வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சாக்கோட்டைகோயில். வீரனும் மன்னனும் அந்தணனும் அகத்தியரும்.

///ஒரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்த ஒரு வேடன் ஒரு மரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்கு கொடியைக் கடப்பாரை கொண்டு தோண்டினான். அந்த இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டது. ஆச்சர்யமடைந்த அவன், நிலத்திற்கு கீழே பார்த்தபோது, லிங்கம் ஒன்று புதைந்து இருந்தது. அந்த அதிசயத்தை வேடுவன் ஒரு மன்னரிடம் கூற அந்த சோழ மன்னனும் அங்கேயே அதற்கு ஒரு ஆலயம் எழுப்பினார். அந்த ஆலயப் பெருமையைக் கூறுவதே வீரவனப் புராணம் என்பது.  இந்த கோவிலின் முக்கிய அம்சமாக இக்கோவிலின் கோபுரம் உள்ளது. ஏனெனில் இக்கோபுரம் முழுமையான கூம்பு அமைப்பை பெற்றுள்ளது. இப்படி ஒரு அமைப்பை தமிழ் நாட்டில் உள்ள எந்த ஆலயத்திலும் காண முடியாது.  
இந்த புராணம் காலம் சென்று விட்ட மகா வித்வான் திரு மீனாஷி சுந்தரம் பிள்ளை என்பவரால் 1900 ஆண்டிற்கு முன்னால் ( 1862 ஆம் ஆண்டு வாக்கில் இருக்கலாம் ) எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.///

இந்த ப்லாகில் இதைப் பற்றிப் படித்தேன். அத்துடன் நான் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.  

முழுக்கதையையும் இங்கே படியுங்கள். 

 கூம்பு வடிவ கோபுரம்.
வீரன் ??
பாண்டிய /சோழ மன்னன்..

அந்தணர்

அகத்தியர்.

சிவபெருமான்.
பெருமாள்
குபேரன்.
பாம்புப் பிடாரன்.
கல்லால மரம்.
நாகங்கள்.

கல்பூக்கள். 


வாயிலில் ஒரு பக்கம் மட்டும் சங்கு இலச்சினை.

வீரனும் மன்னனும் அந்தணரும் அகத்தியரும் வழிபட்ட ஸ்தலம் இக்கோயில். 

இதையும் பாருங்க.

சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை புறவாயிற் சிற்பங்கள்


5 கருத்துகள் :

பரிவை சே.குமார் சொன்னது…

அறியாத ஒரு தகவலுடன் அருமையான படங்கள்...
அருமை அக்கா....

G.M Balasubramaniam சொன்னது…

இதேபோன்ற கதைகள் பல கோவில்களுக்கும் சொல்லப் படுகிறது அற்யாமல் யாரோ எதையோ வெட்ட ரத்தம் வருவதும் லிங்கம் தெரிவதும் அங்கு கோவில் எழும்புவதும் . கோவில்களைப் பற்றிய கற்பனைகள் குறைந்து விட்டதோ என்று தோன்றுகிறது

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படங்களும் தகவல்களும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார் சகோ

ஆமாம் பாலா சார். நானும் இதுபோல் நினைத்திருக்கிறேன் :) கருத்துக்கு நன்றி :)

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...