எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 அக்டோபர், 2014

ஞானம் பிறந்த கதை.

1. எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்வது ஒரு உத்தி என்றால் எதுவும் தெரியாதது போல் காட்டிக்கொள்வதும் ஒரு உத்திதான் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க..

*******************************************************

2. என்னடா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை.
சென்னை வந்த போது போஸ்டரில் எல்லாம் ”என்னமோ நடக்குது”.. ”வாயை மூடிப் பேசவும்”. ( என்ன லாங்க்வேஜுலன்னு சொல்லல.. ) , ”என்னமோ ஏதோ”.. பேர் தட்டுப்பாடு போல இருக்கு.


*******************************************************

3. போல்டு & ப்யூட்டிஃபுல்லா.. இல்லா சாதாரணமாவா..அட வோட்டுப் போட எப்பிடிப் போவீங்கன்னு கேட்டேன். ஊர் விட்டு ஊர் மட்டுமில்ல ஸ்டேட் விட்டு ஸ்டேட் மாறிக்கிட்டே இருக்கும்போது வோட் எங்க போடுறதுன்னு தெரில..

இதுல சாதா ( மனிதன் ) தான் சோதா ( மனிதன் ) இல்லைன்னு நிரூபிக்குமா.. !


அப்பாடா நாமளும் அரசியல் ஸ்டேடஸ் போட்டு ஜோதில ஐக்கியமாயாச்சு.. இல்லாட்டா ஆட்டைல சேர்த்துக்கமாட்டாங்கபோல இருக்கே..

நானெல்லாம் அரசியல் நோக்கர்தான். கிங் மேக்கர் இல்லப்பா.


********************************************************

4. சில நதிகள் நாடுகளை இணைக்கின்றன. சில நதிகள் மாநிலங்களைப் பிரிக்கின்றன.

#தண்ணீர்_தண்ணீர்..


********************************************************


5. குப்பையில் குண்டு.

ஏம்பா உங்களுக்கு பார்க், கோயில் இதிலெல்லாம் வைச்சு அலுத்து போச்சா..
 


*********************************************************

6. கலைஞர்கள் வாழ்க்கை குழம்பிக் கிடக்கிறது அவர்களின் மனதைப் போல.
 

ததும்பும் பிரியங்களோடு வாழ்க்கை நடத்துபவர் தனித்தே இருக்கிறார்.
 

எல்லா இடங்களிலும் நடிக்கத் தெரிந்தவர்தான் வாழ்க்கையிலும் நம்பர் ஒன்னாக இருக்கிறார். 

*********************************************************

7. “அரசாளுவ.”. அப்பிடிங்கிற வார்த்தையைக் கண்டுபிடிச்சவங்க நாங்கதான். காரைக்குடிக்காரங்க. இதுக்கு காப்பி ரைட் யாரும் கோரமுடியாதுன்னு நினைக்கிறேன். இதுக்கு அர்த்தம் “அரசை ஆளுவாய்.” இப்பிடி சேட்டை செய்யிற குட்டிப் பசங்களைத் திட்டுவாங்க.. திட்டுல கூட எப்பிடி ஒரு வாழ்த்து.. செட்டிநாட்டுச் சொல்வழக்கு ரொம்ப அழகானது...


*********************************************************

8.  சிக்கலானவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. எளிமையானவர்களைப்புரிந்து கொள்ள முடிவதில்லை.

*******************************************************

9. எதையோ எழுத வந்து .. எதை எதையோ படிச்சு சிரிச்சு .. சிந்திச்சு. கடைசீல ரெண்டரை மணி நேரம் ஒண்ணுமே செய்யாம எதையாவது பகிர்ந்துட்டுப் போறாப்புல இருக்கு இந்த ஃபேஸ்புக் பிழைப்பு :)

******************************************************

10. தமிழ் தெரியாதவங்க எல்லாம் ஓட்டுப் போடுறாங்களே
 

இவங்க நாம என்ன எழுதி இருக்கோம்னு மொழி தெரிஞ்சு படிச்சுதான் போடுறாங்களா..#indibloggers.   

