வெள்ளி, 12 ஏப்ரல், 2013

குமுதம் பக்தி ஸ்பெஷலில் கோலங்கள்.

குமுதம் பக்தி ஸ்பெஷலுக்காக மார்கழி மாதப் புள்ளிக் கோலங்கள் கேட்டிருந்தார்கள்.  அவை உங்கள் பார்வைக்காக இங்கே.

முதலில் விநாயகரைத் துதித்து ஆரம்பிப்போம். பக்கத்துல சங்குக் கோலம்.செட்டிநாட்டுல சங்கு ஊதித்தான் நல்லது எதையும் தொடங்குறது வழக்கம். !


அடுத்ததா புள்ளிக் கோலங்கள். நெளிநெளியா சிக்குக் கோலம் போடுறதுன்னா நம்ம மக்களுக்கு ரொம்பப் பிடிக்குமே.

தாமரை, மீனு, கத்திரிக்கா, பந்து இதெல்லாம் கலந்து ஒரு கோலத்துல. தீபக் கோலமும் புள்ளியில் போடலாம்.

அடுத்து ஒரு நெளிக்கோலமும். தாமரையும்.. புள்ளிய வச்சு சுத்திச்சுத்தி வர்றதுன்னா நமக்கு அம்புட்டு இஷ்டம்.. :) அப்புறம் ஆயிரம் தாமரை மொட்டுக்களேன்னு பாடிக்கிட்டே கோலமிடவேண்டியதுதான்.

அழகா இருக்க பெண்ணை பெண்மயில்னு சொல்வாங்க. இது கோலமயில். அது பக்கத்துல ஒரு தரைத்தாமரைக் கோலமும்.

எல்லாரும் விடியற்காலையில எழுந்து கோலம் போடுவாங்க முன்ன. இப்பவெல்லாம் இராத்திரியிலேயே வாசல் பெருக்கி தண்ணீர் தெளிச்சு கோலம் போட்டு கலரும் போட்டுட்டுப் படுத்துடுறாங்க.

விடியற்காலையில கோலம் போடக் காரணம் நமக்கு காத்துல இருக்கிற ஓசோன் கிடைக்கும்னுதான். இப்பத்தான் நாம பெட்ரோல் புகையினாலயும், ப்ரிட்ஜ் வெளிவிடுற கார்பன் மோனாக்சைடுகளாலயும் ஓசோன் லேயரையே கிழிச்சு சூரியன உள்ள உலாவ விட்டிருக்கோமே.. அதுனால எப்ப போட்டா என்ன .. முடிஞ்சபோது போடலாம். அல்லது வாசல்ல இதுக்காக விக்கிற ஸ்டிக்கரை ஒட்டிட்டா மாசக்கணக்குல கோலம் போடுற வேலை இல்ல..!

டிஸ்கி:- கோலங்களுக்காக நான் முத்துக் கோலங்கள் என்ற வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளேன். கோலங்கள் என்ற வலைத்தளத்தில் மேலும் கோலங்கள் காணலாம். 

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கோலங்கள் அருமை...

புதிய தள முகவரிக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

சே. குமார் சொன்னது…

அருமை....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி குமார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

தாரை கிட்டு சொன்னது…

கோலங்கள் அருமையாக உள்ளது.

தாரை கிட்டு சொன்னது…

கோலங்கள் அருமையாக உள்ளது.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...