ரஹ வினாசயா 
ஹனுமந்த முபாஸ் மஹே


தீர மாருதி

அஞ்சிலே ஒன்று பெற்றான்.
   அஞ்சிலே ஒன்றைத் தாவி.
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக.
   ஆர் உயிர் காக்க ஏகி.
அஞ்சிலே ஒன்று பெற்ற
   அணங்கைக் கண்டு. அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்.
   அவன் எம்மை அளித்துக் காப்பான்.
சஞ்சீவி மாருதி

அஞ்சனை மைந்தா போற்றி
அஞ்சினை வென்றாய் போற்றி
வெஞ்சினக் கதர்பின் சென்று
பிழமறை உணர்ந்தாய் போற்றி
மஞ்சனமேனி ராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி
எஞ்சலில் ஊழியெல்லாம்  இன்றென விரும்பாய் போற்றி .
ராமபக்த ஹனுமான்

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடுஇயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே. 12
பவ்ய மாருதி.

ஸ்ரீ அனுமன், ஆஞ்சநேயர், 
ஹனுமான், வாயு புத்திரன் துதி

 ஆஞ்சநேயா நமோ நமோ - சுதி
அத்புத சரிதா நமோ நமோ

முக்ய ப்ராணன  ஜெயஹனுமந்தா

முநிஜன வந்தித பரமானந்தா  

ராம தூதா நமோ நமோ

ராக்ஷஸ காதா நமோ நமோ

பவன குமாரா பாவன சரிதா

ராம பக்த ஜெய ஸ்ரீ ஹனுமந்தா

ராம தூதா நமோ நமோ

பலபீம ஹனுமந்தா நமோ நமோ

பவன புத்திர ஜகதீசா நமோ நமோ

ஜெய் ஜெய் ஹனுமான் நமோ நமோ

ஜெயவீர ஹனுமான் நமோ நமோ

சுசீந்த்ரம் ஹனுமான்  நமோ நமோ

சங்கு சக்ர ஆஞ்சநேயா நமோ நமோ

சிவவீர ஹனுமான் நமோ நமோ

சஞ்சீவி ஆஞ்சநேயா நமோ நமோ

நாமக்கல் ஹனுமான் நமோ நமோ

நங்கநல்லூர் ஆஞ்சநேயா நமோ நமோ

குண்டுக்கல் ஹனுமான் நமோ நமோ

திண்டுக்கல் ஆஞ்சநேயா நமோ நமோ

சுந்தர ஹனுமான் நமோ நமோ

பிரசன்ன ஆஞ்சநேயா நமோ நமோ

ஸ்ரீராம் ஜெயராம் நமோ நமோ

ஜெயராம் ஸ்ரீராம் நமோ நமோ

நமோ நமோ நமோ நமோ

ஸ்ரீராம தூதா நமோ நமோ.

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி

பக்த மாருதி, பால மாருதி, சஞ்சீவி மாருதி, வீர மாருதி, பவ்ய மாருதி, தியான மாருதி, பஜன மாருதி, யோக மாருதி, தீர மாருதி.  என நவ மாருதிகளும் உற்சவரும் சிறப்புக் கூட்டுகிறார்கள். தனித்தனியாக கோஷ்ட தெய்வங்களாக எழுதருளி இருப்பதோடு, அவர்களுக்கான தனித்தனி அமைப்புகளும் பலன்களும் பிரகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நவக்ரகம்போல நவமாருதிகள் எழுந்தருளி இருப்பது சிறப்பு.அதிலும் பாலமாருதி கொள்ளை அழகு. குட்டிக் குட்டி மாருதிகள் மனங்கவர்ந்த மாருதிகள் :)
நாம கீர்த்தனம்

ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஈஶ்வர உவாச

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராமனாம வரானனே
ஶ்ரீராம னாம வரானன ஓம் னம இதி

பக்த மாருதி

ராமன் வழிபாடு:
கண்ணிரண்டும் ராமனைக் காணவே
காதிரண்டும் ராமனக் கேட்கவே
பண்ணிசை ராமனை பாடவே
பாதமிரண்டும் ராமனை நாடவே
எண்ணி எண்ணி ராமனை நேசிப்போம்
இதயப் பூவால் ராமனைப் பூஜிப்போம்
ஓம் ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம். 
பஜனை மாருதி.

