செவ்வாய், 15 செப்டம்பர், 2015

கலாச்சாரம் காக்கும் சிலைகள் - ஹைதை & சென்னை ஏர்போர்ட். MADRAS & HYDERABAD AIRPORTS.

பல முறை ஹைதை ஏர்போர்ட் சென்றிருந்தாலும் சிலமுறையே சுதாரிப்பாக ஃபோட்டோ எடுத்தேன். ஹைதை ஏர்போர்ட் ஒரு டிலைட். ஓவியங்களும் சிலைகளுமாகக் கலக்கி இருப்பாங்க.

ஆகஸ்ட் 15 ஐ ஒட்டி காந்தி சிலை. 

 ராமர் , ஆஞ்சநேயர், ராவணன் என நினைக்கிறேன். யக்ஷகானம் போல ஏதோ கூத்துக் கலையின் உடையம்சம் எனத் தோன்றுகிறது. சாதாரண நாளிலே இந்த கண்ணாடிக் கதவுகளில் ஓவியங்கள் அழகூட்டும் ( பாத்ரூம் பக்கம் ) .

அங்கிருந்து செக் அவுட் செய்யும் பகுதியில் இந்த நீல மயில். இருந்தது. 


யுகாதியை கருப்பொருளாகக் கொண்டும் அமைக்கப்பட்ட  சிலைகள். பெண் சிற்பங்கள் கண்ணைக் கவர்ந்தன.

பேகேஜ் கலெக்‌ஷனுக்காகக் காத்திருந்த போது சுட்டது.

பெண் தெய்வங்களும் தேவதைகளும் அன்னங்களும் கொள்ளை அழகு இல்லையா :)

தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான தெருக்கூத்து,

பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம்,

கரகம்

ஏன் கர்நாடக இசை நிகழ்ச்சியையும் சிவபார்வதி நடனத்தையும் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது அதன் பக்கவாட்டுச் சுவர்கள்.

சென்னை ஏர்போட்டில் கண்டு களித்தேன் இக்குதிரைச் சிலையை ( இந்தத் தலைப்புக்குப் பொருத்தமில்லை எனினும். ஏர்போர்ட் சிலையல்லவா அதான் பகிர்கிறேன் ) :) HELEN OF TROY - ஹெலன் ஆஃப் ட்ராய் படம் ஞாபகம் வந்தது. :)

அது போக இந்த மீனவ உழைப்பாளர் சிலையும் மிக அழகு. :) கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் முயற்சியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கும் ஹைதை & சென்னை ஏர்போர்ட் மேனேஜ்மெண்ட்களுக்கு வாழ்த்துகள். ::)


5 கருத்துகள் :

சென்னை பித்தன் சொன்னது…

அழகை அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
ஒவ்வொரு படமும் ஒரு ஓவியமாய்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகிய படங்கள். சமீபத்திய பயணத்தின் போது சென்னை விமான நிலையத்தில் மஹாபலிபுரம் சிற்பங்களின் மாடல்கள் வைத்திருந்தார்கள். புகைப்படம் எடுக்க வில்லை! :(

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சென்னைப் பித்தன் சார்

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ :) ( ஏன் புகைப்படம் எடுக்கலை.. நேரமின்மையா.. ?

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...