வெள்ளி, 18 ஏப்ரல், 2014

ஐடி ஹப்புகளும் பப்புகளும். ஹாப்பி ஹவர்ஸும்.ஐடி ஹப்புகளும் பப்புகளும். ஹாப்பி ஹவர்ஸும். 
பெங்களூருவில் இரவு பதினோரு மணியில் இருந்து ஒரு மணி வரை நைட் லைஃப் டெட்லைனை அதிகரிக்கப் போவதாக கர்நாடக அரசு அறிவித்ததும் பொதுமக்களில் ஒரு சிலர் மட்டுமே ஆதரிக்க  பல்வேறு துறை மக்களும் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார்கள். 
கடினப் பணியில் இருப்பவர்களுக்கு இரவு நேரம்தான் ரிலாக்ஸிங் டைம். அந்த நேரத்தில் நைட் லைஃப் டெட்லைனை ( இரவு வாழ்க்கைக்கான  காலக் கெடுவை ஒரு மணி வரை நீட்டிப்பது சந்தோஷமான விஷயம் என்று தருண் ஜெயின் என்பவர் கூறி இருக்கிறார்.
நகரம் வளர்ச்சியுறும்போது அதற்கீடான நேரமும் வழங்கப்பட வேண்டும். வார இறுதி நாட்களில் ஏற்படும் அளவிறந்த கூட்டத்தில் ஷாப்பிங்க் செய்ய இயல்வதில்லை. எனவே இரவில் நகரில் உலவும் காலக் கெடுவை நீட்டித்தது சரிதான் என்கிறார் விஜி சதீஷ் என்ற சாஃப்ட்வேர் ஊழியர்.
மக்கள் தாங்களாகவே ஒழுங்கு மீறாமல் நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. இல்லை என்றால் எந்த நேரமானாலும் பிரச்சனைதான்.. இரவு காலக் கெடுவை நீட்டிக்குமுன் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும்  முன்னேற்பாடுகளையும் பலமாகச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள். பாதுகாப்பான சுற்றுச் சூழலை ரெஸ்டாரெண்டுகளிலும் ஏற்படுத்த வேண்டும்.
ரெஸ்டாரெண்டுக்குச் செல்வதற்கும் ஷாப்பிங் செல்வதற்கும் இந்த டெட்லைன் பரவாயில்லை. ஆனால் பாருக்கும் பப்புக்கும் இந்தக் கால நீட்டிப்பு தரக்கூடாது என்றும் சொல்கிறார்கள். பாதுகாவலர்களுக்குத் தலைவலியை உண்டாக்கும். பெரும் சுமையையும் பொறுப்புக்களையும் பணியையும் கொடுக்கும் என்கிறார்கள்.
காவல் நிலையங்களில் போதுமான பணியாளர்களை நியமித்தபின் சி எம் கால நீட்டிப்புக் கொடுக்கலாம் என்ற அபிப்பிராயமும் இருக்கிறது. சிறு அளவிலான மக்களைத் திருப்திப்படுத்த அரசு பெரும் அளவில் தொல்லைகளை வரவழைத்துக் கொள்கிறது. பெரும்பான்மையோருக்கு இதனால் ( மத்தியதரக் குடும்பத்தினர் இரவில்) தொல்லையே ஏற்படும்.முதியோர்களுக்கு  ( பென்ஷனர்ஸ் சிட்டி ) பெரும் அளவில் இதனால் பாதிப்பு ஏற்படும்.
குடித்து விட்டு வண்டியோட்டுதல், பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், விபத்துக்கள், பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல், கற்பழிப்புக் குற்றம். கடத்தல் ஆகியன ஏற்பட வழிகோலும்  என்பதால் அரசு பெங்களூரின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் இந்த மிட்நைட் எக்ஸ்டென்ஷனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
வார நாட்களில் ஷாப்பிங் மால்கள், உணவகங்களுக்கும். வார இறுதி நாட்களில் ( சனி ஞாயிறு ) பார்& பப்புகளுக்கும் நீட்டிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். உள்துறை அமைச்சர் இது போலீஸ், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், அனைவரிடமும் 3 மாதமாக கருத்துக்கணிப்பு நிகழ்த்தப்பட்டபின்  முடிவு செய்யப்பட்டதாகக் கூறுகிறார். பொதுமக்களின் தினசரி வாழ்வுக்கும் , அமைதிக்கும் பங்கம் ஏற்படாத வரையில் இந்த நைட்லைஃப் எக்ஸ்டென்ஷன் எந்த டென்ஷனையும் ஏற்படுத்தப் போவதில்லை.

4 கருத்துகள் :

கவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…


வணக்கம்!

நாட்டின் நிலையைநன் ஆய்ந்து செயல்பட்டால்
கூட்டும் இனிமை கொழித்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

வருண் சொன்னது…

When fun goes to a higher level,crime rate will go to a higher level too! They are directly proportional to each other. It is a transition time! We are becoming highly brutally civilized I suppose! lol However People those who go to bed at10 pm dont have to worry as "such a world" dont exist for them.:)

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கு நன்றி கவிஞரே

நன்றி வருண். ஆம் உண்மைதான்.. இப்படி ஒரு உலகம் இருப்பதை அறியாதவர்கள் கொடுத்து வைத்தவர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...