புதன், 27 மே, 2015

பூங்காவுக்குள் இரு புராதனக் கோபுரங்கள்.


இரண்டாம் ராஜ ராஜசோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோயில்களைச் சுற்றிப் பிரம்மாண்டமான பூங்காவும் புல்வெளியும் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அழிந்து வரும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க யுனெஸ்கோ எடுத்திருக்கும் அதிரடி முயற்சி இது. இருந்தும் அங்கங்கே மக்கள் குப்பைகளைப் போட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள்.


இந்தியாவின் தொல்பொருள் துறையினாலும் , தமிழ்நாடு அறநிலையத் துறையினாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன இக்கோயில்கள். இரு கோயில்கள் என்றா சொன்னேன் ஆம் பக்கத்திலேயே  வேதவல்லி அம்மனுக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டிருக்கு.  சுற்றிலும் பூங்கா போன்ற எஃபெக்ட்.

வேதவல்லி அம்மன் கோயில் கோபுரம் நான்கு முகம் கொண்ட கோபுரம் போன்றது.

ஐராவதேசுவரர் கோயில் கோபுரம் தஞ்சை சிவன் கோயில் பாணியில் கட்டப்பட்ட நாற்சதுரக் கோபுரம்.

அகழி போல் கோயிலைச் சுற்றிலும் மழைநீர் ஓடப் பள்ளம்,

ரிஷபம் சுமந்த மதில்கள் என அக்காலக் கோட்டைகளை நினைவுபடுத்துகிறது கோயில் எதிர்த்தாற்போல ஒரு கோபுரமற்ற கோயில் நுழைவாயில் போன்ற அமைப்பு காணப்படுகின்றது.

கோயிலுக்குச் செல்லும்போதும் வெளிவரும்போதும் மிகவும் புத்துணர்ச்சியாக உணரவைத்தது இந்தப் பூங்கா.  மிக அருமையான பராமரிப்பு.

கடவுள் குடியிருக்கும் இடங்களைச் சோலை என்று சொல்வதுண்டு. மாலிருஞ்சோலை என்று பாடல்களில் திருமால் ( கள்ளழகர் ) குடி கொண்ட பழமுதிர் சோலை பற்றி வரும்.  வரும். ( ஞாபகம் வரமாட்டேங்குது அந்தப் பாடல் . ) ஆனா இங்கே நிஜமாவே சோலைக்குள் இருக்கின்றன  கோயில்கள்.

சென்று தரிசித்துப் புத்துணர்ச்சி அடைந்து வாருங்கள்.


5 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அழகான படங்களுடன் மிக அற்புதமான கட்டுரை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

நான்கு முகங்கள் கொண்ட கோபுரத்தின் இரண்டு முகங்களையாவது பார்த்ததில் மகிழ்ச்சியே ! மீதி இரண்டு முகங்களையும் தனியாக வேறொரு போட்டோ படமாகக் காட்டியிருக்கலாமே ! :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமை...

படங்கள் அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

அடுத்தடுத்த இடுகைகளில் பகிர்கிறேன் கோபால் சார் :)

நன்றி டிடி சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை அருமை! படங்கள்!!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...