சனியின் தாக்கங்கள் குறைய, தீயசக்திகளைத் திசை திருப்ப. தடைகளை அழிக்க, பாவங்களைப் போக்க, மன அழுத்தத்தை நீக்க, பாதுகாப்பான பயணத்துக்கு, நியாயமான ஆசைகளை நிறைவேற்ற, ஆன்மீக அறிவைப் பெற, அறிவையும் பலத்தையும் பெற, எண்ணங்களை சீர்படுத்த, ஒற்றுமையை மேம்படுத்த, எதிர்மறை ஆற்றல்களின் திறனை நீக்க மாருதி வழிபாடு அவசியம் என துளசிதாசர் கூறுகிறார்.
தீர மாருதி

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி,
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத் !
நவக்ரஹங்கள் போல எழுந்தருளி உள்ள மாருதிகள் - நவமாருதிகளும் எண்ணிலடங்காத எண்ணிக்கையில் உள்ளம் நிறைக்கும் இன்ஃபினிட் மாருதி தரிசனமும். இவர் உற்சவர். இவரின் இரு பக்கமும் இருக்கும் கண்ணாடிகளில் எண்ணிலடங்காத அளவு மாருதிகள் பிரதிபலிக்கிறார்கள்.. அது இந்தக் கோயிலின் சிறப்பு.
ஆஞ்சநேயர் - அஞ்சனையின் மைந்தர், கேசரி நந்தனா - கேசரியின் மகன், பவன் புத்திர/ வாயுபுத்ர - வாயுவின் மகன்,  பஜ்ரங் பலி - இந்திரனின் வஜ்ராயுதம்போல் வலிமையானவர்/இடி மின்னலைப் போல சக்தி மிகுந்தவர், அணிமா ( மாபெரும் உருவம்)   கரிமா ( மிகச் சிறிய உருவம் )  ஆகாஷகாமா ( பறக்கும் சக்தி ) ஆகிய சித்திகள் வாய்க்கப்பெற்றவர், ஹனுமன் - பெரிய தாடை உடையவர்,
அனுமனைப் பாடு மனமே :-

அனுமனைப் பாடு மனமே - உன்னை
அணுவும் அணுகாது பயமே
நாள்தோறும் ஸ்ரீ ராமஜெயமே சொல்லும்
வாழ்க்கையில் எல்லாம் இன்ப மயமே

என்றும் அவனை நினைத்தால் போதும்
எதிர்ப்புகள் எல்லாம் மறந்தே போகும்
கவலை என்பது மலை என்றாலும்
கவலை வேண்டாம் அவன்கை தாங்கும்

சக்தியும் நல்ல புத்தியும் கொடுக்கும்
சமய சஞ்சீவி ராமனின் தூதன்
நம்பிக்கையோடு அவனைத் தொழுதால்
நமக்கென வருவான் நல்லருள் புரிவான்.  

வீரதீரத் தூதன்.ஜெய் ஹனுமான்.

ஸ்ரீராமதூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமுத் பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத
வாயு புத்ர நமோஸ்துதே


அனுமன் நாற்பது :-

இதனை சமஸ்கிருதத்தில் அவ்வப்போது படிப்பதுண்டு. 

வல்லமையில் விளக்கத்துடன் வெளியிட்டிருக்கும் திரு எஸ். கோபாலன் அவர்களுக்கு நன்றி.

ஸ்ரீகுரு சரன ஸரோஜ ரஜ நிஜ மன முகுரு ஸுதாரி
பர்ன(உ)ம் ரகுபர் பிமல் ஜஸு ஜோ தாயகு பல சாரி
எனது மனது எனும் கண்ணாடியாம் அதை
குருவினது திருவடி தூசியால் தூய்மை செய்து
’கனிகள் நான்கை’ அருளிடும் ரகுகுல திலகம்
இனியன் இராமனின் இழுக்கிலா இசையை இயம்பிடுவேன்.

புத்திஹீன தனு ஜானிகே ஸூமிரெளம் பவன குமார
பல புத்தி வித்யா தேஹு மோஹிம் ஹரஹு கலேஷ் விகார்
குறைவான அறிவுடையோன் நான் என்று நன்கறிந்து
விரைவான வாயுவின் குமாரன் உன்னைத் தியானிக்கிறேன்.
சக்தி,புத்தி,ஞானம் இவற்றை எனக்குத் தந்திடுவாய்!
முக்தி அளித்திடுவாய் இடர்கள், இழுக்குகள் இவற்றினின்று.

