சனி, 30 மார்ச், 2013

மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

பெங்களூரில்  ருஸ்தம்பாகில் இருக்கிறது மணிப்பால் ஹாஸ்பிட்டல். இது ஜெயதேவா போல இதயம் தொடர்பான மருத்துவத்துக்குப் புகழ் பெற்றது. இங்கே வைத்தியம் செய்து கொள்ள  வருபவர்கள், அவர்களின் உறவினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் தவிர அந்த ஏரியாவில் குடி இருக்கும் அனைவரும் ( ஹோட்டல் லீலா பேலஸ் இருக்கிறது. ஒரு பஃபே 1.500 ரூபாய்).


ஞாயிற்றுக் கிழமையானால் சமைப்பதே இல்லை. இங்கே படையெடுத்து விடுவார்கள்.

தரமான உணவு, அளவான விலை, ருசியும் கூட. ஆனால் நம் தென் தமிழ் நாக்குக்கு சில விஷயங்கள் ஒத்து வராது.. பொதுவா இங்கே இட்லிக்கு அரைக்காமல் உளுந்தை மட்டும் அரைத்து இட்லிக் குருணையை வாங்கிக் கரைத்து வைத்து விடுவார்கள். எனவே இட்லி புட்டுப் போல புடவே வேண்டாம். பொலபொலவெனெ இருக்கும். இரண்டு இட்லி தின்பதற்குள் ரெண்டு டம்ளர் தண்ணீரைக் காலி செய்திருப்போம்.

வடை பரவாயில்லை. அது போல தோசையும்.. சௌ சௌ பாத் என்று ஒன்று ரொம்ப பேமஸ்..அது என்னவென்றால் நம்ம ரவா உப்புமா/கிச்சடிதான். ஏதோ சௌ சௌவில் செய்வார்கள் என நான் நினைத்து ஏமாந்து வாங்கிப் பார்த்து பல்பானேன்.

ரவா கேசரி அருமை. அப்புறம் ப்ரெட்டில் செய்த வெஜ் ரோல்ஸும், பாவ் பாஜியும் டேஸ்ட். எதுவானாலும் எண்ணெயில் குளித்து எந்திரிச்சா நமக்குப் பிடிக்கும்தானே. :)

நந்தினியின் மதிய உணவில் மீன் பிரியாணி ஸ்பெஷல். என்னது மீன்ல பிரியாணியா.. ஆமாம் மீன் வாடையே அடிக்காமல் சூப்பரா இருந்துச்சு. இதில் எல்லாம்  பால் சுறா உபயோகிக்கிறாங்களான்னு தெரியல. அல்லது விரால் மீனான்னு. ஏன்னா நமக்கு வஞ்சிரம் ஒண்ணு மட்டும்தான் தெரியும்.

அத்துடன் அந்த மீன் குழம்பும், ஃபிஷ் மஞ்சூரியனும் கூட ஆஹா.. ஓஹோ..
மடிவாலாவில் நிறைய கடைகள் இருக்கின்றன. அதில் எல்லாம் கோழிகளை விதம் விதமாக வறுத்தும் பொறித்தும் வைப்பதுதான் வேலை. அதில் ஸ்டஃப்டு குல்ச்சா, ரூமாலி ரோட்டி எல்லாம் சூப்பர்.

அத விட இந்த சிக்கன் லாலி பாப்பும், சிக்கன் பெப்பர்  மசாலாவும் கூட செம டேஸ்ட்.

தங்கிடி கபாப், கல்மி கபாப் என்று கூறப்படும் இந்த சிக்கன் வறுவலுக்கு நான் அடிமை.. ஆனா என்ன ஒரே நாள்ல உப்பு எகிறிப் போயி பிபி உடம்புக்கு வெளியே கூட ஓட ஆரம்பிச்சுடும். உப்புல ஊறவைத்து செய்யிற தந்தூர் ஐட்டம் இது.

தப்பித் தவறிக்கூட ரெயில்வே ஸ்டெஷன்ல இருக்கிற கடம்பாவிலோ, ஆகாரத்திலோ எதுவும் வாங்கிடாதீங்க. எந்த ருசியும் இருக்கோ இல்லையோ  இட்லி எல்லாம் கடப்பாரையைப் போட்டு வெட்டணும். தோசை  கார்ப்பெட் மாதிரி இருக்கும்,  சாம்பார்ல எந்த ருசியும் இருக்காது. மல்லி/ புதினா சட்னி பரவாயில்லை. பிரியாணி எல்லாம் ஒரே மசாலா.. ( கோடே மசாலாவான்னு தெரியலை. ஒரு வேளை மராட்டி தரிக்காவோ என்னவோ.. வலாச்சி உசல் மாதிரி ) . மென்னியைப் பிடிக்கும்.

இது எல்லாத்தையும் விட எனக்கு பெங்களூர்ல பிடிச்ச ஐட்டம் என் ஃப்ரெண்ட் ராமலெக்ஷ்மி செய்திருந்த ரோட்டி, ஆலு சப்ஜி, காலிஃப்ளவர் மஞ்சூரியன், வெஜ் நூடுல்ஸ், தயிர்சாதம் , ஊறுகாய், குலோப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம். சொல்லும்போதே ஜொள்ளு ஊறுது இல்லையா.. ( ராமலெக்ஷ்மி பர்மிஷனோட ஒரு க்ளிக்.. ) .. எங்கே எல்லாரும் புறப்பட்டுட்டீங்க ராமலெக்ஷ்மி வீட்டுக்கா.. ஹாஹா.

அது மாதிரி அனு .. அன்னபூரணி நாராயணன் செய்திருந்த கவுனி அரிசி, இட்லி, மிளகாய் சட்னி, தேங்காய் சட்னி, ரவா வெஜ் கிச்சடி, சாம்பார், மசாலா பால் .. இதுவும் செம .. அவங்க அம்மா இருந்ததால ஃபோட்டோ எடுக்கல.. ஹிஹி.. இது மாதிரி புதுசா போற இடத்துல சொந்தக்காரங்கவீடு இல்லாட்டி நண்பர்கள் வீட்டில் சாப்பிடும் உணவின் ருசியே தனிதான்.

5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படங்களே பசியைத் தூண்டுகின்றன...!!!

மாதேவி சொன்னது…

சுவையான உணவுகள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

செளசெள பாத்:)! பலரும் அப்படி நினைத்து ஏமாறுவார்கள். நம்ம ஊரில் எப்படி இட்லி, பொங்கல், வடை காலை உணவுக்கு ஃபேமஸோ, அது போல கர்நாடகாவில் சொளசொள பாத்; கேசரி பாத்!

தோசைக்கு நல்லா சொன்னீங்க உதாரணம்:)!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி மாதேவி

நன்றி ராமலெக்ஷ்மி:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...