வெள்ளி, 16 செப்டம்பர், 2016

மை க்ளிக்ஸ். நொறுக்ஸ். MY CLICKS.

ஃபுட் ஃபோட்டோகிராஃபி என்பது புகைப்படத்துறையில் முக்கியமான ஒண்ணு. இதுல வீட்ல செய்ததும் கடையில வாங்கினதும் தியேட்டர்ல தின்னதும் கோயில் ப்ரசாதமும் ( அது நொறுக்ஸ் இல்லியா என்ன :) ஜங்க் ஃபுட்டும், ட்ரைஃப்ரூட்ஸும் நட்ஸும் ஏன் ரஸ்குமே நொறுக்ஸ்ல கலந்திருக்கு.

எனக்குத் தெரிஞ்சபடி எடுத்திருக்கேன். என்னோட லூமிக்ஸ்லயும் செல்ஃபோன்லயும்.

பாகர்வாடி. இது மைதால பண்றது. இனிப்பு புளிப்பு உப்பு எல்லாம் கலந்திருக்கும். இதுல வெல்லமும் புளியும் வர தனியாவும் சேர்க்கிறாங்கங்கிறது ஆச்சர்யம்.
சோன் பப்டி. ரொம்பப் பிடிச்சது. இது ஹல்திராம்ஸ் . ரெண்டுமே.

ஆனா சோன் பப்டியை செய்றதை யூ ட்யூப் வீடியோல பார்த்தீங்கன்னா சாப்பிடவே மாட்டீங்க. ஒரு தாம்பாளத்துல மைதா சீனி உருண்ட கலவையைக் கொட்டி நெய் தொட்டு நாலஞ்சு பேர் உருட்டி உருட்டி நூடுல்ஸ் மாதிரி பிசைஞ்சுகிட்டே இருப்பாங்க. கடைசியாத்தான் இந்த க்ரிஸ்டலைஸ் ஃபார்ம்ல வருது.
ஜிலேபி பிடிக்காதவங்க உண்டா.உளுந்து மாவை அரைச்சு எண்ணெய்ல சுட்டு சர்க்கரைப் பாகுல நனைச்சு வைச்சிருப்பாங்க. தேன் மிட்டாய் மாதிரி உள்ளே பாகு கசியுமே.
ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் & வெஜ் கபாப்ஸ். க்ரீமி இன்ல எடுத்தேன்.
ரொம்ப யம்மி.. எப்பவாவது ஒரு தரம் நொறுக்கலாம்.

அதே இன்னொரு ப்ளேட்டுல க்ளோஸப்புல. மினு மினுன்னு தின்னக் கூப்பிடுதுல்ல. :)
கேசரி, கேக், பேபிகார்ன் ஃப்ரிட்டர்ஸ். இது சோழபுரம் ஹெரிட்டேஜ் ஹவுஸில் மாலை ஸ்நேக்ஸா கொடுத்தாங்க. பசி நேரத்துல ருசியா. :)
ரஸ்க்குத்தான். காச்சலடிச்சப்போ நொறுக்கு நொறுக்குன்னு சாப்பிட்டு ஹார்லிக்ஸ் விவா குடிச்சேன். :) பாதி நேரம் பட்டினியாவும் தூங்கினேன். மாத்திரையைப் போட்டு. காரைக்குடில பேக்கரி டிசோட்டா ரஸ்க் ஃபேமஸ். ஆனா இது ஏதோ டாடா ப்ராடக்ட்னு நினைக்கிறேன். ஜனப்பிரியால வாங்கினது.
நட்ஸ் மிக்சர். ஒரு ரிலேட்டிவ் துபாய்லேருந்து கொண்டாந்தாங்க். இதுல பாதாம் பிஸ்தா, முந்திரி, வேர்க்கடலை, கொண்டைக் கடலை, பட்டாணி, பரங்கி விதை உப்புப் போட்டு வறுத்து இருக்கு.
விநாயகர் சதுர்த்திக்கு ராஜகணபதி ஆலயத்திலேருந்து வந்த ப்ரசாதம் பர்ஃபெக்ட். சர்க்கரைப் பொங்கல், மோதகம், வடை, அப்பம், சுண்டல்.
கல்கி பவள விழா நிகழ்ச்சிக்கு கோகுலம் சார்பில் குழந்தைகளுக்கு நடந்த திருக்குறள் போட்டிக்கு நடுவராகப் போனபோது கிடைத்த் கிஃப்ட் ஹாம்பரில் இருந்தது. இந்த நட்ஸ். சோ ரொம்ப ஸ்பெஷல். :)
சந்திரா மாலில் சினிமா பார்த்த போது  வாங்கி சாப்பிட்ட  பஃப்ஸ், இனிப்பு பாப்கார்ன் !
சரி இன்னிக்கு இது போதும்னு நினைக்கிறேன்.  தொடர்ந்து சாப்பிட்டதை அடுத்த இடுகைகளில் பார்ப்போம். :) நீங்களும் போய் ஹெல்தியா நொறுக்கிட்டு வெல்தியா இருங்க. :)

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.


5 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

காலை நேரத்தில் இப்படி ஃபோட்டோ போட்டு பசியைக் கிளப்பிட்டீங்களே! இதுக்காகவே இன்னுமொரு முறை சாப்பிடணும்.....

பரிவை சே.குமார் சொன்னது…

பசிக்குது அக்கா...
டிசோட்டாவுல பன் வாங்கிச் சாப்பிடப் பிடிக்கும்... குட்டீஸ்க்கு ரொம்ப இஷ்டம் அவ்வளவு மெதுமெதுன்னு இருக்கும். ரஸ்க்கும் நல்லாயிருக்கும்.

எனக்கு ரஸ்க் மேல எப்பவும் ப்ரியம் அதிகம்...

சோன்பப்பொடி நம்ம பாண்டியன் தியேட்டர்கிட்ட இருக்க ஐயங்கார்தான்... மினி ஜிலேபி கூட... ஊரில் இருந்து அபுதாபி கிளம்பும் போது இதுவும் என் கூட...

சுவிட் ஆசை வந்திருச்சு...:)

'நெல்லைத் தமிழன் சொன்னது…

எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பிள்ளையார் கோவில் பிரசாத்த்தில் சர்க்கரைப் பொங்கல் எங்க இருக்கு? தயிர் சாதம் அஅவியலா மிக்ஸ் மாதிரின்னா இருக்கு

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா நல்லா சாப்பிடுங்க வெங்கட் சகோ :)

ஆமாம் குமார். அங்கெ பன் ஃபேமஸ். மத்ததெல்லாம் காரைக்குடில சாப்பிட்டதில்ல. :)

வெல்லம் கலர் இல்ல. அவ்ளோதான் நெல்லைத் தமிழன். அதுக்குன்னு அது சர்க்கரைப் பொங்கல் இல்லைன்னு ஆயிடுமா.சாப்பிட்டது நாந்தான். நல்லா இருந்துச்சு :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...