ஜய ஹனுமான ஞான குன ஸாகர
ஜய கபீஸ திஹும் லோக உஜாகர (1)
வெற்றி உனக்கே அனுமான்! நீ ஞானம் நற்குணம் இவற்றின் கடலாம்
வெற்றி உனக்கே வானரத்தலைவா! நீ மூவுலகும் பரவிய கீர்த்திஉடையோன்
ராம தூத அதுலித பல தாமா 

அஞ்சனி புத்ர பவனுஸுத நாமா (2)
அண்ணல் இராமனின் தூதன் இணையிலா வலிமை மிக்கோன்
அன்னை அஞ்சனை மைந்தன் வாயு புத்திரன் எனும் பெயருடையோன்

மஹா வீர விக்ரம பஜரங்கி 
குமதி நிவார ஸுமதிகே சங்கி (3)
மகா வீரன் நீ! பராக்கிரமும் பலமும் படைத்தவன் நீ!
தகாத சிந்தைனைகளை அழிப்பவன் நீ! தூய சிந்தனையாளர் துணைவன் நீ!


கஞ்சன பரன விராஜ ஸுவேஸா
கானன குண்டல குஞ்சித கேஸா (4)
பொன்னிற மேனியன் நீ! அழகிய உடைகளை அணிந்த்தவன் நீ!
மின்னிடும் குண்டலங்கள் பூண்டவன்; சுருண்ட கேசம் கொண்டவன்

ஹாத பஜ்ர ஒளர த்வஜா பிராஜை
காந்தே மூம்ஜ ஜனேவு ஸாஜை (5)
வஜ்ரமும் கொடியும் கரங்களில் கொண்டவன்
முஞ்சை புல்லாலான பூணூல் பூண்டவன்

ஷங்கர ஸுவன கேஸரி நந்தன 
தேஜ பிரதாப மஹா ஜகவந்தன (6)
சங்கரன் அவதாரம் நீ, கேசரி குமாரன் நீ
உந்தன் வீரத்திற்கும் புகழுக்கும் பாரே வணங்கும்

வித்யாவான குணி அதி சாதுர 
ராம காஜ கரிபே கோ ஆதுர (7)
கூரிய மதியும் நற்குணமும் நிறைந்த மேதை நீ!
சீரிய இராம சேவைக்காக ஆவலாய் காத்திருப்பாய்

ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா
ராம லகன ஸீதா மன பசியா (8)
இராம கதைக் கேட்பதில் பேரானந்தம் அடைவோனே!
இராமன் இலக்குவன் சீதையை உள்ளத்தில் உடையோனே!

சூக்‌ஷ்ம ரூப தரி ஸியஹிம் திகாவா
விகட ரூப தரி லங்க ஜராவா (9)
சிற்றுருவம் தரித்து சீதா பிராட்டிக்கு தோற்றமளித்தாய்
பேருருவம் தரித்து இலங்கையை தீக்கு இரையாக்கினாய்.

பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே
ராமசந்த்ரே கே காம ஸம்வாரே (10)
பிரம்மாண்ட பேருருவம் தரித்து அரக்கர்களை அழித்தாய்
ஆண்டவன் இராமனின் காரியங்களை நிறைவேற்றினாய்

லாய ஸஜீவன லகன ஜியாயே
ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே (11)
இளவலின் உயிரை சஞ்ஜீவினி மூலிகை கொணர்ந்து காத்தாய்
அளவிலா ஆனந்தத்துடன் இராமனும் உன்னை நெஞ்சாரத் தழுவினார்

ரகுபதி கீன்ஹி பகுத படாயீ
தும மம ப்ரிய பரத சம பாயீ (12)
உந்தன் பெருமைகளை இராமன் மிகவும் புகழ்ந்தான்
எந்தன் பரதன் போல நீயுமன்புத் தம்பி என்றான்

ஸஹஸ பதன தும்ஹரோ யஷ காவைம்
அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம் (13)
உனது புகழை ஆயிரந்தலை ஆதிசேஷனும் பாடுவான் என்றுரைத்து
தனது நெஞ்சார தழுவினான் அண்ணல் இராமனும் உன்னையே!

ஸனகாதிக ப்ரஹ்மாதி முனிஸா
நாரத ஸாரத ஸஹித அஹிஸா (14)
யம குபேர திக்பால ஜஹாம் தே
கவி கோவித கஹி ஸகே கஹாம் தே .. (15)
ஸனகர் முதலிய முனிவர்கள் பிரம்மா போன்ற தெய்வங்கள்
நாரதர் ஸரஸ்வதி ஆதிஸேஷன் காலன் குபேரன் திசைக்காவலர்கள்
அறிஞர்கள் கலைஞர்கள் ஆகியோர் இவர்களில் எவருமே
அறிந்திலரே உந்தன் பெருமையை முழுமையாய் வர்ணித்திட!

