வெள்ளி, 1 ஏப்ரல், 2016

அர்வேலம் குகைகளும் பாண்டவர் வணங்கிய திருமூர்த்தங்களும். ( ARVALEM CAVES )சிவராம காரந்தின் மூகஜ்ஜிய கனசுகளுவைக் கல்லூரிப் பருவத்தில் படித்தபோது லிங்க வழிபாடு பற்றி சில விபரங்களைத் தெரிந்துகொண்டதுண்டு.  சில மாதங்களுக்கு முன் கோவா சென்றிருந்தபோது கோயில்களில் நாம் அம்மையும் அப்பனுமாக வழிபடும் ிருமூர்த்்க சங்வேலிின் அர்வேலம் குகைகளில் (தனித்தனி குகைகளுக்குள்) பீடம் தனியாகவும் லிங்கம் தனியாகவும் அமைக்கப்பட்ட திருமூர்த்தங்களாக வெவ்வேறு நிலைகளில் காண முடிந்தது. 

கடற்கரைகளுக்குப் புகழ் பெற்றது கோவா. ஆனால் வாடகை டாக்ஸியில் முதல் நாள் நார்த் கோவா மறுநாள் சவுத் கோவா பீச்சுகளோடு அங்கங்கே இருக்கும் பல்வேறு கோயில்களையும் கண்டு களித்தோம். முதல் நாள் அர்வேலம் குகைகளுக்குத்தான் காலையில் விசிட். மிக அழகான ஐந்து குகைகள். மக்கள் உள்ளே புகுந்து குப்பைகளைப் போடலாம் என்பதால் கம்பிக் கூண்டு வேலி பாதுக்காப்பில் திருமூர்த்தங்கள்  இருந்தன . 
 

 அர்வேலம் குகைகள் ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவையாம். புத்த விஹாரங்களில் இருப்பது போன்று செம்புராங்கற்களால் கட்டி இருக்கும் பாணியை வைத்து புத்தமதத்தைச் சார்ந்தவை என்று நம்பப்படுகின்றன. ஆனால் லிங்கங்கள் இங்கே அமைக்கப்பட்டிருப்பதால் அவை புத்தமதத்தை சாரவில்லை எனவும் சொல்லப்படுகிறது. செம்புராங்கற்களைக் ( சிவப்பு மண் + பாறை ) கொண்டு அமைந்திருக்கும் இக்குகைகளில் பாண்டவர் தங்கள் வனவாச காலத்தில் 12 ஆண்டுகள் மறைந்திருந்து வாழ்ந்த வாழ்விடம் என்றும் இவை அவர்கள் வணங்கிய திருமூர்த்தங்கள் என்றும் நம்பப்படுகின்றது. 


கோயிலுக்கு உண்டான அமைப்பும் இல்லாமல், எந்தவித வண்ணப் பூச்சுகளோ அலங்காரங்களோ இல்லாமல், வெறும் பாறைகளின் மேல் விதம் விதமான லிங்கங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஐவர் வழிபட்டதால் ஐந்து லிங்கங்கள் இருக்கின்றன என்று ஆர்க்கியாலஜிகல் போர்டு சொல்லியது. இந்த லிங்கங்களின் தண்டும் பீடமும் அமைக்கப்பட்ட முறை எல்லோரா, எலிஃபேண்டா குகைகளை நினைவு படுத்துகிறதாம்.


