புதன், 14 டிசம்பர், 2016

பேக்கரி ஐட்டம்ஸ். - BAKERY ITEMS.

பேக்கரி ஐட்டம் உடம்புக்குக்குக் கெடுதல். குண்டாகிடுவோம் என்று பயம் உண்டு. நிறைய உறவினருக்கு பேக்கிங் சோடா போட்ட உணவு ஒத்துக்கொள்வதில்லை. சிலருக்கு முட்டை போட்டது பிடிக்காது. இருந்தும் மெக்ரென்னெட், ஃப்ரெஞ்ச் லோஃப், கே ஆர் பேக்ஸ், கோவை ஆனந்தா பேக்கரி, பேக்கரி டிசோட்டா, பேக்கரி சார்லஸ், பேக்கரி மெரினா , அடையாறு பேக்கரி, கேக் வாக், கேக்ஸ் & பேக்ஸ், கேக் பாயிண்ட், பெங்களூர் பெஸ்ட் ஐயங்கார் பேக்கரி ஆகியவற்றில் சிலது பிடிக்கும்.

பேக்கிங் உணவுகள்  அதிகம் எடுத்துக் கொள்வதில்லை என்றாலும் சில பேக்கரி ஐட்டம்ஸ் அவ்வப்போது சாப்பிடுவதுண்டு. அவற்றில் சில இங்கே.

இது யாரோ உறவினர் கொண்டுவந்த டெடி பியர். அந்த சாக்லெட் இடங்களில் இன்னும் இனிப்பு. ஆனா சாப்பிடவே என்னவோ போலிருந்தது. 
பெங்களூரு கோபாலன் சினிமாவில்  சமோசா.
காரைக்குடி பேக்கரி டிசோட்டா பன்னுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தினம் மதியம் மூணு மணிக்கு சூடா போடுவாங்க. பஞ்சு இட்லி மாதிரி இருக்கும். இதுக்கு நடுவுல கிஸ்மிஸ் பழம் ஒண்ணு வைப்பாங்க. இப்ப டூட்டி ஃப்ரூட்டி வைக்கிறாங்க. பால்ல செஞ்சமாதிரி படு ருசியா இருக்கும்.
பேக்கரி டிசோட்டாவோட ஸ்பெஷல் ஐட்டம் மக்ரூன்ஸ். தூத்துக்குடி மக்ரூன்ஸ் எப்பிடி இருக்கும்னு தெரியாது. ஆனா பேக்கரி டிசோட்டா மக்ரூன்ஸ் ரொம்பவே ஸ்பெஷல். முன்னே வேஃபர்ஸ் மாதிரி திருமண வீடுகள்ல கூட கொடுப்பாங்க.


பெங்களூரு ஆவ்சன் மால்ல பஃப்ஸ் & காஃபி.
பெங்களூரு மாலதி ஹாஸ்பிட்டல் எதிர்க்கே இருக்கும் மெக்டொனால்ட்ஸில் சிக்கன் நக்கெட்ஸ் & பர்கர்.
துபாயில் ஏர்போர்ட்டில் தம்பி குழந்தைகளுடன் பர்கர், சிக்கன், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ். கொகோ கோலாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைப்பா :)
என் பிறந்தநாளில் மகனின் தோழி வாங்கிக் கொடுத்த ஹனி கேக் :)
வீட்டில் வீட் ப்ரெட்டில் சீஸ் வெஜ் ஸ்ப்ரெட் தடவி சாப்பிட்டது. ஆத்தி இம்புட்டு ஆகாதுங்கிறீயளா. என்ன செய்ய இம்புட்டுப் போட்டாத்தானே ருசிக்கிது. :)
பெங்களூரிலும் ஷவர்மா சூப்பர்மா. பிடிஎம் லே அவுட்டில் ஒரு கடையில் வாங்கியது.
கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள கே ஆர் பேக்ஸில் சிக்கன் சாண்ட்விச்.
ஆர் வி ஹோட்டலில் கொஞ்சம் ஹனி ப்ரெட்டும் கார்ன் ஃப்ளேக்ஸும்.
குவாலியர் கோட்டையின்முன் ஒரு கடுஞ்சாயாவும் கப்பில் சாஸும் சமோசாவும்.
அர்ச்சனா ஸ்வீட்ஸ் டி நகரில் பாவ் பாஜி. செம
சிக்கன் நக்கெட்ஸ். எங்கன்னு மறந்துருச்சு
இதுதாண்டா பிஸா. சிக்கன் பிஸா. சிக்கன் நக்கெட்ஸும் சீஸும் அதிகம் போட்டது
இது மிக்ஸட் பிஸா. வெஜ், சிக்கன், மட்டன்
இதுவும்.
இது சந்திரா மாலில் வாங்கிய பஃப்ஸ்.
அங்கேயே வாங்கிய பர்கர்.
இது காஃபிடே சாண்ட்விச். ரொம்பவே ஸ்பெஷல் & டேஸ்டி :)
இதெல்லாம் பல வருடங்களா அப்போ அப்போ வாங்கி சாப்பிட்டது. கம்ப்யூட்டர்ல எல்லா ஃபோட்டோவையும் சேர்த்து சேர்த்து வயிறு வீங்கிக் கிடந்துச்சு. அத காலி பண்ணாட்டி பழைய கம்ப்யூட்டர்கள் மாதிரி ஒரு நாள் ஸ்டோரேஜ் தாங்காம புட்டுக்கும். எனவே இதஎங்க கொட்டுறதுன்னு யோசிச்சப்ப நம்ம கருவூலம் யாபகம் வந்திச்சி. சோ தொகுத்து போட்டாச்சி.

நாம தின்ன எல்லாப் படத்தையும் ப்லாகுல கொட்டாட்டா ப்லாக் சாமி கோச்சுக்குமாம். எனவே கொட்டிக் கொண்டாடியாச்சு :)

3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எஞ்சாய்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...