****************************************************** 
 
11. Pant ஐ காலுக்குக் கீழ போடுற ஃபாஷன் எப்போ மாறும். பசங்களோட எந்தப் Pant ஐ பார்த்தாலும் கறுப்பா தார் மாதிரியே இருக்கு.. முடில சீக்ரம் ஃபாஷனை மாத்துங்கப்பா..

********************************************************

12. அனைத்திற்கும் ஆசைப்படுங்கள்.. அனைத்திலும் சிக்கல் உண்டு ..அதை அமைதியாகச் சரியாக்கமுடியும் என்ற எண்ணம் இருந்தால்..

*******************************************************

13. சூழல் சிலசமயம்
சூலாகவும் மாறும்.
எந்தத் தவறுமில்லாமல்
சூலத்தின் மேல்
எலுமிச்சையாய்..


*******************************************************

14  சிலரை வித்யாசமானவர்கள் என்று நாமாகவே கற்பித்துக் கொள்கிறோம்.. அப்படி ஒன்றும் வித்யாசம் இல்லை..எல்லாமே ஒரு துளி அதிகம்..

******************************************************

15. ஒவ்வொருவருக்கும் என்று ஒரு தனி பாணி இருக்கிறது. முகநூல் தோழ தோழியரின் -- ஒவ்வொருவரின் எழுத்தையும் நேரம் வாய்க்கும்போது ரசிக்கிறேன்.

முதலில் சாதாரணமாக எழுதத் துவங்கினாலும் பின் வரும் காலங்களில் பிச்சு ஒதர்றாங்க.. அவங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் உருவாகிடுது.

நிறைய தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கியதில் முகநூலுக்குப் பெரும் பங்கிருக்கிறது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால் எழுத வைப்பவன் ., எழுத்தைப் பலரையும் சென்றடைய வைப்பவன் முகநூலான்.. நன்றிகள் முகநூலனுக்கு தினமும் பலரை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு..
 


*******************************************************

16. தாலி#

தாலி தேவையா இல்லையா என்பது கணவன் மனைவி இருவரைப் பொறுத்ததே..

அதைக் கழட்டி எறிவது ஆணவம், ஆத்திரம், வெறுப்பு, இந்த மூன்றைத் தவிர இன்னொன்றும் உண்டு.. தங்கத்தில் இருப்பதால் அடகு வைக்கவும்தான்.

அன்று நிலவறையில் அடைத்தவர்கள் இன்று தாலி என்ற வேலியால் அடைக்கிறார்கள். ஆனா ஒண்ணு கணவர்களும் இதுபோல் ஏதும் அணியவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தால் சந்தோஷமாயிருக்கும்.


******************************************************

17. எல்லாருக்கும் ஃப்ரெண்டா இருக்கிறதவிட ஃபாலோயரா இருக்கலாம்னு தோணுது. விருப்பப்பட்டபோது போய் படிச்சு லைக் போடலாம். இல்லாட்டி ஃப்ரெண்டா இருந்துகிட்டே நம்ம பக்கம் வரல அப்பிடிங்கிற அதிருப்திய நாலா பக்கமும் சம்பாதிக்காம.

*******************************************************

18. ஒன்றை எதிர்க்கிறோம். பின் அதுவே தான் ஆக முயற்சிக்கிறோம். 

*******************************************************

19. எதிர்ப்புணர்வு ஏன்.. அடையாளமற்றுப் போவோமென்றோ. திரும்ப அடக்கப்படுவோமோவென்றோ..அடிமைப்படுவோமென்றோ.

********************************************************

20. ஈடுபாடோட இருந்த விஷயம் ஒன்று ஏதோ ஒரு புள்ளியில் அதனோட ஈர்ப்பை இழக்குது.. —  # feeling ஞானம் பிறந்த கதை.  

****************************************************** 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)
 
 35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.


2 கருத்துகள்:

  1. ஞானம் பிறக்க வைத்த சிந்தனைகள் அத்தனையும் சிறப்பாக இருக்கு. அதிலும் 1,8,9,12,14,17,18,19,20 மிகச்சிறப்பு. மற்றவைகளை ரசித்தேன்."அரசாளுவ" அழகேதான். நன்றிக்கா.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...