ஐந்து திருமூர்த்தங்களின் அமைப்பைப் பற்றியும் ஆர்க்கியாலஜிகல் போர்டு விளக்கம் கொடுத்துள்ளது. முதல் திருமூர்த்தம் சோலார் டிஸ்க் எனப்படும் தகட்டில் அமைக்கப்பட்ட லிங்க வடிவம். கீழே தகடு போன்ற அமைப்பு உள்ளது.
இரண்டாம் திருமூர்த்தத்தின்  கீழிருக்கும் சதுர பீடத்தில் ”சாம்பபுரவசி ரவி “ ( SAMBAPURAVASI RAVI) என்று சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.இது ஏழாம் நூற்றாண்டில் இதை வடிவமைத்து வழங்கியவரைக் குறிக்கிறதாம். மேலும் இது சூரியனும் சிவனும் சேர்ந்த ஒருங்கிணைப்பினையும் இதனை வடிவமைத்தவரையும்  குறிப்பிடுகிறதாம்.
மூன்றாம் திருமூர்த்தம். இதன் உருளை வடிவ லிங்கமும் சதுர வடிவ பீடமும் எல்லோரா எலிஃபேண்டா குகைகளில் வடிக்கப்பட்டிருக்கும் அமைப்பினைக் குறிப்பிடுகிறதாம்.
இரண்டாம் குகையினுள் இருக்கும் நான்காம் திருமூர்த்தத்தில் தூண் போன்ற அடித்தண்டும் பீடமும்  அதன் கிழிருக்கும் லிங்கத்தின் உருளைப் பகுதியும் தனித்தனியாகத் தென்படுகின்றன.
ஐந்தாவது திரு மூர்த்தத்தில் மேல் முனையில் அம்பைப் போன்று ( வேல் போன்று ) காணப்படுவதால் இது கார்த்திகேயரை வழிமொழிவதாக எழுதப்பட்டுள்ளது.
ஒரு குகையில் ஓட்டை தென்பட்டது. உள்ளே சிவப்பு நிறத்தில் இருக்கும் இக்குகைகள் மழை நீர் வடிவதாலும் வெய்யிலின் தாக்கத்தாலும் வெளிப்புறம் கன்னங்கரேலென்று கருப்புக் கல்லில் அமைந்தது போல இருந்தது.

இவை எல்லாம் தவிர வடமேற்கில் இன்னொரு குகையில் இருக்கும் லிங்கத்தின் பீடத்தில் ஆறாம் நூற்றாண்டின் ப்ராஹ்மி எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றனவாம்.

மழை நீர் வெளியேறும் பாதை இது . செம்புராங்கற்களால் அமைக்கப்பட்ட நீர்த்தாரை அமைப்பு.
இது குகைகளின் மேல் பகுதிக்குச் செல்லும் வழி.
இது வெறும் அறையாக இருந்தது. வாழ்விடமாக இருந்திருக்கலாம்.

இவை தஞ்சைப் பகுதியில் காணப்படும் பள்ளிப்படைக் கோயில்களை ( கோபுரம் இல்லாமல் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது ) ஒத்திருக்கின்றன என்பது என் கணிப்பு !

மொத்தத்தில் அர்வேலம் பாண்டவர் குகைகளில் லிங்கரூபத்தில் இயைந்த சைவம், கௌமாரம், சூர்ய வழிபாடு, ஆகியன சிறப்பாக நடந்தேறி இருக்கின்றன.

10 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கோவா சென்றுள்ளேன். ஆனால் இந்த இடம் சென்றது இல்லை. இங்கு தங்களின் பதிவினில் பலவித லிங்க தரிஸனம் செய்ய முடிந்தது. தகவல்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றிகள்.

Velu Mani சொன்னது…

Very Good Information.Tq

G.M Balasubramaniam சொன்னது…

நான் எழுதி இருந்த நாம் படைத்த கடவுள்கள் பதிவைப் படித்தீர்களா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி விஜிகே சார்

நன்றி வேலு

இல்லை பாலா சார். நாம் படைத்த கடவுளின் இணைப்பு அனுப்ப வேண்டுகிறேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

பரிவை சே.குமார் சொன்னது…

அறியாத இடம்... அழகிய படங்களுடன் அறியத் தந்தீர்கள் அக்கா...

Dr B Jambulingam சொன்னது…

முற்றிலும் வித்தியாசமான செய்திகளை அறிந்தேன். புகைப்படங்களைக் கண்டேன். நன்றி.

Anuradha Prem சொன்னது…

அழகிய இடம்.....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார் சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி அனுராதா.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...