தும உப்கார ஸுக்ரீவஹிம் கீன்ஹா
ராம மிலாய ராஜ்பத தீன்ஹா ………………………..(16)
குரக்கினத் தலைவன் சுக்ரீவன் இராமனைக் கண்டு
தனக்குரிய அரச பதவி பெற்றிட உதவினாயே!

தும்ஹரோ மந்த்ர விபீஷன மானா
லங்கேஷ்வர பயே ஸப ஜஹ ஜானா (17)
உந்தன் அறிவிரைகளை ஏற்று அதன்படி நடந்து விபீஷணன்
வேந்தன் ஆனான் இலங்கைக்கு என்பது அனைத்துலகும் அறிந்ததே!

ஜுக ஸஹஸ்ர யோஜன பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ ….. (18)
பல ஆயிரம் யோஜனை அப்பாலிருந்த பகலவனை இனிய
பழம் என்று எண்ணி பறித்து விழுங்கிவிட்டாயே!

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம்
ஜலதி லாந்தி கயே அசரஜ நாஹீம் (19)
அண்ணல் இராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தாங்கிய நீ
விண்ணில் விரைந்து தரங்கத்தை தாண்டியதில் வியப்பேதும் இல்லையே!

துர்கம காஜ ஜகத கே தேதே
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே (20)
இவ்வுலகில் எத்தனை கடினமான காரியங்கள் ஆனாலும்
வெகுயிலகு ஆகிவிடும் உந்தன் அருளாலே

ராம துஆரே தும ரக்வாரே
ஹோத ந ஆங்யா பினு பைஸாரே ……….. (21)
இராமனது வாயில் காவலன் நீ
உனது அனுமதியின்றி யாரும் நுழைய முடியாதே!

சப ஸுக லஹை தும்ஹாரி ஸரனா
தும ரக்‌ஷக காஹு கோ டர்னா ………………… (22)
எல்லா சுகங்களும் கிட்டும் உந்தன் சரணங்களிலே
நல்ல பாதுகாவலனாய் நீ இருக்கையில் பயமேன்?

ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை
தீனோம லோக ஹாங்க தே காம்பை ……. (23)
உன்னால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் உன்னாற்றலின்
முன்னால் மூன்று உலகங்களும் நடுக்கம் கொள்ளுமே!

பூத பிஷாச நிகட நஹீம் ஆவே
மஹாவீர் ஜப நாம ஸுனாவே ……. (24)
அருகில் அண்டிடாதே பூதங்களும் பேய்களும்
பெரும் வீரன் உந்தன் நாமத்தைக் கேட்டாலே!

நாஸை ரோக ஹரை ஸப பீரா
ஜபத நிரந்தர ஹனுமத பீரா …. (25)
எந்நோயும் தீருமே துன்பம் நீங்குமே
என்னேரமும் அனுமது நாமத்தை ஜபித்தால்

ஸங்கட தே ஹனுமான சுடாவை
மன க்ரம வசன த்யான ஜோ லாவை .. (26)
எவர் மனம் வாக்கு செயலால் தியானிக்கிறாரோ
அவரை அனுமான் துன்பங்களிலிருந்து விடுவிப்பார்

ஸப பர ராம தபஸ்வி ராஜா
தின்கே காஜ சகல தும ஸாஜா ……….. (27)
இணையிலா தபஸ்வியும் அரசனுமான இராமனின்
பணியெலாம் பரிபூர்ணமாய் நிறைவேற்றினாய் நீ!

ஒளர மனோரத ஜோ கோயி லாவை
ஸோயி அமித ஜீவன பல பாவை …… (28)
உனது அடியர்வர்கள் கொண்ட ஆசைகள் எல்லாம்
உனது அருளால் வாழ்வெலாம் சித்தி பெறுமே!

சாரோம் ஜுக பரதாப தும்ஹாரா
ஹை பரசித்த ஜகத உஜியாரா …. (29)
யுகங்கள் நான்கிலும் உந்தன் புகழ் போற்றப்படுகிறதே
உலகங்கள் முழுதும் உந்தன் பெருமை ஒளிர்கிறதே

சாது சந்த கே தும ரக்வாரே
அசுர நிகந்தன் ராம துலாரே……………………. (30)
சாதுக்கள் ஞானிகளைக் காப்பவனும்
அசுரர்களை அழிப்பவனும் இராமனுக்கினிய நீயே!

