வெள்ளி, 15 ஜூலை, 2016

சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை புறவாயிற் சிற்பங்கள்.

காரைக்குடிக்கு அருகில் இருக்கும் சாக்கோட்டை வீர சேகர உமையாம்பிகை கோயிலுக்குச் சென்றபோது அதன் வெளி மண்டபத்தில் அழகழகான சிற்பங்கள் வண்ணக் கோலங்களில் கண்ணைக் கவர்ந்தன. அங்கே நான் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

இந்தக்  கோயில் 500 -1000 ஆண்டு பழமை வாய்ந்தது. ஈசன் வீர சேகரர் என்ற திருமுடி தழும்பர் , அம்மை உமையாம்பிகை. ஸ்தலமரம் வீரை மரம். புஷ்கரணி சோழ தீர்த்தம். இது பத்தின சுவாரசியமான கதைகளை இங்கே படித்தேன். வீரவனப் புராணம் என்று சாந்திப் ப்ரியா ப்லாகில் என் ஆர் ஜெயராமன் என்பவர் எழுதி இருக்கிறார்.

எழுநிலைக் கோபுரம், விக்ரம விஜய விநாயகர், இரட்டை நாய் வாகனத்துடன் கூடிய பைரவர், சுயம்பு மூர்த்தியான வீர சேகரர் இக்கோயிலின் சிறப்பு. புழுங்கல் அரிசி சாதம் படைக்கப்படுது. குழந்தைப் பேறு கிட்டவும்., கண் நோய்கள் நீங்கவும் இங்கே வேண்டிக்கிறாங்க.

சோழ அரசனும் பாண்டிய அரசனும், குபேரனும் கூட வழிபட்ட ஸ்தலம். வீரன் என்னும் வேடன் வள்ளிக்கிழங்குக்காகத் தோண்ட அங்கே கிடைத்த மூர்த்தியாதலின் இம்மூர்த்திக்கு வீர சேகரர் என்றுபேர். இந்த ஊருக்கும் வீரவனம் என்று பேர் இருந்திருக்கு.

கோஷ்ட தெய்வங்கள் என்றும் சொல்லலாம். அழகான திருவாச்சிகளுடன் அம்பிகைகள் காட்சி தரும் அழகே அழகு. இவற்றைப் பெரியவெங்காவயலைச் சேர்ந்த  கே. செல்வராஜ் ஸ்தபதி அழகுற வண்ணம் தீட்டி உள்ளார்.


அழகென்ற சொல்லுக்கு முருகன் வெளிப்புற மண்டபத்தின் வலப்பக்க முதல் தூணில் காட்சியளிக்கிறார். 
அடுத்து குழலூதும் கிருஷ்ணர்.

நாயகி
சங்கரி
சாம்பவி
மாலினி
அர்த்தநாரீஸ்வரர். மீனாக்ஷி சுந்தரேசுவரர்.
சூலினி
சிவபெருமானின் திருநடனம். கீழே முயலகன், பக்கத்தில் உமை.
சிவன்.
மகா காளி 


மகா துர்க்கை.
மகா லெக்ஷ்மி.

இன்னும் பல சிறப்புகளை அடுத்த இடுகையில் பகிர்கிறேன்.


5 கருத்துகள் :

பரிவை சே.குமார் சொன்னது…

சாக்கோட்டை வீரசேகர் கோவில் படங்கள் அருமை...

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

WHY ARE THEY PAINTING ON THE TOP ? They don't seem to understand the value.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல படங்கள்....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார் சகோ

நன்றி பாஸ்கர் அதான் தெரில.. ஹ்ம்ம்

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...