ஞாயிறு, 13 அக்டோபர், 2013

மைசூர் அரண்மனையும், தசராவும், சாமுண்டீஸ்வரியும்.

சாமுண்டி தேவி அரசோச்சும் மைசூருக்கு தசரா பார்க்கப் போனேன் சில நாட்கள் முன்பு. பாக்கேஜ் டூர்களை நம்பிப் போனால் நாம் அதன் முழு அழகையும் ரசிக்க முடியாது. தனியாகப் போனால்தான் நின்று நிதானமாகப் பார்த்து வர முடியும்.

மேலும் தசராவின் கடைசி  இரு நாட்கள் தான் ஒளி அலங்காரமும் , ஊர்வலமும் இருக்குமாம். தினப்படி  அரண்மனை வளாகத்தில் மேடை போடப்பட்டு  சேர்கள் அடுக்கப்பட்டிருந்தன.

நல்ல மதிய வெய்யிலில் என்றும் பார்த்து வரும் அரண்மனையையும், அதன் பிரம்மாண்டத்தையும், ஓவியங்களையும், சிற்பங்களையும், பளபளப்பையும் திரும்ப ரசித்து வந்தேன்.

வெள்ளிக் கதவுகள் , தங்க சிம்மாசனங்கள் எல்லாம் மெருகேறி இன்னும் ஜொலிக்கின்றன. தசராவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது அரண்மனை. பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்ட பாதைகளின் வழியே சென்று வந்தோம். கண்ணாடிக் கூண்டுகளுக்குள் இருக்கும் விலைமதிப்பிலாத பொருட்கள் வெகு சிறப்புத்தான்.

மாட மாளிகை என்ன கூட கோபுரமென்ன., உப்பரிகை, மாடங்கள், மண்டபங்கள், கோயில்கள், கோபுரங்கள், யப்பா, நல்லாத்தான் வாழ்ந்திருக்காங்க அந்தக் கால ராஜாக்கள். கிருஷ்ண ராஜ உடையார் தவிர வேறு ராணிகள் பெயர் எல்லாம் படித்தவுடன் மறந்து விடுகிறது.

நூற்றுக் கணக்கான காவலர்கள் பாதுகாப்பில் அரண்மனை பக்காவாக இருக்கிறது. என்ன  எதையும் புகைப்படம் எடுக்க முடியவில்லை அதுதான் குறை. வாயிலிலேயே காமிரா, செல்ஃபோன் எல்லாவற்றையும் லாக்கரில் வைத்து சாவியை எடுத்துக் கொண்டு போகணும்.

ராமலெக்ஷ்மி ராஜன் இதுக்காகவே இரண்டு நாட்கள் மைசூரில் சென்று தங்கி புகைப்படம் எடுத்ததாகக் கூறினார். பயங்கரக் கூட்டமாக இருக்குமாம்.  சரியாக ப்ளான் செய்யாமல் முன்னரே சென்றதால் அரண்மனையின் வெளிப்பக்கம் கிடைத்ததை எடுத்து வந்தேன்.

இந்த   மூன்று  புகைப்படங்களும் ஃபோட்டோ வாங்கி எடுத்தது. வழக்கம் போல நானும் உங்களைப் போல ஃபோட்டோவில்தான் மைசூரின் தசரா கொண்டாட்டங்களையும் விளக்கு அலங்காரத்தையும் பார்த்தேன்.அடித்துப் பொழிந்த மழையில் நனைந்து மஹிஷாசுரனை அழித்து வெற்றித் திருமகளாய் ஜொலிக்கும் சாமுண்டா தேவியை மட்டும் கண்குளிரக் குளிர நன்கு தரிசித்து வந்தேன்.

10 கருத்துகள் :

ஸ்கூல் பையன் சொன்னது…

அருமையான படங்கள்... இன்று மைசூரில் இருப்பவர்கள் ஒளி அலங்காரங்களை ரசிக்கலாம்....

பெயரில்லா சொன்னது…

அன்பான வணக்கங்கள். தசரா சமயத்தில் பத்து நாட்களும், அரண்மனை ஒளி அலங்காரத்தோடு காட்சி தரும். முக்கிய வீதிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் இந்நாட்களில் இரவில் ஒளியுடன் ஜொலிக்கும். சாமுண்டீஸ்வரி மலைமேலிருந்து, "ஸுஸ்வாகதா" - (நல்வரவு) என்று - விளக்கொளியில் தெரியும்.
கிருஷ்ணராஜ சாகரில் உள்ள பிருந்தாவன் தோட்டம் விளக்கொளியில், மனதைக்கொள்ளைகொள்ளும். (எல்லா நாட்களுமே)

மற்ற நாட்களில், அரண்மனை, ஞாயிற்றுக்கிழமைகள், பண்டிகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இரவில் ஒளி அலங்காரத்துடன் இருக்கும்.

LAKSHMISAROJA KUMAR சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான படங்கள் மூலம் நாங்கள் சுற்றி வந்தோம்... நன்றி...

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமையான படங்கள் தேனம்மை. என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி. சென்ற வருட தசரா படங்களின் தொகுப்பு 3 பாகமாக இங்கே உள்ளன:

http://tamilamudam.blogspot.com/2012/11/402-1.html

http://tamilamudam.blogspot.com/2012/12/2012-2.html

http://tamilamudam.blogspot.com/2012/12/blog-post_30.html

தசரா அல்லாத சமயத்தில் விளக்கொளியில் அரண்மனையைப் பலமுறை பார்த்திருக்கிறேன், படமெடுத்திருக்கிறேன் என்றாலும் DSLRல் படமாக்க விரும்பினேன். ஆனால் அருகே செல்லவே முடியாதபடி போக்குவரத்து நெரிசல். மறுநாள் காலைதான் செல்ல முடிந்தது. அரண்மனைப் படங்களை இன்னும் பதியவில்லை:)! நேரம் கிடைக்கும்போது பகிருகிறேன்.

kumar சொன்னது…

nallaiuanaru

சே. குமார் சொன்னது…

படங்கள் அருமை...
வாழ்த்துக்கள் அக்கா...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்கூல் பையன்

நன்றி லெக்ஷ்மி சரோஜா குமார்

நன்றி தனபால்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி குமார்

நன்றி சே. குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...