அஷ்ட ஸித்தி நெள நிதி கே தாதா
அஸ வர தீன ஜானகி மாதா.. (31)
சித்திகள் எட்டையும் நிதிகள் ஒன்பதையும் எவருக்கும் அளித்திடும்
சக்திதனை உனக்கு வரமாய் அருளினாளே அன்னை ஜானகி


ராம ரஸாயன தும்ஹரே பாஸா
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா … (32)
இராம நாமம் எனும் அருமருந்து உன்னிடமுண்டு
இராம தாஸனாய் எப்பொழுதும் புரிந்திடு தொண்டு

தும்ஹரே பஜன ராம கோ பாவை
ஜன்ம ஜன்ம கே துக பிஸ்ராவை .. (33)
உன்னை பஜனை செய்யும் பக்தர்கள் இராமனை அடைவரே
ஜன்ம ஜன்மமாய் தொடரும் துக்கங்கள் அகன்றிடுமே!

அந்த கால ரகுபர புர ஜாயி
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ.. (34)
அந்திம காலத்தில் இராமனின் இருப்பிடம் அடைவோர்
அங்கு அவர்கள் அரியின் அடியவன் என்று அழைக்கப்படுவர்

ஒளர தேவதா சித ந தரயி
ஹனுமத ஸேயி ஸர்வ சுக கரயி.. (35)
அனுமனே! உன்னை வழிபட்டாலே சர்வ சுகங்களும் கிட்டுமே
பின்னே வேறு தெய்வம் எதையும் தியானிக்க தேவையில்லையே!

ஸங்கட கடை மிடை சப பீரா
ஜோ சுமிரை ஹனுமத பல்பீரா (36)
எல்லாம் வல்ல அனுமனைத் தியானிக்கும் அடியவரின்
எல்லா துன்பங்களும் துயரங்களும் தீர்ந்து விலகுமே.

ஜய ஜய ஜய ஹனுமான கோஸாயி
க்ருபா கரஹ குருதேவ கீ நாயி … (37)
ஜயம் ஜயம் ஜயம் உமக்கு அனுமானே
பரம் குருவே எப்போதும் அருள்புரீவிரே!

ஜோ ஷத பார பாட கர கோயி
சுட்ஹி பந்தி மஹாஸுக ஹோயி (38)
எவர் ஒருவர் இத்துதியை நூறு முறை படிப்பாரோ
அவர் பந்தங்களினின்று விடுபட்டு பரம சுகம் பெறுவரே!

ஜோ யஹ படை ஹனுமான சாலிஸா
ஹோய சித்தி ஸாகி கெளரிஸா (39)
எவர் ஒருவர் அனுமான் நாற்பது துதியை படிப்பாரோ
அவர் சித்தி பெறுவர் அதற்கு சிவனே சாட்சி.

துலஸிதாஸ ஸதா ஹரி சேரா
கீஜை நாத ஹ்ருதய மஹம் டேரா. (40)
துளஸிதாஸ் எப்பொழுதும் அரியின் சேவகனாம்
அவன் உள்ளத்தினில் நாதா! என்றும் உறைவாயே!

பவன தனய ஸங்கட ஹரண மங்கள மூர்த்தி ரூப
ராம லகன சீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப
சங்கடம் நீக்கிடும் மங்கள சொரூபியே! வாயு மைந்தனே!
எங்களது இதயத்தில் இராம இலக்குவ சீதா சமேதராய் உறைவாயே!

ஜெய் பஜ்ரங் பலிகீ. 

6 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

இங்கு பெங்களூரில் ஆஞ்சநேய வழிபாடு பிரசித்தம் நிறையவே கோவில்கள் இருக்கின்றன. கிருஷ்ணகிரி அருகே ஒரு ஆஞ்சநேயர் கோவில் உண்டு, மட்டையுடன் தேங்காயைக் கட்டி நாம் விரும்பியதை எழுதி வைத்தால் கை கூடும் எனும் நம்பிக்கை இருக்கிறது

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட! தங்களின் வித விதமான விநாயகர் பதிவு போன்று இப்போது அனுமனைப் பற்றிய பதிவு!!! அருமை சகோ!

Dr B Jambulingam சொன்னது…

உங்களால் ராசிபுரம் கோயிலைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ராசிபுரம் ஆஞ்சனேயர் கோவில் பற்றிய தகவல்கள் வியப்பில் ஆழ்த்தின. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

சென்னையிலும் அப்படி ஒரு கோயில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் பாலா சார்.

ஆம் துளசி சகோ & கீத்ஸ். நன்றி :)

நன்றி ஜம்பு சார்

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...