எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மின்சாரக் கண்ணா. (சிறுகதை) தினமலரில்.

ஒரு  சாயங்கால நேரம். ”மின்சாரப் பூவே..” எனப் பாடிக்கொண்டிருந்தார் ரஜனிகாந்த் தொலைக்காட்சியில். ”மின்சாரக் கண்ணா” என்றபடி ரம்யா கிருஷ்ணன் ஒய்யாரமாக ஆடியபடி வர..  அடுத்து சீரியல் போடுவதற்குள் கிரைண்டரில் போட்ட மாவை வழிக்க எழுந்தாள்  அகல்யா.

கூட்டுக் குடும்பத்தில் எல்லாரும் சீரியல் விரும்பிகளாக இருப்பதால் பிரச்சனை இல்லை. மற்றவர்கள் சீரியல் பார்க்கும் நேரத்திலாவது கணவரோடு தனிமையில் பேச டைம் கிடைக்கும் என்பதால் அவள் சீரியல்களை வரவேற்றாள் எனலாம். 


அலுவலகத்திலிருந்து வந்த கணவர் கை கால் முகம் கழுவி துண்டு எடுத்துத் துடைத்தபடி போக பின்னேயே மிக்சரும். ஃபில்டர் காஃபியுமாக போய் அமர்ந்தாள். அவர்கள் பெட்ரூம் என்றாலும்  மாமியாரின் காட்ரெஜ் பீரோவும் அங்கேயே இருந்ததால் எல்லாரும் பணம் எடுக்க ட்ரெஸ் எடுக்க வந்தபடி இருப்பார்கள். பெட்ரூம் என்பது இரவில்தான். மற்றபடி அதுவும் ஒரு ரூம்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது மாமியார்.,” மாவைப் பாரும்மா. தண்ணியில்லாமல் ஓடுற மாதிரி இருக்கு..” என்றார்.  காஃபி குடித்த கணவர் விரல்களைப் பிடித்தபடி பேசிக்கொண்டே இருந்தார். அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை எண்ணியபடியும்.

எத்தனையோ கிரைண்டர்கள் மாறிவிட்டபோதும் ., {அவளுக்கு சீராக கொடுத்த டேபிள் டாப் கவர் போட்டு ஒரு மூலையில் இருந்தது. ) பழைய கிரைண்டரே நன்கு அரைக்கும் என்பது அவள் மாமியாரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. கிரைண்டர் இருந்த இடத்தில் த்ரீபின் ப்ளக் என்பதால் சில சமயம் ஷாக் அடிக்கும். எப்பவோ கட்டிய வீடு என்பதால் ஒழுங்காக எர்த் கனெக்‌ஷன் கொடுக்காததுதான் காரணம்.


விரல்களை கணவரின் பிடியிலிருந்து உருவியபடி.,” இருங்க போய் மாவைப் பார்த்துட்டு வர்றேன்” என நகர்ந்தாள். கணவர் செல்ஃபோனை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தார்.

கிரைண்டருக்குப் பக்கத்தில் ஒரு ஸ்டூல் போட்டு அமர்ந்துதான் மாவை அள்ளவேண்டும். எர்த் இல்லாததால் மாவு நிறைய அள்ள வேண்டி இருப்பதாலும். ஒரு மரப்பலகையில் நின்று நெடுநேரம் அள்ள முடியாது என்பதால் இந்த ஸ்டூல் ஏற்பாடு.  ஸ்டூலின் காலிலேயே கால் வைத்துக் கொள்வதால் கரண்டும்   பாஸாகாது.

மாவு அரைந்துவிட்டது என அள்ளத்தொடங்கினாள். அப்போது டிவியில் மிக முக்கியமான கட்டமாக ஹீரோயின் சோகமாக வசனம் பேசி அழும் காட்சி.. அவ்வளவுதான் இன்னிக்குப் பூரா இதேதான் இந்த எபிசோடு முடிகிறவரைக்கும் என நினைத்தபடி இருந்தவள் திடீரென நிழலடிக்கவும் மிக அருகில் கணவரின் முகத்தைப் பார்த்தாள்.

கண்ணோடு கண் நோக்கியவர் யாரும் இல்லை என்ற தைரியத்தில் கன்னத்தில் முத்தமிட்டார். இருவருக்கும் சுரென்று கரெண்ட் அடித்தாற்போலிருந்தது. நிஜமாவே முத்தம் இட்டால் ஷாக் அடிக்குமா.. இருவருக்கும் தெரியவில்லை.

திரும்ப இன்னொரு கன்னத்தில் முத்தமிட்டார். திரும்ப அதிக அளவில் சுர் ரென்று அடித்துத் தூக்கிவாரிப்போட்டது. . அது எர்த் இல்லாத கிரைண்டரில் இவள் கைவைத்தபடி மாவை அள்ளியதால் கரெண்டு இரண்டுபேரையும் லேசாக கிஸ் அடித்திருக்கிறது என்று.

மாவுக் கையோடு கிரைண்டரை தொடாமல்  ., ”நல்ல வேளை :;போங்க் அப்பால.. நல்லாக் கொடுத்தீங்க கரெண்டு முத்தம். ஷாக் அடிச்சாப்புல“ என இவள் தள்ளவும் ., சீரியல் முடிந்து மற்றவர்கள் ஹாலில் சானலைத் திருப்ப இன்னொரு சானலில் ரஜனிகாந்த் பாடிக் கொண்டிருந்தார் மின்சாரப் பூவே என்று..:  இவள் தன் மின்சாரக் கண்ணனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...