செவ்வாய், 10 ஜூன், 2014

லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.

இந்த வருடம் குடியரசு தினத்தில் லால்பாகில் காய்கனிக் கண்காட்சி நடைபெற்றது. நாம் உண்ணும் உணவில் காய்கறிகளின் மகத்துவத்தை விளக்க காய்கனிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் காய்கனிகளே கார்ட்டூன் காரெக்டர்களாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன. காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் ஆகியனவும் தொட்டிச் செடியில் வளர்க்கப்பட்டிருந்தன.

கீரைகளில்தான் எத்தனை வகைகள் (Amaranth ) முளைக்கீரையே பல விதங்களில் இருந்தது. கிட்டத்தட்ட 50 விதமான கீரைகளுக்கு மேல் இருந்தன. !

லால்பாகிற்குள்ளே செல்ல நான்கு நுழைவாயில்கள் உண்டு.உள்ளே விதம் விதமான கத்திரிக்காய், புடலங்காய், பூசணி, பரங்கி, தக்காளி, முருங்கை, பப்பாளி, பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் , பச்சை மிளகாய், பஜ்ஜி மிளகாய், குட மிளகாய், வாழைமரம், கீரை வகைகள், மூலிகைகள் அனைத்தையுமே தொட்டிச் செடிகளில் வளர்த்துக் காண்பித்து இருந்தார்கள்.

பீர்க்கங்காய்களும் சரம் சரமாகத் தொங்கிக்கொண்டிருந்தன

புடலங்காய்களைப் பறித்து பச்சையாகத் தின்றுவிடலாம் போல அழகு.

பச்சை மிளகாய் கொத்துக்கொத்தாகக் காய்த்து இருந்தது.

 பூசணியும்

பரங்கிக்காயும்

பஜ்ஜி மிளகாய்.

விதம் விதமான கீரைகள். முளைக்கீரை, அது போக தண்டுக்கீரை,அரைக்கீரை, லச்சகெட்ட கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பாலக், பசலை, கருவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, முள்ளங்கிக் கீரை, பார்ஸ்லி, சீலரி, வெங்காயத்தாள்,  பருப்புக் கீரை, வல்லாரை,கோங்குரா,கடுகுக்கீரை, சோம்புக் கீரை,முடக்கத்தான், முள்ளுமுருங்கை, முசுமுசுக்கை, தூதுவளை , கரிசலாங்கண்ணி, கையாந்தரை, கீழாநெல்லி, என்று விதம் விதமான கீரைகள். பச்சைத் தண்ணியா பார்த்ததுமே சாப்பிட்வேண்டும்போல் இருந்தன.

நீளக் கத்திரிக்காய்.

தக்காளி இம்புட்டா காய்க்கும். மாடி வீட்டில் கூட தோட்டம் போடலாம் போலே. அடிக்கடி ஊர் மாறும்போது எந்தத் தொட்டிச் செடியத் தூக்கிப் போறது. நமக்கெல்லாம் கடைக்காய்கறிதான் வாச்சிருக்கு. :)

பார்த்தவுடனேயே கைக்கெட்டிய காய்களைப் பறிக்கலாமா என்று தோன்றும் அளவு பக்கத்தில் காய்த்து இருந்தன அனைத்தும். சென்று வந்தவுடன் கண்ணுக்குள் எல்லாம் பச்சைப் பசேலென்று நிரம்பிக் கிடந்த காய்கறிகள், கீரைகளின் மகத்துவம் புரிந்தது போல் இருந்தது

/////The Horticultural Flower show is something to look forward to at this time of the year.  The main attraction this year is the display of world’s biggest and aromatic flowers along with vertical gardens consisting of vegetable and ornamental plants.  Some of the shows this time at the gala include The Indian Floral Art, Ikebana, Vegetable Carving, Dutch Art, Thai Art, Dry Flowers, Janur, Bonsai and Belgium Arrangement. This year another attraction has been added “Depiction of Mute Memories of Lalbagh during Colonial Period” (18th- 19th Century), picture gallery of Golden Era of Lalbagh (1963-2013).   Some of the photos displayed to unfold the history are an Antique photograph of lalbagh 1900, Dancing cook pines 1910, Artificial Water Fall 1935, Growing apple in Bangalore was racing against the climate. Mr.HC Javaraya standing amidst thriving apple orchard 1942, A Gala part in Glass House 1930, View of Garden party 1930, Majestic flower arrangement 1930,Portrait of Mr H.C.Javaraya 1940, Unique Sunshade-Turning Roof 1934, A joyous British Couple, Visiti of Sir and Lady Mirza Ismail, Dewan of Mysore State, Visit of top imperial government officials 1934, The Lalbagh House 1930, Flower Shows 1930,Lantern shaped guard tower at West Gate of Lalbagh, Statue of Chamaraja Wadeyar,Visits of Film stars, Danseus, The Maha raja of Mysore SirJaya Chamaraja Wodeyar acconpanying Queen Elizebeth 1961, Governor of Karnataka,  Smt.Indira Gandhi, President of India Mr.Jakir Hussian, Sri Devaraj Urs and Sri K.H.Patil///

இது சும்மா தகவலுக்காக. இதுல இருக்க எதையும் எடுக்கல. போற வழியில பார்த்து எல்லாத்தையும் சுட்டுட்டு வந்தேன். அம்புட்டுத்தேன்.  இம்புட்டுக் காய்கறியும் சமைச்சுச் சாப்பிட்டா எந்த நோவும் வராது. சோ காய்கறி நிறைய சாப்பிடுங்க. வெயிட்டும் போடாது. ஹெல்தி உணவு. வெய்யிலின் கொடுமையையும் போக்கும். குறிப்பா கீரைகள். :)

டிஸ்கி :-  இதையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…படங்களும் தகவல்களும் அருமை சகோதரி...

ராமலக்ஷ்மி சொன்னது…

பல காய், கனி, கீரை வகைகளை நானும் செடியோடு பார்த்தது இங்குதான்:)! நல்ல பகிர்வு.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி ராமலெக்ஷ்மி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...